Posts

Showing posts from March, 2018

இன்டர்நெட் வேகம் அதிகரிக்கச் செய்வது எப்படி?

Image
இன்று JIO நெட்வொர்க் முதற்கொண்டு அதிகமான இணைய சேவை வழங்குநர்கள் அதிகவேக இணைய இணைப்பை வழங்குவதாக கூறுகின்றனர். ஆனால் அது உண்மையா? எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியான சீரான இணையவேகம் உள்ளதா? என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் பதில் வரும். ஒரு சில பகுதிகளில் இணையத்தின் வேகம் மிக குறைவாக இருக்கிறது. அப்படிப்பட்ட நேரங்களில் முக்கியமான வேலைகள் ஏதேனும் இருப்பின் இணைய வேகத்தால் அதிகமான மன அழுத்தம் உருவாகி, அதனால் செய்ய வேண்டி வேலைகள் பாதிக்கப்படுகிறது. சரி, அதுபோன்ற சமயங்களில் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்கச் செய்து பயன்படுத்துவது எப்படி என்பதை அறிந்துகொள்வோம். கம்ப்யூட்டரில் இன்டர்நெட்வேகம் அதிகரிக்கச் செய்வது எப்படி? 1. வைஃபை மூலம் இன்டர்நெட் பயன்படுத்திடும்பொழுது அதன் வேகம் இயல்பாகவே 30% குறைகிறது. அதனால் முடிந்தளவு வைஃபை பயன்படுத்தாமல் ஈதர்நெட் கேபிள் பயன்படுத்துவதன் மூலம் இணைய வேகத்தை அதிகப்படுத்தலாம். 2. பழைய ரவுட்டர்களை பயன்படுத்துவோருக்கு இணைய வேகம் குறையும். நல்ல தரமான ரவுட்டர்களை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் இணைய வேகத்தை அதிகரித்திடலாம். தரமான ரவுட்டர்கள் 3000 முதல் 4000 ரூபாய்க்கு கிடைக

ஜாதகத்தை வைத்து நல்ல நேரம், கெட்ட நேரம் பார்ப்பது எப்படி?

Image
ஒரு நபரின் ஜாதகத்தை வைத்து, அவருக்கு எப்பொழுது நல்ல காலம் என்பதை மிக சுலபமாக தெரிந்துகொள்ளலாம். அதற்கு அவரின் ஜாதகத்தில் நடப்பு கிரகத்தின் திசை ,நடப்பு கிரகத்தின் புத்தி ஆகியவற்றை முதலில் குறித்துக்கொள்ள வேண்டும். அந்த திசை, புத்தி இருவரும் ஒருவருக்கொருவர் 6-8 நிலைகளில் இருக்க க்கூடாது. 1-12 நிலையிலும் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அந்த திசையில் அந்த புத்தி நன்மையை செய்யாது. இதுதான் மிக சுலபமாக நல்ல காலம் பார்க்கும் சூத்திரம் (Formula) இந்த சூத்திரத்தை வைத்து, அடுத்தடுத்து வரும் புத்திகளுக்கும் குறித்துக் கொண்டே வர வேண்டும். அப்பொழுது உங்களுக்கு நல்ல நேரமும், கெட்ட நேரமும் பிடிபட்டு விடும். தசா புத்தி பலன்கள் 1.1ம் வீடு, 5ம் வீடு, 9ஆம் வீடு, 4ஆம் வீடு, 7ஆம் வீடு, 10ஆம் வீடு ஆகிய வீட்டு அதிபதிகளின் தசா அல்லது புத்தி நடைபெற்றாலும், அவர்கள் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். இவைகள் அனைத்தைவிட, 11ஆம் வீட்டு அதிபரின் தசா அல்லது புத்தி நடைபெற்றால், அவர் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் மிக நல்ல பலன்கள் கிடைக்கும். ஜாதகத்தில் உச்சமாக உள்ள கிரகங்களின் தசா அல்லது புத்தி நடைபெற

