Posts

Showing posts from January, 2012

உங்கள் கணினியில் டிவைஸ் டிரைவர்(Device Driver) பேக்அப் எடுக்க இலவச மென்பொருள்!

Image
வணக்கம் அன்பு சகோதரர்களே..!! நலமா? மற்றுமொரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திக்கிறோம். இன்றும் ஒரு புதிய பயனுள்ள மென்பொருளைப் பற்றியே இந்த பதிவு அமையப் போகிறது. விண்டோஸ் 7 - டிவைஸ் டிரைவர் உங்கள் கணினி இருக்கிறது அல்லவா? அதில் நிறைய பகுதிகள் இருக்கிறது. உங்களுக்கு அடிப்படைக் கணினி அறிவு இருக்கிறதெனில் இப்பதிவு முழுவதும் உங்களுக்கு எளிதாக புரியும். நீங்கள் நெடுங்காலமாக கணினியைப் பயன்படுத்தி வருகிறீர்களெனில், உங்கள் கணினிக்கான மென்பொருள்களையும், கணினி இயக்கத்திற்கு தேவையான முக்கிய மென்பொருகளான இயங்குதளம்(Operating System) போன்றவைகளை நிச்சயம் பேக்அப் எடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம். அப்போதுதான் உங்கள் கணினியில் ஏதேனும் கோளாறு ஏற்படினும், அதை சரிசெய்ய முடியும். உங்கள் கணினி திடீரென இடைநிறுத்தம் செய்யலாம். செயலிழந்து போகலாம்.. அப்போது என்ன செய்ய முடியும்.? புதிதாக தான் கணினியை ஃபார்மட்(Format) செய்ய வேண்டும். உங்கள் கணினியை பார்மட் செய்வது என்பதும் இப்போது ஒரு எளிதானதொரு வேலைதான். இதைப் பற்றி தனிப் பதிவில் காண்போம். லினக்ஸ் டிவைஸ் டிரைவர் இப்போது நான் சொல்ல வந்ததே இதுதான். உங்கள்

YOUTUBE TO MP3 - இலவச மென்பொருள்!

Image
You Tube பிரபல வீடியோதளம் என்பது நமக்கு தெரிந்ததே. இதிலிருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய எத்தனையோ மென்பொருள் இருக்கின்றன. இந்த வீடியோக்களிலிருந்து ஒலியை மட்டுமே தரவிறக்கம் செய்யவேண்டும் என நீங்கள் நினைத்தால் இந்த மென்பொருள் உங்களுக்கு உதவும். மென்பொருளை தரவிறக்கி முடித்ததும், அதை திறந்து அதிலிருக்கும் பெட்டியில் ஒலிக்கோப்புகளாக மாற்றப்பட வேண்டிய வீடியோவில் யு.ஆர்.எல் கொடுங்கள். பிறகு  Extract Audio என்பதை கிளிக் செய்தால் போதும் . உங்கள் கணினியில் நீங்கள் விருப்பபட்ட வீடியோவின் ஒலிக்கோப்பை Mp3 யாக உங்கள் கணினியில் சேமித்துக்கொள்ளலாம். You Tube - வீடியோக்களிலிருந்து நேரடியாக ஒலியை MP3 ஆக உங்கள் கணினிகளில் சேமிக்க இந்த மென்பொருள் உதவும். மென்பொருளுக்கான தரவிறக்கச் சுட்டி ஆன்லைன் மூலமாக MP3 ஆக மாற்ற சுட்டி

புகைப்படங்களின் மீது தமிழில் எழுத ADD TEXT TO PHOTO - கூகுள் பிளசில் புதிய வசதி !!!

