Posts

Showing posts from July, 2012

அதிகபட்ச இணையப் பாதுகாப்பைப் பெற..

Image
வணக்கம் நண்பர்களே..! இணையத்தைப் பயன்படுத்தும்போது வைரஸ்கள் கணினியில் இலாவகமா வந்து உட்கார்ந்துகொள்ளும். குறிப்பிட்ட இணைப்பைத்(specific link) திறக்கும்போதோ, அல்லது குறிப்பிட்ட இணையதளத்தைத்(particular websites) திறக்கும்போதே, அல்லது இணையத்திலிருந்து இலவச மென்பொருள்களை(Downloading Free software) தரவிறக்கம் செய்யும்போது கணினிக்கு தீங்கிழைக்கும் வைரஸ் நச்சு நிரல்களும்(Virus program) நம் கணனியில் இறங்கிக்கொள்ளும். இதனால் விளையும் தீங்கு என்ன என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். இத்தகைய வைரஸ்களை வேரோடு ஒழிக்க பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சிறந்தொரு ஆன்டிவரைஸ் சாப்ட்வேரை அறிமுகப்படுத்தியுள்ளது. Microsoft நிறுவனம் வெளியிட்டிருக்கும் இலவச ஆன்ட்டி வைரசின் பெயர் Microsoft Security Essentials இது மிகச்சிறந்த ஆன்டிவைரஸ் மென்பொருள் என பயன்படுத்திய பலரும், இதற்கு சான்றிதழ் கொடுக்கின்றனர். அதிகபட்ச பாதுகாப்பை வழங்கக்கூடிய இந்த மென்பொருள், இணையத்தில் நாம் உலவிக்கொண்டிருக்கும்போது இணையப் பாதுகாப்பை வழங்கக்கூடியது. கூடவே வரும் பாடி கார்ட் போல இணையத்தில் உலவும்போது கணினியை கூடவே இருந்து வைரஸ் தாக்கம் வ

ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக காண...

Image
வணக்கம் நண்பர்களே..! தொடர்ந்து பதிவெழுத எனக்கு நேரம் கிடைக்கல.. இப்போ ஒலிம்பிக் போட்டிகள் இலண்டன்ல நடந்துட்டு இருக்கு இல்லையா? இந்தப் போட்டிகளை வீட்டிலிருந்தால் டி.வியில பார்த்துக்கிடலாம்.. அலுவலகத்தில் இருந்தால் எப்படி பார்ப்பது? கணினியில பார்க்கலாம்.. இல்லேன்னா இருக்கவே இருக்கு smartphone. இணையத்துல Olympic போட்டிகளைப் பார்க்க எத்தனையோ  வழிமுறைகள் இருக்கு.. அதில் ஒரு சிலவற்றை மட்டும் உங்களோட பகிர்ந்துக்கிறேன்... நானும் இப்படிதான் ஒலிம்பிக் போட்டிகளைப் பார்த்துட்டு இருக்கிறேன்.. நான் என்னோட ஸ்மார்ட்போன்(Android) மூலமாகவும் பார்க்கிறேன். அதாவது எனக்குப் பிடித்த போட்டி எந்த நேரத்தில நடந்தாலும் அதைப் பார்த்துடனும்.. அதுதான் என்னோட விருப்பம்... கணினியில் பார்க்க இன்டர்நெட்ல பார்க்கணும்னா Youtube தளமே அதுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கிறாய்ங்க.. இலண்டன் ஒலிம்பிக் 2012(LONDON OLYMPIC 2012) இந்த இணைப்பைக் கிளிக் செய்து பார்த்து மகிழுங்க.. Smartphone (iphone, android)-ல் பார்ப்பதற்கான சுட்டிகள்: இந்த இணைப்பை கிளிக் செய்து பார்த்துடுங்க.. 1. BBC Olympics 2. BBC Olympics இந்தியா பதிக்க பட்டியலில

இணையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேடியோ, டி.வி., சேனல்கள் பார்க்கப் பயன்படும் மென்பொருள்...