பேஸ்புக்கில் பரப்பபடும் புரளிகளும், உண்மைகளும்

Image
I am seeing many people falling for this #bullshit BFF turns green if your account secure thing. It is a hoax and utter nonsense. It has nothing to do with security. #BFFisnotSecurity Why is it turning green for someone and why not for others? If the facebook app on your phone is updated, then this feature of animated words works else it does not. And there are other words like congratulations, best wishes etc that change color and also play a small animation. If you are still not convinced, I am surprised!! and here is more for you : பேஸ்புக்கில் இந்த பதிவில் BFF என கொமண்ட் செய்யுங்கள். BFF என நீங்கள் கொமண்ட் செய்த பிறகு அது பச்சையாக மாறினால் உங்களுடைய முகநூல் அக்கவுண்ட் பாதுகாப்பாக உள்ளது என்று அர்த்தம். ஒருவேளை பச்சையாக மாறவில்லை என்றால் உங்கள் கணக்கை யாரோ ஹேக் செய்ய நினைக்கிறார்கள் என்று அர்த்தம் என சமீப காலிமாக பேஸ்புக்கில் பலரை அச்சமடைய செய்யம் பதிவு ஒன்று உலாவி வருகின்றது. ஆனால் இது பற்றி பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது ஜனவரி 29 தேதி முதல் புதிதாக சேர்க்கப்பட்ட விசைவார்த்தை

மீண்டும் நோக்கியாவின் பிலிப் மாடல் செல்போன்கள்

Image
ஒரு காலத்தில் (?) வாழைப்பழம் போன்ற தோற்றத்தில் வளைந்த வடிவில் இருந்த நோக்கியா செல்போன்கள்  பிரபலமாக இருந்தன. அதன் பிறகு ஏற்பட்ட மாற்றங்களால் பல விதமான வடிவங்களில் செல்போன்கள் வெளிவந்தன. அதனால் அத்தகைய போன்கள் வெளிவருவது நின்று போயின. தற்பொழுது மீண்டும் நோக்கியா பிலிப் மாடல் மொபைல் போன்கள் வெளிவரவுள்ளது. 8110 ஜி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வகை மொபைல் போன்கள் ரூபாய் 6300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Image Credit : Nokia.com இதில் இடம்பெற்றிருக்கும் உள்ளிருப்பு வசதிகள் : Snapdragon 205 dual-core processor 512 MB of LPDDR3 RAM 4 GB Internal Storage 1,500mAh battery  2.4-inch QVGA color display (320 x 240 pixels)  மேலும் இதில் Facebook, Twitter, Google Assistant, Google Maps, and iconic Snake game போன்ற வசதிகள் அனைத்தையும் அனுபவிக்க முடியும்.  Tags: Nokia 8110 4G Phone, Nokia Flip Cellphone, New Nokia 4G Phone, Nokia Phone Specification.