Image
பேஸ்புக்கிற்கு இணையாக வளர்ந்துவரும் சமூக தளமான கூகுள் பிளசில் ஒரு புதிய வசதியை கொண்டு வந்திருக்கின்றனர். இனி கூகுள் பிளசில் போட்டோக்களை பகிரும்போதே அந்த படங்களின் மீது நாம் விரும்பியபடி போட்டோக்களின் மீது தமிழில் எழுத முடியும். குறிப்பாக தமிழ்மொழியை ஆதரிக்கிறது. இது ஒரு மகிழ்ச்சித் தரக்கூடிய செய்தி! பொதுவாகவே புகைப்படங்களின் மீது எழுதும் வசதியை தராத சமூகதளங்களிலிருந்து இப்போது கூகுள் ப்ளஸ் மாறுபட்டிருக்கிறது. வழக்கம்போல நீங்கள் புகைப்படங்களை google+ -ல் தரவேற்ற add to photo என்பதை கிளிக் செய்வீர்கள் அல்லவா? அதன்படியே புகைப்படத்தை தேர்ந்தெடுத்து பின்னர் அதில் படத்தின் கீழே edit photos, tag people, add text, add more என்ற வரிசையில் add text என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். கூகுள் பிளசில் போட்டோகளின் மீது  Add to Text வசதி தோன்றும் விண்டோவில் மூன்று நிலைகளில் top text, middle text, bottom text என்ற விருப்பங்களில் உங்களுக்குத் தேவையான கட்டத்தில் படங்களின் மீது சேர்க்க வேண்டிய வார்த்தைகளை தட்டச்சு செய்து, நீங்கள் விரும்பினால் வலது பக்கத்திலிருக்கும் T என்பதை சொடுக்கி வேண்டிய எழுத்துருவை தே

PDF to WORD converter - ஓர் இலவச மென்பொருள்..!!

Image
வணக்கம் எனது இனிய வாசக நெஞ்சங்களே.. இன்றைய பதிவில் ஓர் எளிமையான பயனுள்ள மென்பொருளைப் பார்க்கபோகிறோம்.  இன்று PDF கன்வர்ட்டர்கள் நிறைய வந்துவிட்டன. இதில் நமக்கு வேண்டிய கோப்புகளின் வடிவத்தில் மாற்றம் செய்து மாற்றிக்கொள்ளலாம். அதாவது பி.டி.எப் கோப்புகளாக உள்ளதை வேறு பார்மட்டிற்கு மாற்றம் செய்வதற்கு இந்த மென்பொருள்கள் நமக்கு உதவுகின்றன. அந்த வகையில் இந்த புதிய மென்பொருளானது ஒரு சிறப்புத் தகுதியுடன் வெளிவந்திருக்கிறது.   இந்த மென்பொருள் பி.டி.எப். கோப்புகளை வேர்ட் டாகுமென்ட்களாக மாற்றித் தரக்கூடியது. Doc, RTF, மற்றும் Docx ஆகியவடிவங்களில் இம்மென்பொருள் துணையுடன் மாற்றிக்கொள்ளலாம். நேரடியாக இணையத்தின் வழியும் pdf லிருந்து word க்கு மாற்றம் செய்யவும் வழியமைத்துக் கொடுத்திருக்கிறது இத்தளம்.  தேவைப்படுவோர் இந்த மென்பொருளை தரவிறக்கியும் பயன்படுத்தலாம். நேரடியாக ஆன்லைன் மூலம் உங்கள் பி.டி.எப் கோப்பை வேர்ட் பைலாக மாற்றம் செய்ய சுட்டி கணினியில் நிறுவு பயன்படுத்த -  தரவிறக்க சுட்டி தளத்தில் இம்மென்பொருளின் சிறப்புகளை எடுத்துரைக்கும் ஆங்கில வரிகள். Exclusive features for the desktop Batch convert u

புதிய மேம்படுத்தப்பட்ட மீடியா பிளேயர்கள் உங்களுக்காக..!!!Latest version of media players

Image
மீடியா பிளேயர் என்றால் உடனடியாக நமக்கு நினைவுக்கு வருவது விண்டோஸ் மீடியா பிளேயர்தான். அது மட்டும்தான் மீடியா பிளேயரா? இன்று இணையத்தில் ஆயிரக்கணக்கான மீடியா பிளேயர்கள் (Media Player) கிடைக்கின்றன. அவற்றில் ஒரு சில முக்கியமான , அதே சமயம் யாரும் அதிகம் அறிந்திராத மென்பொருட்களை அறிய தருவதில் எமக்கு மகிழ்ச்சி. அந்த வகையில் முதலில் இடம்பெறும் மீடியா பிளேயர் MPCSTAR Player MPCSTAR Player இம்மென்பொருள் முற்றிலும் இலவசமே..! இது அனைத்து வகை கோப்புகளையும் கையாளும் திறன் கொண்டது. இணையத்தில் MP3 பாடல்களைக் கேட்கும்போது பாடல்வரிகளையும் காட்டும் திறன். இம்மென்பொருளுக்கான ( MPCStar Media Player )தரவிறக்கச் சுட்டி  இம்மென்பொருளைப்பற்றி மேலதிக விபரங்கள் வேண்டுவோர் இந்த இணைப்பில் சென்று பார்க்கவும்.  இலவச மீடியா பிளேயர் Daum Pot Player Daum PotPlayer இம்மென்பொருள் அனைத்துவித கோப்புகளையும் ஆதரிக்கிறது(support). இம்மென்பொருளை தரவிறக்க இங்கு செல்லவும். மென்பொருளைப் பற்றிய மேலதிக தகவல்களைப் பெற இங்கு செல்லவும்.  இலவச மீடியா பிளேயர்  இலவச மென்பொருள் DA Player Digiarty (DA)palyer இது ஒரு மிகச்சிறந்த மீடியா ப

