Posts

Showing posts from November, 2013

ஹூவாய் விண்டோஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு!

Image
சீனாவின் மிகப் பிரபலமான எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் ஹூவாய். இந்நிறுவனம் தனது புத்தம் புதிய Ascend வகை ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளது. Ascend W1 என்ற ஸ்மார்ட்போன் வெற்றியைத்தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக Ascend W2 என்ற புதிய பதிப்பு ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இதில் அடங்கியுள்ள சிறப்பம்சங்கள்: 512 MB RAm 1.4 GHz Dual core பிராசசர் 5 மெகா பின்புற பிக்சல் கேமரா 8 ஜிபி உள்ளக நினைவகம் 1700 mAh பேட்டரி 7 ஜிபி அளவிற்கு ஸ்கைடிரைவ் மேக்கணினி சேமிப்பகம் போன்றவை அடங்கியுள்ளது. இச்சிறப்புமிக்க ஸ்மார்ட்போன் தற்பொழுது ரஷ்யா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் கிடைக்கிறது. இந்தியாவில் இச்சிறப்பு மிக்க ஸ்மார்ட் போன் வெகு விரைவில் கிடைக்கும் என இந்நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Specifications of Huwai Ascend W2 Smartphone:  4 Inch Super-Sensitive Touch Screen Display 1.4 GHz Qualcomm Snapdragon MSM8230 Dual Core Processor 512 MB RAM 8GB On-Board Storage 5MP Rear Camera Windows Phone 8 1700 mAh Battery The Huawei Ascend W2 is a Windows Phone 8-based smartphone that offers descent specs, such

கூகிள் தேடலில் பயனுள்ள வசதிகள்

Image
இணையம் என்பது மிகப் பெரிய பரந்து விரிந்த கடலைப் போன்றது. அதில் நீங்கள் பயணிக்க வேண்டுமானால், இணையத்திற்கு நீங்கள் பரிச்சயமாக வேண்டுமானால் நிச்சயம் சர்ச் என்ஜினை பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.  இணையத்தில் கிடைக்கும் சர்ச் என்ஜினில் முதன்மையானது கூகுள் சர்ச் என்ஜின். உலகத்தில் உள்ள மில்லியன் கணக்கான பயனர்கள் கூகிள் சர்ச் என்ஜினைத்தான் பயன்படுத்துகிறார்கள்.  காரணம் கூகிளுக்கு நிகர் கூகிள். அது தரும் பல்வேறு வசதிகளுடன், உடனடித் தகவல்களைத் திரட்டித்தரும் வேகமும் அபரிதமானது. மேலும் நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம், நொடிக்கு நொடி கூகிள் எர்ச் என்ஜினை விரிவாக்கிக்கொண்டே உள்ளனர். அதில் உள்ள தொழில்நுட்பத்தைக் காலத்திற்கேற்றவாறு அப்டேட் செய்துகொண்டே உள்ளனர்.  அவ்வாறான கூகிள் சர்ச் என்ஜின் தளமானது நமக்கு கூடுதலான வசதிகளையும் தருகிறது. குறிப்பிட்ட துறைத் தொடர்பாக மட்டுமே தேடுவதற்கான தேடியந்திர வசதியையும் நமக்கு கொடுக்கிறது. அவ்வாறான வசதிகளுடன் கூடிய தளங்களையும் பார்ப்போம்.  நியூஸ் கூகிள் டாட் காம். உங்களுக்கு உடனடி  செய்திகள் வேண்டுமெனில், நீங்கள் இந்த தளத்தை நாடலாம். இதில் உலகத்தில் உள்ள

அதிக இன்டர்னல் ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போன் !