மொபைலில் சீன உளவு வைரஸ் - அதிர்ச்சி ரிப்போர்ட்

Image
இந்தியர்கள் பயன்படுத்தும், சீனாவால் உருவாக்கப்பட்ட, 41, 'மொபைல் ஆப்'கள், உளவு பார்க்கும் வைரஸ்களுடன் இருப்பதால், நம் நாட்டின் மீது, 'சைபர்' தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக, புலனாய்வு அமைப்புகளும், ராணுவமும் எச்சரிக்கை விடுத்துள்ளன. இது பற்றி அரசு வெளியிட்டுள்ள அறிக்கை விபரம்: இந்தியர்கள் பயன்படுத்தும் மொபைல் ஆப்களில், சீனாவை சேர்ந்தோரால் உருவாக்கப்பட்ட, பிரபலமான, 41 ஆப்கள் உள்ளன. இவற்றில், உளவு பார்க்கும், 'மால்வேர்'கள் இடம் பெற்றுள்ளன. இந்த மால்வேர்கள், சம்பந்தப்பட்ட மொபைல் ஆப்பை பயன்படுத்துவோர் பற்றிய தகவல்களை, சீனாவில் உள்ள, 'சர்வர்' எனப்படும் பிரதான கம்ப்யூட்டருக்கு அனுப்பும். இதனால், நம் நாட்டின் மீது, 'சைபர்' தாக்குதல் எனப்படும், மென்பொருள் வழி தாக்குதலை, சீனா தொடுக்கக் கூடிய அபாயம் உள்ளது. இந்த மொபைல் ஆப்கள், ஆப்பிள் மொபைல் போனின், ஐ.ஓ.எஸ்., இயங்குதளத்திலும், ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் செயல்படக்கூடியவை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், வெய்போ, விசாட், ஷேர்இட், யு.சி.நியூஸ், யு.சி.பிரவுசர், பியூட்டி பிளஸ், நியூஸ் டாக்,

இணையத்தில் இலவசமாக திரைப்படங்கள் பார்த்திட உதவும் இணையதளங்கள்

Image
இணையத்தில் திரைப்படங்கள் பார்க்க எண்ணற்ற இணையதளங்கள் உள்ளன. அவற்றில் மிகச் சிறந்த 10 இணையதளங்களை இங்கு குறிப்பிடுகிறோம். புதியதாக வெளியிடப்படும் தமிழ் திரைப்படங்களை இணையத்தின் மூலம் தற்பொழுது கண்டுகளிக்கும் வசதிகளை சில முக்கியமான இணையதளங்கள் கொண்டு வந்துள்ளன. அவற்றில் HOT STAR .COM ஐ குறிப்பிட்டு சொல்லலாம். இவ்விணையதளத்தில் சமீபத்தில் வெளியான புதிய திரைப்படங்களை இலவசமாக கண்டுகளிக்கலாம். சில ஹிட் திரைப்படங்கள் Premium Movie களாக கிடைக்கின்றன.  மாத வாடகை செலுத்துவதன் மூலம் அனைத்து கட்டண திரைப்படங்களையும் கண்டுகளிக்க முடியும். தமிழ் உட்பட ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் வெளிவந்துள்ள திரைப்படங்களை இதில் காண முடியும். மேலும் Hot star TV குழுமத்தில் உள்ள அனைத்து சேனல்களிலும் வெளிவரும் தொடர்கள், விளையாட்டுகள் என கண்டுகளிக்க முடியும். இணையதள முகவரி: www.hotstar.com இது தவிர YouTube, Vimeo, Dailymotion, Hulu போன்ற பிரபல்யமான Video Sharing Website கள் மூலமும் தமிழ் திரைப்படங்கள் காணலாம். ஆனால் அவற்றில் புத்தம் புதிய திரைபடங்கள் காண கிடைப்பது அரிது. மேலும் மூன்றாம் தரமான, விதிமுறைகளுக்கு எதிராக

டைப் செய்யாமல் FB Status போடும் வசதி !

