5G இன்டர்நெட் டெக்னாலஜி !

இது இன்டர்நெட் உலகம். பொதுமக்கள் பயன்படுத்தும் சாதாரண கையடக்கத் தொலைபேசி முதல் மேசை கணினி வரை அனைத்திலும் இணைய இணைப்பு இல்லாமல் இருப்பதில்லை.

இணையத்தோடு மக்கள் பின்னி பிணைந்துவிட்டனர். நேரடியாக, துரித வேகத்துடன் தகவல் தொடர்புக்குப் பயன்படுகிறது இணையம் மற்றும் அதனைச் சார்ந்த சாதனங்கள்.

கணினியும், இணையமும் சேர்ந்த பிறகு இந்த உலகம் உள்ளங்கையில் உருண்டோட விட்டது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பரிமாணங்கள்.... மிகப்பெரியபரிணாம வளர்ச்சிகள்...

நிமிடத்திற்கு நிமிடம்.. நொடிக்கு நொடி.. என புதிய வசதிகளுடன் கூடிய நவீன தொழில்நுட்பங்கள், நுட்பச் சாதனங்கள் வளர்ந்து கொண்டே உள்ளன.

5g technology coming very soon


உலகை இணைக்கும் இணைய தொழில்நுட்பத்திலும் - Internet Technology அதே வேகம்.. அதே வளர்ச்சி....

தகவல்களைப் பரிமாறப்படும் வேகத்தை அதிகமாக்கி... அதிகமாக்கி மிகப்பெரிய புரட்சியையே ஏற்படுத்திவிட்டார்கள்..

ஆரம்பத்தில் இணையத்தின் வேகம் ஆமைபோல மிக மெதுவாக இருந்தது.. அதன் பிறகு சிறிது சிறிதாக வேகம் அதிகரிக்கத் தொடங்கியது.

நடைமுறையில் இணைய வேகம் ஜெட்வேகத்தில் பயனித்துக்கொண்டிருக்கிறது. 

தற்பொழுது அதைவிட...அதைவிட... அதைவிட.... என்று மேலும் மேலும் தகவல் பரிமாறப்படும் வேகம் (Internet Data Transfer Speed) மைக்ரோ செகண்ட் வேகத்தில் பயணிக்கிறது. 

ஒவ்வொரு  புதிய அடுத்தக்கட்ட நகர்விற்கும் இரண்டாம் தலைமுறை (2nd Generation), மூன்றாம் தலைமுறை (3rd Generation), நான்காம் தலைமுறைக்கும் (4th Generation)என பெயரிட்டுள்ளனர். இவற்றை  2G, 3G, 4G, என சுருக்கமாக அழைக்கின்றனர். 

G என்பது Generation என்பதைக் குறிக்கிறது. மூன்றாம் தலைமுறை வலையமைப்பே- 3G முற்றிலும் உலகெங்கும் பரவாத நிலையில் அதனுடைய அடுத்தக்கட்ட படியான 4G  நெட்வொர்க்கும் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.

தற்பொழுது 5G வலையமைப்பும் ஆய்வில் உள்ளது.  அதற்கான நடவடிக்கைகளை எடுக்கத்தொடங்கிவிட்டது Huawei நிறுவனம். இந்த வலையமைப்பின் ஆராய்ச்சிக்காக ஆறு நூறு மில்லியன் டாலர் செலவிட தயாராகி வருகிறது ஹூவாய் நிறுவனம். 

இதற்கு முன்பே சாம்சங் நிறுவனம் 5G கம்பியில்லா நுட்பத்தை சோதனை செய்து, அதில் வெற்றி பெற்ற அறிவித்திருந்தது.

இந்த புதிய 5G தொழில்நுட்பத்தின் மூலம் 2 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் 1 Giga Bye டேட்டா  1 செகண்ட்டுக்குள் பறிமாறப்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக சாம்சங் அறிவித்திருந்தது. 

இனி கண்ணிமைக்கும் நேரத்தில் மிக பெரிய DATA - டேட்டாக்களை பரிமாறிக்கொள்ள முடியும். இவ்வளவு வேகத்தில் இயங்கும் இணையத்தில் Games, Ultra HD Real time Streaming போன்றவைகளை எந்த ஒரு தங்குதடையில்லாமல் பார்க்க முடியும். Loading பிரச்னையே வராது.

Tags: 3G, 4G, 5G, 2G, தொழில்நுட்பச் செய்திகள், தொழில்நுட்ம், technology, networking technology, latest networking technology, 5G technology. 5G Internet Technology.

Comments

Popular posts from this blog

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

ஆண்ட்ராய்ட் விட்ஜெட் - சில பயனுள்ள தகவல்கள்

வடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்