Image
அதிக இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதிகொண்ட உலகில் முதல் ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ள மெய்சூ நிறுவனம்.  சீனா நிறுவனமான இது தற்பொழுது சீனாவில் இப்போனை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. இதில் 128 GB internal memory capacity அடங்கியுள்ளது.  சீன மொபைல் பயனர்களுக்கு இது பொருத்தமாக இருக்கும். சைனா மொபைல்களை விரும்பும் இந்திய நண்பர்களுக்கும் இது பிடித்தமான ஒன்றாக இருக்கும்.  இப்போனில் உள்ள சிறப்பம்சங்கள் (Specifications of 128GB Meizu MX3) 5.1 அங்குல திரையைகொண்டிருக்கிறது. திரையின் ரெசொல்யூசன் 1800x1080 pixel ஆகும். 2GB RAM, Exynos 5 Octa processor, 8 மெகா பிக்சல் கேமரா, 2 மெகா பிக்சல் முன்புற கேமரா, NFSC, டூயல் பேண்ட் வைபை, புளூடூத் 4.0 மற்றும் ஜிபிஎஸ் வசதிகளும் அடங்கியுள்ளது.  Meizu MX3 128GB Specifications:  5.1-inch 1800x1080p display Exynos 5 Octa processor 2GB of RAM 8MP rear camera 2MP front camera NFC Dual-band Wi-Fi Bluetooth 4.0  GPS நன்றி.  Tags: android, smartphone, specifications, mobile specifications, tech news, Meizu MX3

கூகிள் எஜூகேஷன் ஆப்ஸ் !

Image
மாணவர்களுக்கான ஆண்ட்ராய்ட் கல்வி அப்ளிகேஷனை வெளியிட்டது கூகிள்..! கூகிள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் செயல்படக்கூடிய அப்ளிகேஷன்களை, பயனர்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கிய இணையதளம் கூகிள் பிளே ஸ்டோர் (Google Play Store).  இந்த கூகிள் பிளே ஸ்டோரில் இலவசமாக பயனுள்ள அப்ளிகேஷன்கள்  பல கிடைக்கின்றன. கட்டணம் செலுத்தி பெறக்கூடிய ஆப்களும் உண்டு.  70% இலவச அப்ளிகேஷன்களே இங்கு உள்ளன.  அந்த வகையில் கூகிள் தற்பொழுது மாணவர்களுக்கு பயன்படும் வகையில் Education Apps களை வெளியிட்டுள்ளது.  இச்சேவைக்கு Google Play for Education என பெயரிட்டுள்ளது.  இனி இந்த சேவையின் மூலம் வெளியிடப்படும் கல்வித் தொடர்பான அப்ளிகேஷன்களை இலவசமாக மாணவர்கள் பெற முடியும். ஒரு சிலவற்றை கட்டணம் செலுத்தியும் பெறலாம்.  தங்களது அலைபேசி, டேப்ளட் போன்ற ஆண்ட்ராய்ட் சாதனங்களில் (like tablet, smartphone) இந்த அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். அத்தோடு அந்த அப்ளிகேஷன்களை Cloud முறையில் அவர்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்துகொள்ளவும் முடியும்.  கூகிள் ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கான (Android Devices) கல்விச் சேவை அ

