Posts

Showing posts from February, 2012

உங்கள் Folder ன் நிறம்(many colors) மாற்ற colorizer

Image
நீங்கள் பணியாற்றுக்கொண்டிருக்கும் விண்டோசில் போல்டர்களின் நிறம் மஞ்சள் நிறத்திலேயே பார்த்து உங்களுக்கு போர் அடித்து இருக்கும். ஒரு மாறுதலுக்கா ஒவ்வொரு போல்டருக்கும் ஒவ்வொரு நிறம் இருந்தால்.. எப்போதாவது இப்படி நீங்கள் சிந்தித்ததுண்டா? ஆம். நண்பர்களே கணினியின் மூலம் எதுவும் சாத்தியமே.. இப்படி உங்கள் folderகளை வண்ணமயமாக்குவதால், குறிப்பிட்ட Folder-ஐ உடனே கண்டுபிடிக்க வசதியாக இருக்கும். உங்கள் போல்டரின் நிறங்களை வண்ணங்களாக மாற்ற இச்சிறு மென்பொருள் துணைசெய்கிறது. மென்பொருளின் பெயர்: Folder Colorizer தரவிறக்கச் சுட்டி:   Folder Colorizer குறைந்த கொள்ளளவு கொண்ட இம்மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்(Install). முடிவில் இதுபோல் ஒரு விண்டோ வரும். அதில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரி கொடுத்து, கீழுள்ளதைப் போல டிக் மார்க் அடையாளத்தை எடுத்துவிட்டு Free Activation என்பதை கிளிக் செய்யவும். பிறகு நீங்கள் உள்ளிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு வெரிபிகேஷன் இணைப்பு வந்திருக்கும். அதைக் கிளிக் செய்து verification செய்துகொள்ளுங்கள். அவ்வாறு மின்னஞ்சல் வராவிட்டாலும் பிரச்னை இல்லை.. இம் மென்பொருளைப் பயன்பட

உங்கள் Youtube வீடியோக்களை DVD ஆக மாற்ற

Image
இணையத்தில் நாம் அதிகம் வீடியோ பார்க்கும் தளம் என்று சொன்னால் அது கூகிளின் Youtube தளமாகத்தான் இருக்கும். இத்தளத்தில் துறைவாரியாக படங்களை பிரித்து நம் கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளித்து வருகிறார்கள்.. இத்தளத்தில் உள்ள நம்மை கவர்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய எத்தனையோ மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கிறது. அதைத் தரவிறக்கி அப்படியே கணினியில் உள்ள Video Player மூலம் பார்த்துக்கொண்டிருப்போம். ஆனால் அதையே கணினி அல்லாத DVD Player -ல் பார்ப்பதற்கு அதற்குத் தகுந்த பார்மட்டிற்கு மாற்ற வேண்டும். உங்களிடம் உள்ள யூடியூப் வீடியோக்களை DVD ஆக மாற்றுவதற்கென்றே ஒரு இலவச மென்பொருள் உள்ளது. மென்பொருளின் பெயர்: Wondershare DVD creator மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி : இதில் கட்டண மென்பொரும் உண்டு. கட்டண மென்பொருளுக்கான சுட்டி DVDயாக மாற்ற செய்முறை:  உங்கள் விரும்பிய யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு இந்த மென்பொருளில் உள்ள Import என்ற விருப்பத்தினைப் பயன்படுத்தி உங்களுக்குத் தேவையான youtube வீடியோக்களை ஏற்றிகொள்ளுங்கள். வீடியோவை தேர்வு செய்த்தும் உங்களுக்கு கீழ்கண்டவாறு ஒரு

ஒரே மென்பொருளில் பலவகையான கோப்புகளைத் திறக்க(One application so many formats)

Image
உங்களைச் சந்தித்து நீண்ட நாட்களாகவிட்டது அல்லவா? அதனால ஒரு எமோஷனல் பீலிங்..சரி. விடுங்க.பதிவுக்கு வந்துடுவோம். நம்ம ரஜினி சார் பாட்சா படத்துல சொன்னமாதிரி "நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவ சொன்னமாதிரி" ன்னு சொல்வாரு இல்லையா? அதுமாதிரிதான்.. இந்த சாப்ட்வேரும்.. இந்த ஒரு சாப்ட்வேரை வச்சு நூறுக்கும் மேற்பட்ட வகையான கோப்புகளை திறக்கலாம் அப்படின்னா பார்த்துக்கங்க... அட அப்படி என்னதான் சாப்ட்வேர்..?இந்த சாப்ட்வேரோட பேரு Free Opener ன்னு பேரு.இது எந்தெந்த மாதிரியான கோப்புகளை திறக்கும்? பாருங்க லிஸ்ட் பண்ணியிருக்கேன்..நிறைய ஆச்சரியமிகுந்த விஷயங்கள் இருக்கு. 1... அதுவும் Ms-office அதாவது (வேர்ட் பிராசசர்) தொகுப்பு நம்மிடம் இல்லாமலேயே DOC/DOCX, XLS/XLSX, CSV இந்த வகை கோப்புகளை திறக்கவும், எடிட் செய்து பார்க்கலாம். 2. அடுத்துப் பார்த்தீங்கன்னா நம்ம மீடியா பைல்ஸ்(Media files) இருக்கு இல்லீங்களா? அதாவது video player.  இந்த மாதிரியான கோப்புகளையும் திறந்து பார்க்கலாம்.  உதாரணத்துக்கு AVI, WMV, FLV, MPG, MOV அப்புறம் MP4. இதுமாதிரியான வகைகளை சப்போர்ட் செய்யும். 3. அதே மாதிரிப் பார்த்தீங்கன்னா