Image
வணக்கம் நண்பர்களே..! இப்போதெல்லாம் கணினி ஆக்கிரமித்துக்கொண்டவைகள் ஏராளம்.. தனித்தனியாக இருந்த வானொலி, தொலைக்காட்சி, செல்போன், வீடியோ (Radio, television, cellular, video,) போன்றவைகளனைத்தையும் ஒன்றிணைத்து உட்கார்ந்த இடத்திலிருந்தே அனைத்து வசதிகளைப் பெற்றுத் தந்திவிடுகிறது கணினி.. கணினியும் இணைய இணைப்பு (Computer and Internet) ஒன்றிருந்தாலே போதுமானது. உலக நிகழ்வுகள் முதல், இந்த நொடி தயாரித்து முடிக்கப்பட்ட புதிய மென்பொருள்கள், ஆடைகள், உணவு வகைகள் (The new software, clothes, food types) என என்னவெல்லாம் இருக்கிறதோ அத்தனையும் நாம் தெரிந்துகொள்ள முடியும். சாதாரணமாக நாம் எத்தனை தொலைக்காட்சி சேனல்களைப் (TV channels) பார்க்க முடியும்? எத்தனை வானொலிகளைக் (Radio) கேட்க முடியும்? ஒரு நூறு அல்லது நூற்றைம்பது இருக்குமா?  ஆனால் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி இணையத்தில் உள்ள ஆயிரக்கணக்கான  உலக வானொலிகள், தொலைக்காட்சிகளையும் நாம் பார்த்தும், கேட்டும் மகிழலாம். ஆயிரத்ததுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வானொலிகள் ஆகியவற்றை இந்த ஒரு மென்பொருளைப் பயன்படுத்தியே கேட்டும், பார்த்து

கம்ப்யூட்டர் வேகமாக துவங்கிட | Quick Startup

திடீர்னு என்னுடைய கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆக ரொம்ப நேரமெடுத்துக்கொண்டது.  எனக்கு ஒரு சந்தேகம்.. நல்ல configuration உடைய என்னுடைய கணினிக்கு இன்று என்ன வந்தது? என்னுடைய பொறுமையை சோதித்தது. வெறுப்பில் கணினியை அணைத்துவிட்டு சென்று விட்டேன். சிறிது நேரம் கழித்து இதற்கு என்னதான் வழி? என சிந்தித்தவாறு இணையத்தில் தேடினேன்.  இணையத்தில் அதற்குரிய வழி ஒன்றை கண்டுபிடித்தேன். உங்களுக்கும் பயன்படும் என்று பகிர்கிறேன்.. உங்களுக்கு இப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா? நன்றாக, விரைவாக Start ஆன கம்ப்யூட்டர் , மெதுவாக Start ஆகி கடுப்பைக் கிளப்பியிருக்கிறதா? இதோ அதற்கான தீர்வு..! முதல்ல NotePad திறந்துக்கோங்க.அதுல.. del c:\windows\prefetch\ntosboot-*.* /q அப்படின்னு தப்பில்லாம் அடிங்க.. இப்படி டைப்பண்ணினதை ntosboot.bat ங்கிற பேர்ல C: யில சேமிச்சு வச்சுங்கோங்க. அப்புறம் Start பட்டன் கிளிக் பண்ணுங்க.. அது Run கொடுங்க.. இல்லேன்னா சுலபமான வழி ஒன்னு இருக்கு. windows start button + R கிளிக் பண்ணீங்கன்னா Run ஓப்பனாகிக்கும். Run box -ல gpedit.msc அப்படின்னு அடிங்க.. அடுத்த வர்ற Computer Configuration னை doub

புதிய MS-Office 2013 இலவசமாக தரவிறக்கம் செய்ய...

Image
வணக்கம் நண்பர்களே..! Microsoft நிறுவனம் தனது புதிய MS-Office 2013 -ஐ தற்போது பயன்படுத்த வாடிக்கையாளர்களுக்கு Customer Previewவை வழங்கியுள்ளது. இந்த புதிய MS-Office 2013 நீங்கள் பயன்படுத்த விரும்பினால் உங்களுக்கு மைக்ரோசாப்டின் Hotmail மின்னஞ்சல் கணக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும். கணக்கு இல்லாதவர்கள் இங்கு சென்று ஹாட் மெயில் கணக்கை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். ஏற்கனவே உங்களுக்கு Hotmail account இருந்தால் அதைப் பயன்படுத்தி லாகின் செய்து கொள்ளுங்கள். பிறகு இந்த புதிய எம்.எஸ். ஆபிசைப் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.  புதிய MS-Office 2013 (customer Preview) தரவிறக்கச் சுட்டி: http://www.microsoft.com/office/preview/en இந்த கருவியைத் தரவிறக்கி நிறுவதன் மூலம், புதிய எம்.எஸ். ஆபிசில் உள்ள  Excel, Word, Powerpoint மற்றுமுள்ள அனைத்து மைக்கோசாப்டின் Office பயன்பாடுகளையும் பயன்படுத்த முடியும். புதிய MS-Office 2013 ல் உள்ள மிகப்பெரிய பயனுள்ள வசதி Cloud Computing முறையில் உங்கள் கோப்புகளை சேமித்து வைத்துக்கொள்ளலாம். இதனால் நீங்கள் உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை இணையத்தின் மூலம் மற்ற வெளி இடங்கள

ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை மீட்டெடுக்க..