வயர்லஸ் நெட்வொர்க் கண்காணிப்பு மென்பொருள்

Image
wireless network watcher for wifi internet users வணக்கம் நண்பர்களே...! இன்டர்நெட் பயன்படுத்தாதவர்களே இன்று இல்லை என்ற காலம் இது. இன்டர்நெட் வசதியை ஏற்படுத்திக்கொள்ள சில வழிமுறைகள் இருப்பினும், தற்காலத்தில் கம்பியில்லா இணைப்பு முறையான Wi-Fi இணைய முறையையே பலரும் பயன்படுத்துகிறார்கள். வைஃபை என்பது கம்பியில்லாத இணைய இணைப்பு என்பது உங்களுக்குத் தெரியும். வைபை மூலம் இணைய இணைப்பைப் பயன்படுத்துபவர்களின் கணக்கை அணுகி, தொடர்பே இல்லாத வேறு நபர்களும் உங்களின் இணைய இணைப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும். 1. வைபை-லைபை ஒரு பார்வை இவ்வாறு மற்றவர்கள் உங்கள் வைஃபை இணைய இணைப்பில் திருட்டுத்தனமாக அணுகிப் பயன்படுத்த முக்கிய காரணமே பாஸ்வேர்ட் கொடுக்காமல், கான்பிகரேசன் இல்லாமல் சுலபமாக இணைய இணைப்பை ஏற்படுத்திக்கொள்வவதுதான். பெரும்பாலானவர்கள் பாஸ்வேர்ட் கொடுத்து இணைய இணைப்பை ஏற்படுத்துவது சிரமமாக இருப்பதால், நேரடியான இணைப்பை ஏற்படுத்துவதையே விரும்புகின்றனர்.  அவ்வாறு பாஸ்வேர்ட் கொடுக்காமல், இணைய இணைப்பை ஏற்படுத்தும் வைஃபை இன்டர்நெட் கணக்கை மற்றவர்களும் எளிதாக நுழைய முடிகிறது. வைபை நெட்வொர்கில் உள்ள மிகப்பெரிய க

வைஃபை (WiFi) தெரியும்.அதென்ன லைஃபை (LiFi) ?

Image
லைபை இன்டர்நெட்டுக்கான புதிய வசதி..! வைபை (Wi-Fi): வைFபை என்பது கம்பியில்லா முறையில் இணைய இணைப்பை ஏற்படுத்தும் ஒரு தொழில்நுட்பம் என்பது நமக்குத் தெரியும். தற்காலத்தில் மிகப் பலர் இத்தொழில்நுட்ப அடிப்படையிலேயே இன்டர்நெட்டைப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் ஒரு வீட்டில் உள்ள பலரும் ஒரே சமயத்தில் பல்வேறு சாதனங்களின் மூலம் இன்டர்நெட் இணைப்பை ( Internet connection ) பெற முடியும். உதாரணமாக ஒரு குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருவர் ஆன்ட்ராய்ட் மொபைல் வைத்திருக்கிறார்...மற்றொருவரோ லேப்டாப் வைத்திருக்கிறார்... அடுத்தவரோ டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் (Desktop Computer) பயன்படுத்துகிறார்.  இன்னொருவர் தனக்குப் பிடித்த டேப் (Tablet PC) வைத்திருக்கிறார். இவர்களுக்கு எல்லாம் ஒரே சமயத்தில் இணையத்தைப் பயன்படுத்த வேண்டுமெனில் நிச்சயம் வைபை இன்டர்நெட் கனெக்சன் வைத்திருந்தால் மட்டுமே சாத்தியம்.. வயர் மூலம் ஒவ்வொரு சாதனத்திலும் இணைய இணைப்பை ஏற்படுதுவது என்பது இயலாத காரியம். வைபை நெட்வொர்க் ( Wi-Fi network ) இருந்தால் வீட்டில் எந்த பகுதியிலிருந்தும் வயர்லெஸ் மூலம் இணைய இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஒரே வைபை மோ

