பிளாக்கரில் அலெக்ஸா விட்ஜெட் (alexa widget)சேர்ப்பது எப்படி?
பிளாக்கரில் Alexa Widget சேர்ப்பது எப்படி? வணக்கம் நண்பர்களே..! இந்த பதிவில் நாம் காணவிருப்பது Alexa Widget -ஐ சேர்ப்பது என்பது எப்படி எனப்தைப் பற்றித்தான். முதலில் இந்த Alexa Widget எதற்கு என்று சொல்லிவிடுகிறேன். உங்கள் வலைபூ(Blog) அல்லது வலைதளம் (Website) இருக்கிறது இல்லையா ? அதன் தரத்தை அறிய இந்த விட்ஜெட் பயன்படுகிறது. ரேங்க் குறைந்தால் அதிக மதிப்புடையதாக கருத்தப்படும். நமது பள்ளிக்கூட ரேங் எப்படியோ அப்படி. சரி. இந்த அலெக்சா தளம் எப்படி இதை கணக்கிடுகிறது.. ? இந்த கேள்விக்கான பதிலுக்கு முன் இதையும் சொல்லிவிடுகிறேன். முதலில் இந்த அலெக்ஸா என்றால் என்று தெரிந்துகொள்வோம். அலெக்ஸா என்பது வலைளத்தங்களை தரத்தை அறிய தருவதற்காக Amazon நிறுவனத்தால் நடத்தப்படும் ஒரு வலைதளம். உங்கள் தளத்தில் தகவல்களைப் பெற்று இந்த (ரேங்கை)தரத்தை உங்களுக்கு கணக்கிட்டு தருகிறது. உங்கள் வலைதளத்திற்கு வருகை தரும் பார்வையாளரின் எண்ணிக்கை, பக்கப்பார்வைகள், எவ்வளவு நேரம் உங்கள் தளத்தில் பார்வையாளர் இருக்கிறார்கள் என்பதை கணக்கிட்டு அதன்படி உங்களுக்கு உங்களுடைய தளத்தின் அலெக்ஸா மதிப்பு எவ்வளவு என்பதை காட்டுகிறது. சரி....