Image
How to retrieve hacked  facebook account பேஸ்புக்.... பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை என்னத் தெரியுமா? சுமார் 800 மில்லியன் பயனர்கள். இத்தனைப் பேர்கள் பயன்படுத்தும் சமூகதளமான பேஸ்புக்கில் எத்தனை கோல்மால்கள் நடக்கிறது தெரியுமா? சுமார் 700,000 த்திற்குமேலாக என பேஸ்புக் தனது அறிவிக்கையில் அறிவித்தருக்கிறது. சரி. இந்த தகவல்கள் எல்லாம் எதற்காக என கேட்கிறீர்களா? இருக்கு நண்பர்களே.. நிச்சயம் நீங்களும் ஒரு பேஸ்புக் பயனாளராக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இணையத்தில் ஒரு கொம்பன் இருப்பானானால் அவனுக்கும் ஒரு கொம்பாதி கொம்பன் இருக்கிறான். நாம் எச்சரிக்கையாக இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு ஒரு புதிய பாஸ்வேர்ட்டை தேர்ந்தெடுத்து கொடுத்து வைத்திருப்போம். ஆனால் அவற்றையெல்லாம் சர்வ சாதாரணமாக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திருடிவிடுகிறார்களாம். இதை நான் சொல்ல்லீங்க... Face Book தான் சொல்கிறது. சரி.. உங்க பேஸ்புக் கணக்கை யாரோ hack பண்ணிட்டாங்க.. உங்களோட கணக்கை முடக்கிட்டாங்க.. என்ன செய்ய? அதற்கான வழிமுறைகளை சொல்வதுதான் இந்த பதிவு.. அதற்குத்தான் இத்தனை நீட்டி முழக்கிட்டு வர்றேன். பேஸ்புக் இப்படி

ஒரே மென்பொருளில் அனைத்து வித கோப்புகளையும் திறந்து படிக்க..

Image
வணக்கம் நண்பர்களே..! ஒரே மென்பொருளில் அனைத்துவிதமான கோப்புகளையும் திறந்து படிக்க முடியுமா?(Can open and read all files  in one software?) முடியும். அதற்கான மென்பொருள் ஒன்று உள்ளது. ஒரே மென்பொருளில் ஏன் அனைத்துவிதமான கோப்புகளையும் திறக்க வேண்டும்? அந்தந்த கோப்புகளுக்குரிய மென்பொருள்களிலேயே திறந்து வாசித்துவிடலாமே என்கிறீர்களா? அதுவும் சரிதான். ஆனால் பல்வேறு கோப்புகளுக்குரிய மென்பொருளை உங்கள் கணினியில் ஒரே சமயத்தில் நிறுவி நீங்கள் பயன்படுத்த முடியுமா? அதுதான் சாத்தியமில்லை.. அவ்வாறு நீங்கள் பல்வேறுவகையான மென்பொருள்களை கணினியில் நிறுவும்போது உங்கள் கணினியின் வேகம் அதள பாதாளத்திற்கு சென்று விடும். நத்தை ஊர்வதைவிட மிக குறைவான வேகத்தில் செயல்படும். சில சமயம் அப்படியே Hang ஆகி நின்றுவிடும். இவ்வளவு ஏன்? உங்கள் நண்பர்கள் உங்களுக்கு இமெயில் அல்லது வேறு வகையில் ஏதேனும் ஒரு புதிய கோப்பொன்றை(New type of file) அனுப்புகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த கோப்புக்குரிய மென்பொருள்(suitable software) உங்களிடம் இல்லை.. உங்கள் கணினியில் இல்லை..அம்மென்பொருளை நிறுவினால்தான் அந்தக் கோப்பைப் பார்க்க முடியு

விண்டோஸ் எக்ஸ்பியில் ஏற்படும் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட பிரச்னைகளை சரிசெய்ய