கணினியில் புரோகிராம்களை வேகமாக திறக்க

Image
ஒவ்வொரு முறையும் நாம் கணினியில் பணியாற்றி கொண்டிருக்கும்பொழுது, வேறு தேவைகளுக்காக மற்ற புரோகிராம்களையும் திறந்திடுவோம்.  அதுபோன்ற சமயங்களில் ஸ்டாரட் பட்டனை இயக்கி, All Programs சென்று அந்த புரோகிராமைப் பெற்றிடுவோம்.  அல்லது மை கம்ப்யூட்டர் சென்று, அங்குள்ள புரோகிராம் ஒன்றினை திறந்திடுவோம். இப்படி வேலை செய்யும் பக்கத்திலிருந்து, புதியதாக ஒரு புரோகிராமினைத் திறந்திட சுற்றுவழிகளைப் பயன்படுத்திடுவோம். அவ்வாறில்லாமல் நினைத்த உடனேயே ஒரு புரோகிராமினைத் திறந்திட ஒரு மென்பொருள் நமக்கு உதவுகிறது.  மென்பொருளின் பெயர்: லான்சி (Launchy) இந்த மென்பொருளினை கணினியில் நிறுவிக்கொண்டால் போதுமானது.  மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய சுட்டி:  Launchy மென்பொருளைத்தரவிறக்கம் செய்து நிறுவியவுடன், System Tray யினுள் வந்து அமர்ந்துகொள்ளும்.  பிறகு Alt+Enter அழுத்தினால் படத்தில் உள்ளதுபோல உங்களுக்கு புதிய விண்டோ தோன்றும்.  அதில் உங்களுக்கு வேண்டிய மென்பொருளின் பெயரை தட்டச்சிடும்பொழுது அந்த் மென்பொருளை வரிசைப்படுத்திக் காட்டும். தேவையான புரோகிராமினை தேர்வு செய்து என்டர் கொடுப்பதன் மூலம் அப்புரோகிராம் உடனடியாக திறந்து

சாம்சங் மொபைல் சீக்ரட் கோட்ஸ் !

Image
ஒவ்வொரு நிறுவன மொபைல்களுக்கும் அதில் உள்ள பயன்பாடுகள் மற்றும் அதில் இடம்பெற்றுள்ள சிறப்பு பகுதிகளின் தன்மை மற்றும் வசதிகளை அறிய குறிப்பிட்ட குறியீடுகள் உள்ளன. அந்த வகையில் சாம்சங் நிறுவன மொபைலில் உள்ள குறிப்பிட்ட தகவல்களைத் தெரிந்துகொள்ளப் பயன்படும் சீக்ரெட் குறியீடுகளைப் இங்கு பார்ப்போம்.  சாம்சங் மொபைலின் சாப்ட்வேர் பதிப்பு இன்னதென அறிய ரகசிய குறியீடு *#9999# ஆகும். அதே போல IMEI Number அறிய *#06#  Serial Number அறிய *#0001# Battery Status மற்றும் Memory capacity *#9998*246# Debug screen: *#9998*324# – *#8999*324# LCD kontrast: *#9998*523# Vibration test: *#9998*842# – *#8999*842# Alarm beeper – Ringtone test : *#9998*289# – *#8999*289# Smiley: *#9125# Software version: *#0837# Display contrast: *#0523# – *#8999*523# Battery info: *#0228# or *#8999*228# Display storage capacity: *#8999*636# Display SIM card information: *#8999*778# Show date and alarm clock: *#8999*782# The display during warning: *#8999*786# Samsung hardware version: *#8999*837# Show network information: *#8999*638#

பாட்டு எழுத சாப்ட்வேர் ! (Song Making Software)

Image
வைரமுத்து மகன் மதன் கார்க்கி இப்போது சினிமாவில் மிக பிரலமான பாடலாசிரியர்.  சிறிய படம் பெரிய படம் எதுவாக இருந்தாலும் பாடல் எழுதக்கூடியவர்.  இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்காமல் கொடுப்பதை மனமுவந்து ஏற்றுக் கொண்டு பாடல் எழுதுவார்.  அடிப்படையில் மதன் கார்க்கி ஒரு கம்ப்யூட்டர் பொறியாளர் (Computer Engineer). அண்ணா பல்கலை கழகத்தில் (Anna University) உதவி பேராசிரியராக பணியாற்றிவர். தற்போது வேலையை ராஜினாமா செய்து விட்டு முழுநேர பாடலாசிரியராகி விட்டார். மதன் கார்க்கி ஏற்கெனவே தனது கார்க்கி ரிசர்ச் செண்டர் (Research) மூலம் தமிழ் அகராதி (Tamil Dictionary) , ஒலிங்கோ என்னும் டிரான்ஸ்லேட்டர் (Olingo Translator)), சர்ச் பிலிம் சாங் (Search film song) போன்ற மென்பொருளை உருவாக்கி அதை பயன்பாட்டுக்கு விட்டுள்ளார்.  இப்போது ஒரு திரைப்படத்தில் பாடல் வரும் சூழ்நிலையை பதிவேற்றம் செய்தால் கம்ப்யூட்டரே பாடல் எழுதித்தரும் மென்பொருளை (Song making software) உருவாக்கி இருக்கிறார். இதுகுறித்து மதன் கார்க்கி கூறியிருப்பதாவது: சினிமா பாட்டு கவிஞனின் ஆன்மாவிலிருந்து எழுதப்படுவதல்ல. கதை, காட்சி, மெட்டுக்கு ( Story, S

