கம்ப்யூட்டர் தொடர்பான வார்த்தைகள்
கணினியில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் ஒவ்வொன்றையும், கணினியின் பயன்பாட்டுக்கு முன்பு எப்படி பயன்படுத்தினோம், எதற்காகப் பயன்படுத்தினோம் என்பதை குறிக்கும் வகையில் ஒரு வினோத , வேடிக்கையான பட்டியலை இங்கு கொடுத்திருக்கிறோம். ஒவ்வொரு வார்த்தைக்கும் தனிப்பட்ட விளக்கத்துடன் இந்த பட்டியல் உள்ளது. காலம் மட்டுமல்ல.. கணியியும் நம்மை மாற்றத்தான் செய்கிறது. உதாரணமாக அப்ளிகேஷன் என்ற வார்த்தையைக் கேட்டாலே கணினித் தொடர்புடைய தகவல்களைத்தான் சொல்கிறார்கள் என்று எண்ணும் அளவிற்கு இப்போது கணினியின் ஆளுமை உள்ளது. அதே அப்ளிகேஷன் என்ற வார்த்தைக்கு விண்ணப்பம் என்ற பொருளையே கணினி பயன்பாட்டுக்கு முன்பு பயன்படுத்தினோம். அன்றும் இன்றும் அப்ளிகேஷன் (Application) என்பது வேலை தேடுவதற்கான விண்ணப்பம். இன்று கம்ப்யூட்டரில் குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள இயங்கும் புரோகிராம். அன்று குப்பைகளைத் தான் கம்ப்ரஸ் (compress) செய்வார்கள். இன்று எளிதாகத் தகவல்களைத் தூக்கிச் செல்ல கம்ப்ரஸ் செய்கிறோம். எட்டுக்கால் பூச்சியில் மாளிகை தான் அன்று வெப் (Web) இன்று உலகைச் சுற்றி பின்னப்பட்ட டிஜிட்டல் வலையே வெப் (Digital WEB) எலி (Rat)...