ஆகாஷ் டேப்ளட் பிசி - ஒரு பார்வை !
மிக குறைந்த விலையில் டேப்ளட் பிசி-யை வழங்கி ஒரு புதிய சாதனையையே படைத்தது இந்தியா. இந்திய அரசின் முழுமையான முயற்சியில் அது சாத்தியமானது. ஆகாஷ் டேப்ளட் பிசி வெளிவந்த புதிதில் சில பிரச்னைகளை எதிர்கொண்டது. அவற்றை மீண்டும் மேன்படுத்தி தரமானதாக கொடுத்தார்கள். மிக குறைந்த விலையில் ஆகாஷ் டேப்ளட் பிசிகள் கிடைத்ததால் சிறு சிறு பிரச்னைகளும், இல்லாத வசதிகளும் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதனால் அவைகள் விரைவாக விற்றுத் தீர்ந்தன. தற்பொழுது அதே ஆகாஷ் டேப்ளட் பிசியானது மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகாஷ் டேப்ளட் பிசியில் இணைக்கபடும் கூடுதல் வசதிகள்: அழைப்பு வசதி (Call option) அழைப்பு வசதிக்கான ட்ரைவர் புரோகிராம். (Driver program for making phone call) 2G, 3G, 4G நெட்வொர்க்கான வெளி இணைப்பு சாதனம். Bluetooth வசதி மேலும் சில கூடுதல் வசதிகள். இந்த மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் டேப்ளட் பிசி குறைந்த விலைக்கு கிடக்கலாம் என் நம்பபடுகிறது. அடிப்படை கம்ப்யூட்டிங் (Basic computing)வசதிகளை மட்டுமே கொண்டிருந்த ஆகாஷ் டேப்ளட் பிசி இப்பொழுது சூப்பர் டேப்ளட்...