ஆப்பிள் iPhone 7 பயன்படுத்திட டிப்ஸ் !

Image
ஆப்பிள் ஐபோன் விலை அதிகம். தரம் உயர்தரம். அதிக விலை கொடுத்து வாங்கிய iPhone 7 பயன்படுத்துவதில் கூட சில சிக்கல் உண்டு. சில செட்டிங்ஸ்களை செய்வதன் மூலம் அந்த பிரச்னைகளை சுலபமாக தீர்த்திடலாம். " ஆப்பிள் ஐபோன் 7 " பயன்படுத்த சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. பின்பற்றினால் Apple iPhone 7 பயன்படுத்துவது எளிது. 1. டெக்ஸ் மெனுவை போல்டாக்குல் (Make the menu text bolder) புதிய iOS இயக்க முறைத் தோற்றமானது பார்ப்பதற்கு ஓரளவிற்கு சுமாராக இருக்கும். அதை சூப்பராக மாற்ற கீழ்கண்ட செட்டிங்ஸ் செய்திடுங்கள். அப்படி செய்வதன் மூலம் System Menu மற்றும் Features களை பெரியதாக மாற்றிடலாம். ஐபோனில்,  Settings என்பதை தட்டுங்கள்.. General என்பதை தட்டுங்கள்... Accessibility என்பதை தட்டுங்கள்.. Bold Text என்பதை உயிர்ப்பியுங்கள்... அவ்வளவுதான். இப்பொழுது உங்களது ஆப்பிள் சாதனம் Restart ஆகும்.  பிறகு உங்களது ஆப்பிள் போனில் features மற்றும் text மெனுக்கள் நன்றாக தெளிவாக காட்சியளிக்கும். 2. வேண்டாத எண்களை பிளாக் செய்வது (Block phone calls frm idividual numbers) குறிப்பிட்ட போன் எண்களிலிருந்து வரும் அ

5G இன்டர்நெட் டெக்னாலஜி !

Image
இது இன்டர்நெட் உலகம். பொதுமக்கள் பயன்படுத்தும் சாதாரண கையடக்கத் தொலைபேசி முதல் மேசை கணினி வரை அனைத்திலும் இணைய இணைப்பு இல்லாமல் இருப்பதில்லை. இணையத்தோடு மக்கள் பின்னி பிணைந்துவிட்டனர். நேரடியாக, துரித வேகத்துடன் தகவல் தொடர்புக்குப் பயன்படுகிறது இணையம் மற்றும் அதனைச் சார்ந்த சாதனங்கள். கணினியும், இணையமும் சேர்ந்த பிறகு இந்த உலகம் உள்ளங்கையில் உருண்டோட விட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பரிமாணங்கள்.... மிகப்பெரியபரிணாம வளர்ச்சிகள்... நிமிடத்திற்கு நிமிடம்.. நொடிக்கு நொடி.. என புதிய வசதிகளுடன் கூடிய நவீன தொழில்நுட்பங்கள், நுட்பச் சாதனங்கள் வளர்ந்து கொண்டே உள்ளன. உலகை இணைக்கும் இணைய தொழில்நுட்பத்திலும் - Internet Technology  அதே வேகம்.. அதே வளர்ச்சி.... தகவல்களைப் பரிமாறப்படும் வேகத்தை அதிகமாக்கி... அதிகமாக்கி மிகப்பெரிய புரட்சியையே ஏற்படுத்திவிட்டார்கள்.. ஆரம்பத்தில் இணையத்தின் வேகம் ஆமைபோல மிக மெதுவாக இருந்தது.. அதன் பிறகு சிறிது சிறிதாக வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. நடைமுறையில் இணைய வேகம் ஜெட்வேகத்தில் பயனித்துக்கொண்டிருக்கிறது.  தற்பொழுது அதைவிட...அதைவிட... அதைவிட.... என்று மேலும் ம