பயர்பாக்சில் தரவிறக்கம் முடிந்ததும் கணினியை மூட Auto Shutdown NG 0.9 நீட்சி..!!!

Image
வணக்கம் நண்பர்களே.. நாம் பயன்படுத்தம் பயர்பாக்ஸ் உலாவியில் தரவிறக்கம் செய்துமுடித்ததும் தானாக கணினியை மூட ஒரு அருமையான நீட்சி உள்ளது. அதாவது ஒரு பெரிய கோப்புகளையோ, அல்லது வீடியோக்கள், போன்றவற்றை தரவிறக்கும் போது அது தரவிறங்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அவ்வாறு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்போது நீண்ட நேரம் நாம் கணினி முன்பு அமர்ந்திருக்க முடியாது அல்லவா? இத்தகைய சிக்கல்களைத் தீர்க்கவும், இரவு நேர நீண்ட தரவிறக்கத்தின் போது பயன்படுத்தவும் இந்த நீட்சி உங்களுக்கு உதவும். இந்த நீட்சியைத் தரவிறக்கம் செய்ய..  இங்கு  கிளிக் செய்யவும். அல்லது மேலிருக்கும் படத்தை கிளிக் செய்யவும். பயன்படுத்தும் முறை: முதலில் இந்த இணைப்பில் சென்று இந்த நீட்சியைத் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். அடுத்து, பயர்பாக்ஸ் ஆட்ஆன் (Firefox addons) ல் Auto shutdown என்ற விருப்பத்தில் உங்களுடைய கணினியின் இயங்குதளம் எதுவோ அதைத் தேர்வு செய்துவிடுங்கள்.. பிறகு நீங்கள் எந்த ஒரு தரவிறக்கம் மேற்கொள்ளும்போதும், பயர்பாக்ஸ் டவுன்லோட் மேனேஜரில் புதிய Shutdown button வந்திருக்கும். அந்த பட்டனை ஒரு முறை கிளிக் செய்தால் தரவிறக்கம் முடிந்தத

தமிழில் எழுதியதை வாசித்துக் காட்டும் ஒரு அற்புதமான இலவச மென்பொருள் !!

Image
Text to Audio Converter  for Language Tamil   வணக்கம் அன்பு நெஞ்சங்களே..! வலைப்பக்கம் வந்து நாட்கள் பல ஆகிவிட்டது. இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்ப வசதியில் எதுவும் சாத்தியமே..! அந்த வகையில் நாம் இன்று பார்க்கப்போவது ஒரு அருமையான தளத்தைப் பற்றி. அதில் உள்ள ஒரு பயன்மிக்க மென்பொருளைப் பற்றியதுதான் இந்த பதிவு. ஆம். நண்பர்களே.. நாம் ஆங்கிலத்தில் எழுதியதை ஒலி வடிவமாக மாற்றித்தரும் மென்பொருள்களை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆங்கிலத்தில் தட்டச்சிட்டதை வாசிக்க செய்யும் இத்தகைய மென்பொருள்களை நம்மில் ஒரு சிலர் பயன்படுத்தியும் இருக்கலாம். அதுபோலவே நம் தமிழ்மொழிக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழில் தட்டச்சிட்டதை வாசித்துக்காட்டுகிறது இந்த மென்பொருள். இந்த மென்பொருளை பெங்களுரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர்.ஏ.ஜி.ராமகிருஷ்ணன் என்பவர் உருவாக்கி இருக்கிறார்.    தமிழில் எழுதியதை வாசித்துக்காட்ட இங்கு கிளிக் செய்யவும் மேற்காணும் இணைப்பைச்சொடுக்கி இந்த தளத்திற்கு செல்லவும்.  தமிழில் யுனிக்கோட் முறையில் எழுதப்பட்ட வரிகளை, கட்டுரைகளை, இங்கு இருக்கும் பெட்டியில் உள்ளிட்டு Submit என்பதை சொடுக்கினால்