Image
வணக்கம் நண்பர்களே.. ! தொடர்ந்து நேரமின்மை காரணமாக பதிவுகள் எதுவும் எழுதமுடியவில்லை என்பதை முதலில் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். விண்டோஸ் எக்ஸ்பி(Windows xp) ஆபரேட்டிங் சிஸ்டம்தான் இன்று பெரும்பாலானோர் பயன்படுத்துகிறோம் இல்லையா? விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆகிய புதிய version கள் வந்துவிட்டாலும் பழகிப் போன windows XP விட்டு விட நமக்கு மனசிருப்பதில்லை.. அதோடு மட்டுமில்லாமல் தொடர்ந்து பயன்படுத்திப் பழகிவிட்டதால் மற்ற புதிய இயங்குதளங்களுக்கு மாறுவதற்கும் தயக்கம் வருவது சகஜம்தான்.. இல்லையா? சரி.. வேண்டாத இந்த கதைகளை எல்லாம் விட்டுவிடலாம்.. நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவரா? அப்படியானால் இந்தப் பதிவு உங்களுக்குத்தான். விண்டோஸ் எக்ஸ்பியில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்ய பயன்படும் ஒரு அற்புதமான மென்பொருளைப் பற்றி இப்பதிவில் காண்போம். ஒரு வரி விடாமல் படித்துப் பயன்படுத்திப்பாருங்கள்.. இந்த மென்பொருளின் மகத்துவம் உங்களுக்குப் புரியும். உங்கள் கணினியில் வைரஸ் தாக்கம் நடைபெற்றுவிட்டவுடன் என்ன நடக்கும் தெரியுமா? கணினியில் டாஸ்க்மேனேஜர்(Task Manager), ரெஜிஸ்டரி எடிட்டர்

கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை அனுப்பும் ஹேக்கர்களிடமிருந்து(Hackers) தப்புவது எப்படி?

கம்ப்யூட்டர்களுக்கு கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை அனுப்பும் ஹேக்கர்கள்(Hackers) எனப்படுபவர்கள், எங்கே நுழைந்து தாக்க முடியும் என புரோகிராம்களில்(Program) உள்ள பலவீனமான குறியீடு வழிகளைக் கண்டு பிடித்து தங்கள் செயல்பாட்டினை மேற்கொள்வார்கள். எந்த வழியில் இவர்கள் நுழைகிறார்கள் என்று அறியும் வகையில், அந்த பலவீனமான இடங்கள் ஸீரோ டே வழிகள் என அழைக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட ஒரு பலவீனத்தைப் பயன்படுத்தி மால்வேர் புரோகிராம் ஒன்றை சில ஹேக்கர்கள் அனுப்பியுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் எச்சரித்துள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் இந்த அத்துமீறல் நடந்துள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் உள்ளே நுழையும் மால்வேர் புரோகிராம்கள்(Mal-ware Program) வழியாக, இதனை அனுப்பியவர்கள், அந்த கம்ப்யூட்டரையும், மற்ற வசதிகளையும் கெடுதல் விளைவிக்கும் செயல்களுக்குப் பயன்படுத்த முடியும். விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரையிலான அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் இயங்குகையில் இது நடைபெறுகிறது. எந்த சந்தேகமும் இடம் கொள்ள முடியாதபடி, சில மின்னஞ்சல்கள் வருகின்றன. இவை நம் ஆர

உங்கள் படங்களை நீங்களே மெருகேற்ற, வடிவமைக்க, வெட்ட, மாற்றம் செய்யும் எளிய வழிமுறைகள்

Image
வணக்கம் நண்பர்களே..! பதிவெழுதி ஒருவார காலத்திற்கும் மேலாகிவிட்டது அல்லவா? வேலை பளுவின் காரணமாக பதிவெதுவும் எழுத இயலவில்லை என்பதை முதலில் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.. நண்பர்களே..! நாம் நம்முடைய புகைப்படங்களை விதவிதமாக டிசைன் செய்ய ஆசைப்பட்டிருப்போம். அல்லது இணையத்தில் உள்ள படங்களைப் போன்று நம்முடைய படங்களையும் அவ்வாறு மாற்றம் செய்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் எப்போதாவது உங்களுக்குத் தோன்றியிருக்கும். ஏன்? எனக்கும் கூட அவ்வாறான எண்ணங்கள் அவ்வப்போது வந்து போவதுண்டு... ஆசை இருக்கிறது.. ஆனால் அவ்வாறு புகைப்படங்களை மாற்றம் செய்வதற்குரிய வழிமுறைகள் தெரியாது.. என்ன செய்ய? இதோ இதற்கு ஒரு தீர்வு... புகைப்படங்களை உருவாக்குவதற்கும், உருவாக்கியவற்றை நம் விருப்பப்படி மாற்றியமைக்கவும் பல இணையத்தளங்கள் உள்ளன.சிலவற்றின் ஃபார்மட்டினை மாற்ற முயற்சிப்போம். சிலவற்றின் இயல்புகளைச் செறிவாக அமைக்க எண்ணுவோம். புகைப்படங்களில் உள்ள தேவையற்ற பிக்ஸெல்களை(Delete Unwanted pixels) நீக்க திட்டமிடுவோம். படங்களைத் தலைகீழாகவோ, சில சிறிய துண்டுகளாகவோ மாற்றி அவற்றிற்கு புதிய வடிவம் தரவும் சிலர் விரும்புவார்கள்.