கம்ப்யூட்டர் கீபோர்ட் டெக்னாலஜி !

Image
கணினி புது நுட்பம் கம்ப்யூட்டரில் தரவுகள் உள்ளீடு செய்வதற்கு மிக அவசியம் கீபோர்ட் . வழக்கமான கீபோர்டில் அல்ப்பெட்டிக் (Alphabet) மற்றும் நியூமரிக் (Numeric) விசைகள் மற்றும் முக்கியமான குறியீடுகள் இருந்தன. தொழில்நுட்பம் வளர வளர கீபோர்டில் பல்வேறு நுட்பங்கள் புகுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன.  அவ்வாறு வெளிவந்துள்ள பல விதமான கீபோர்ட்கள் (Keyboards) மற்றும் அதில் உள்ள  சிறப்பு வசதிகள் என்னென்ன? என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம். நீரில் நனைந்தாலும் பயன்படும் கீபோர்ட், பேப்பரைப் போல சுருட்டி கையோடு எடுத்துச்செல்லும் வகையிலமைந்த கீபோர்ட் (Smart Key Board) என பலவகை கீபோர்ட்கள் வெளிந்துள்ளது. தற்பொழுது வந்துள்ள தொடுதிரை தொழில்நுட்பத்தின் பயனாக, திரையில் உள்ள எழுத்துக்களை தொடுவதன் மூலம் உள்ளீடுகளை (input) கொடுக்க முடியும். இந்த வசதியின் மூலம் மிக விரைவாக தட்டச்சிடுவது சாத்தியமாகியுள்ளது.  இதன் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக வெற்றிடத்தில் கை விரல்களை அசைப்பதன் மூலம் திரையில் தேவையான இன்புட் கொடுக்க முடியும். DexType என்ற இப்புதிய தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்காலத்தில் கொண்டு வர

குறைந்த விலை டபுள் சிம் மொபைல்கள் !

Image
ஒரு செல்போனில் ஒரு சிம்கார்ட் மட்டும் பயன்படுத்தி காலம் மலையேறிவிட்டது. சிறிய ரக விலை குறைந்த போனில் கூட தற்பொழுது இரண்டு சிம்கார்டுகளை பயன்படுத்தும் வசதி வந்துவிட்டது. இதனால் தற்பொழுது Single SIM மொபைல் போன்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. DUAL SIM MOBILE- கள் வெளியீட்டிற்கு பிறகு, சிங்கிள் சிம் மொபைல்கள் வெளியிடுவதும் குறைக்கப்பட்டுவிட்டது. மிகக் குறைந்த விலையில் டபுள்சிம் மொபைல்கள் இப்பொழுது கிடைக்கின்றன. மிகப் பிரபலமான செல்போன் நிறுவனங்கள், குறைந்த விலையில் டபுள் சிம் மொபைல்களை தயாரித்து வெளியிடுகின்றனர். குறைந்த விலையில் டபுள் சிம் மொபைல்கள்: நோக்கியா 108 : 1.8 அங்குல LCD Display கொண்டுள்ள இப்போனில், ஜிபிஆர்எஸ், ப்ளூடூத், மைக்ரோயூஎஸ்பி, 950mAh battery  பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்றுள்ள இப்போன் டூயல் சிம் வசதியை கொண்டுள்ளது. இதன் விலை ரூபாய் 2,036 மட்டுமே. specification of Nokia 108 double SIM mobile:  1.8 inches LCD display  0.3MP of rear camera 500 entries phonebook DualSIM GPRS Bluetooth microUSB connectivity  950mAh Li-ion battery நோக்கியா 101:  எப

