Posts

Showing posts from November, 2019

இந்தி படங்களை விஞ்சும் தமிழ் சினிமா

Image
இப்பொழுதெல்லாம் இந்திப் படங்களைக் காட்டிலும், தென்னிந்திய திரைப்படங்கள் வசூலிலும், தரத்திலும் காட்டடி அடிக்கிறது. சமீபகாலமாக தென்னிந்திய சினிமாத்துறை, தரத்திலும், வசூல் சாதனையிலும் இந்தி படங்களை விட, தரமான படங்களை தந்து நிமிர்ந்து நிற்கிறது. குறிப்பாக பிரபாஸ் நடித்த பாகுபலி, சாஹோ போன்ற தெலுங்கு படங்களும், தமிழில் ரஜினிகாந்த் நடித்த `பேட்ட', விஜய் நடித்த `பிகில்,' அஜித் நடித்த `விஸ்வாசம்,' `நேர்கொண்ட பார்வை' ஆகிய படங்களும், இந்தி படங்களுக்கு நிகராகவும், அதைவிட கூடுதலாகவும் வசூல் சாதனை புரிந்து, தென்னிந்திய சினிமாவுக்கு புகழை தேடி தந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா ஸ்டார்களும் உலக அளவில் அதிக புகழ்பெற்று வருகின்றனர். அவர்கள் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரம் மற்றும் கதைகள் உலகத் தரத்தில் உள்ளதால், உலக அளவில் தென்னிந்திய திரைப்படங்கள் திரும்பி பார்க்கப்படுகின்றனர். புதிய கதைகள், புதிய தொழில்நுட்பங்கள், அற்புதமான நடிப்பு ஆற்றல் ஆகியைகளை ஒருங்கே பெற்றிருப்பதன் மூலம் தென்னிந்திய சினிமா உலக அளவில் தலை நிமிரந்து கொடுக்கிறது. 

அது மட்டும்தான் காதலா? த்ருவ்வை கலாய்க்கும் நெட்டிசன்கள் !

Image
சமீபத்தில் வெளியாகி, திரையங்குகளில் ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் படம் "ஆதித்ய வர்மா". காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் அநேகரால விமர்சினத்துக்கு உள்ளாகி வருகிறது. தமிழ் திரை உலகிற்கு அடுத்த தலைமுறை நடிகர் கிடைத்து விட்டார் என்று சந்தோஷிக்கும் வேளையில், இந்த படத்தின் நாயகியும், நாயகனும் செய்வதற்கு பெயர் காதலா? என்று பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல், காட்சிக்கு காட்சி "லிப்லாக்" முத்தம், நினைத்துவுடன் உடலுறவு கொள்வது, அடிக்கடி மது, சிகரெட் பிடிப்பது என அனைத்து வகையிலும் ஒழுக்க கேடானா விஷயங்களையே காட்சிப்படுத்தியுள்ளனர். இளைஞர்களை கவருகிறேன் என்ற நோக்கத்தில் அவர்களை இன்னும் அதி பயங்கரமான கெட்ட பழக்கங்களில் ஈடுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் திரைப்படத்திற்கு குடும்பத்துடன், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் சென்று பார்க்கும்படியான சூழல் இல்லை. திரைப்படத்திற்கு A சர்டிபிகேட் பெற்றிருப்பதன் மூலம் பெண்கள் இந்த படத்தை திரையங்குகளில் காண முடியாத வகையில் செய்துள்ளனர். வசூலில் பெரிய இழப்பை சந்தித்திருக்கும் இந்த படத்திற்கு, த்ருவ்

காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய நல்ல பழக்கங்கள் !

இன்றைய நவீன உலகில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அத்தகைய மாற்றங்களால், வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் மாறுகின்றன. இதனால் நிறைய பிரச்சனைகள் உடலில் ஏற்படுகின்றன. ஆகவே பலர் ஆரோக்கியமான பழக்கங்கள் என்று அதனை கண்ட நேரங்களில் செய்கின்றனர். ஆனால் அவ்வாறு கண்ட நேரத்தில் செய்தால், எந்த ஒரு பலனும் இல்லை. மேலும் ஆரோக்கியமான பழக்கம் என்பது எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டிய நேரத்தில் செய்வது தான். அதைவிட்டு, மற்ற நேரங்களில் செய்தால், அந்த ஆரோக்கியமான செயல்கள் கூட, ஆரோக்கியமற்றது தான். உதாரணமாக, தூங்கினால் விரைவில் எழுவது நல்ல பழக்கம் தான். ஆனால் அதிகாலையில் எழுவது தான், காலையில் செய்யும் பழக்கங்களில் ஆரோக்கியமானது. இது போன்று சாப்பிடுவது, குளிப்பது என்று ஒருசில உள்ளன. அத்தகைய செயல்களை சரியாக காலை வேளையில் செய்து வந்தால், வாழ்க்கையே மிகவும் ஆரோக்கியமாகவும், சூப்பராகவும் செல்லும். சரி, இப்போது காலையில் செய்ய வேண்டிய ஆரோக்கியமான செயல்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பின்பற்றுங்களேன்... It is said that waking up early morning is a very healthy habit. But did you know that there is also a