இந்திய பெண்களின் ஸ்மார்ட்போன் மோகம்..!

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் ஆண்கள் மட்டும்தான் என்று நினைத்தால் அது தவறு. பல்வேறு வித வயதுடைய பெண்களும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை (smartphone users) பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக மிக அதிகம். அதிலும் பெண்கள் மிகவும் விரும்பி பயன்படுத்துகிறார்கள். அவர்கள் விரும்பி பயன்படுத்தும் ஒரு அலைபேசி - தகவல் தொடர்பு சாதனம் ஒன்று உண்டென்றால் அது ஸ்மார்ட்போன்தான். வகை வகையான ஸ்மார்ட்போன்கள்: (Variety of Smartphones) ஸ்மார்ட் போன்கள் என்றதுமே நமக்கு நினைவுக்கு வரும் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாகக கொண்ட ஸ்மார்ட்போன்கள். எளிமையானதும், அதிக வசதிகள் கொண்டதும், லட்சக்கணக்கான இலவச அப்ளிகேஷன்களைப் பெற்றிருப்பதும்தான் ஆண்ட்ராய்ட் போன்கள் பிரபலமாக காரணங்கள். தற்பொழுது இந்தியாவில் நூற்றைம்பது கோடி ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் பெண்கள் மட்டும் மூன்றில் ஒரு பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகவிலையுள்ள ஆப்பிள் போன்கள் (Apple iPhone) மட்டும் இந்தியாவில் ஆறுமடங்கு அளவிற்கு விற்பனையை அதிகரித்துள்ளது என்றால் குறைந்த விலை பிராண

YouTube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

Image
யூடியூப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. கூகிள் வழங்கும் இலவச வீடியோ சேவை இணையதளம்தான் யூடீடூப். பல மில்லியன் வீடியோக்கள் அதில் பதிவேற்றப்பட்டுள்ளது. தினந்தோறும் பல லட்சக் கணக்கான புதிய வீடியோக்கள் அதில் பதிவேற்றம் செய்யபடுகிறது. அவ்வாறு பதிவேற்றம் செய்திடும் வீடியோக்களை உலகின் அனைத்து பகுதிகளில் உள்ளவர்களும் பார்வையிட முடியும். அவ்வாறு அதிக நபர்களால் பார்க்கப்படும் வீடியோ, Trending ஆகி, மிக பிரபலமாகிவிடும். அவ்வாறு பதியப்படும் வீடியோக்களின் மூலம் பணம் சம்பாதிக்கும் வசதியை யூடியூப் கொண்டுள்ளது. அதில் யார் வேண்டுமானாலும் கணக்குத் துவங்கி, வீடியோ அப்லோட் செய்திடலாம். அதுபோல நீங்களும் யூட்யூப்பில் வீடியோ பதிவேற்றி அதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். யூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பது சுலபம். தேவை ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் மற்றும் பயனுள்ள, பொழுதுபோக்கு அம்சம் நிறைய வீடியோக்கள். YouTube ல் வீடியோ சேனல் ஒன்றினை உருவாக்கிட வேண்டுமென்றால் கட்டாயம் ஜிமெயில் - இமெயில் உங்களிடத்தில் இருந்திட வேண்டும். உங்களிடத்தில் ஜிமெயில் அக்கவுண்ட் இல்லையென்றால், அதை எப்படி உருவாக்குவது என தெரிந்துகொள்ள இந்த

ஸ்கிரீன் ரெக்கார்டிங் மூலம் பணம் சம்பாதிக்க

Image
ஸ்கிரீன் ரெக்கார்டிங்:  நாம் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் நடப்பவற்றை காணொளியாக பதிவு செய்வதுதான் ஸ்கிரீன் ரெக்கார்டிங் . கம்ப்யூட்டரில் மட்டுமல்ல.. ஸ்மார்ட்போன்களில் நாம் செய்வதை அப்படியே ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்ய முடியும்.  அப்படி ஸ்கிரீனில் நடந்தவற்றை வீடியோவாக பதிவு செய்த தை யூடீயூப் போன்ற வீடியோ ஸ்ட்ரீமிங் இணையதளங்களில் அப்லோட் செய்வதன் வழியாக பணம் சம்பாதிக்கலாம். டுடோரியல்:  ஒரு இணையதளத்தை எப்படி பயன்படுத்துவதை என்பதை காட்ட, அதில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்களை அப்படியே ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்து டுடோரியல் வீடியோவாக மாற்றலாம்.  உ.ம். இணையம் மூலம் மின்சாரம் கட்டணம் செலுத்துவது எப்படி? என்பதை அப்படியே ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்து பதிவேற்றலாம்.  இணைய செயல்பாடுகளை ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்து பதிவேற்றுவதன் மூலம், அவைகளைப் பற்றிய தெரியாத பலர் அதைக் கற்றுக்கொள்ள வழி உண்டாகும். அதிக பார்வையாளர்கள் பெறும் வீடியோ கணிசமான விளம்பர வருவாயை ஈட்டித் தரும்.  ஸ்கிரீன் ரெக்கார்டிங் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ இதே போல நீங்களும் உங்களுக்குத் தெரிந்த விஷயங்களை மற்றவங்களுக்கு கற்றுக்கொடுக்க, உங்களோட கம்ப்

ஆப்பிள் போனிற்கான VLC மீடியா பிளேயர் !

Image
கம்ப்யூட்டரில் வீடியோக்களை ப்ளே செய்ய பயன்படுபவை வீடியோ பிளேயர்கள் . விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் Windows Media Player  டீபால்டாக கொடுக்கப்பட்டிருக்கும். அதில்அதிக வசதிகள் இருப்பதில்லை. அதனால் கூடுதலான வசதிகளைப் பெறுவதற்கு 3r party சாப்ட்வேர்களை டவுன்லோட் செய்து பயன்படுக்கின்றனர். அவற்றில் சிறந்த மீடியா பிளேயர் VLC Media Player . 1.  மௌசை தொடாமலேயே VLC Media Player இயக்கலாம்..!! முதலில் சாதாரண பதிப்பாக வெளிவந்த VLC மீடியா பிளேயர், அடுத்தடுத்த பதிப்புகளில் புதிய வசதிகளுடன் வெளிவந்தது.   கம்ப்யூட்டர், டேப்ளட் பிசி, ஆண்ட்ராய்ட் மொபைல் என இப்போது உள்ள அனைத்து லேட்டஸ்ட் சாதனங்களிலும் பயன்படும் வி.எல்.சி வீடியோ பிளேயர்கள் வந்துவிட்டன. இதையும் படிங்க :  VLC media player -ல் உள்ளிருக்கும் ரகசியங்கள்...!! இருப்பினும் ஒரு சில காரணங்களினால் iPhone, iPod சாதனங்களில் இருந்து வி.எல்.சி நீக்கப்பட்டது. இதனால் ஆப்பிளின் ஸ்மார்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் VLC Video Player - ஐ பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது.  தற்பொழுது வி.எல்.சி வீடியோ பிளேயரில் புது டெக்னிக் பயன்படுத்தி இருப்பதால் மீண்டும் ஐபோட