Image
இந்த இணைய உலகில் வெற்றியை தொடர்ந்து தக்க வைக்க வேண்டுமானால், தொடரந்து முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். புதிய அப்டேட்களை கொண்டு வந்தால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும். பேஸ்புக் மட்டும் அதற்கு விதிவிலக்கா? தொடர்ந்து போட்டிகளை சமாளிக்க புதிய வசதிகளை கொண்டு வந்த வண்ணம் உள்ளது. அந்த அடிப்படையில் உருவானதுதான் Facebook Voice Clip வசதி. இந்த வசதியால் பேஸ்புக்கில் இனி கஷ்டப்பட்டு டெக்ஸ்ட் டைப் செய்திட தேவையில்லை. Voice Clip வசதியை பயன்படுத்தி பேசியே ஸ்டேடஸ் போட்டுவிடலாம். எப்படி இந்த வசதியை கொண்டு வருவது? உங்களுடைய மொபைல் பேஸ்புக் ஆட்டோமேட்டிக் அப்டேட்டில் இருந்தால் உங்களுக்கு அந்த வசதி தானாகவே வந்திருக்கும். அல்லது நீங்கள் உங்களுடைய பேஸ்புக் ஆப் அப்டேட் செய்திட வேண்டும். மொபைலில் பேஸ்புக் ஆப்பை  அப்டேட் செய்து விட்டு, அதில் டெக்ஸ்ட் (Text) டைப் செய்ய வேண்டிய இடத்தில் டச் செய்தால் உங்களுக்கு இப்படி ஒரு ஆப்சன் காட்டும். அதில் இரண்டாவதாக உள்ள Add Voice Recording என்பதினை கிளிக் செய்யவும் , Allow Access To Your Camera and phone mic ? எனக் கேட்கும். அதில் Allow என்பதினை டேப் செய்யவும்.   பிறகு

ஒரு வாகனத்தைப் பற்றிய முழு தகவல்களை அறிந்துகொள்ள உதவும் ஆன்ட்ராய்ட் ஆப்

Image
ஒரு குறிப்பிட்ட வாகனத்தை பற்றிய விபரங்களை அதன் ரெஜிஸ்டர் நம்பர் மூலம் தெரிந்துகொள்வது எப்படி என பார்ப்போம். ஒரு இரு சக்கர வாகனம் யார்மீதாவது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுவிட்டால், அந்த வாகனத்தின் உரிமையாளர், மற்றும் வாகனத்தைப் பற்றிய விபரங்களை மிக எளிதாக அறிந்துகொள்ள முடியும். அதற்கு உதவுகிறது  RTO Car and Bike ஆன்ட்ராய்ட் ஆப் . இந்த ஆப்மூலம் உங்களிடம் உள்ள ரெஜிஸ்டர் நம்பரை உள்ளிட்டு அந்த வாகனத்தப் பற்றிய முழு விபரங்களை உரிமையாளர் பெயருடன் தெரிந்துகொள்ளலாம். எப்படி பயன்படுத்துவது? உங்கள் ஆன்ட்ராய்ட் போனில் கீழுள்ள லிங்க் மூலம் ஆர்டிஓ கார் அன்ட் பைக் ஆப்பை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்துகொள்ளுங்கள். பிறகு தோன்றும் விண்டோவில் "Start" பட்டனை அழுத்திடுங்கள். Enter Vehicle Number என்ற பெட்டியினுள் உங்களிடம் உள்ள "Register Number"  உள்ளிட்டு Search கொடுக்கவும். அதன் பிறகு, அந்த வாகனத்தைப் பற்றிய முழு விபரங்களில் தோன்றும். அதில் வண்டியின் பெயர், வண்டியின் மாடல், ஓனர் பெயர் மற்றும் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் அனைத்தையும் காட்டும். இது ஒரு சிறந்த பயன்மிக்க ஆப். இதைப் பயன்படுத்த

யூடியூப் லைவ் வீடியோவில் கிடைக்கப்பெறும் புதிய வசதிகள் !

Image
பேஸ்புக், யூட்யூப் போன்ற சமூக இணையதளங்களில் "லைவ் வீடியோ" பிரபலமாகி கொண்டு வருகிறது. நிகழ்விடத்தில் நடப்பவற்றை அப்படியே ஒளிப்பரப்ப இந்த இந்த வசதி பயன்படுகிறது. YouTube Live வீடியோ வசதியில் கூடுதலாக இரு வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.  1.  ரிப்ளை செய்யும் வசதி , 2.   இருப்பிடத்தினை டேக் செய்யும் வசதி   வசதிகள் தான் அவை. இவ்வசதிகளை மியூசிக் ப்ரோகிராம், ஸ்போர்ட்ஸ், விஞ்ஞான நிகழ்வுகள், கம்ப்யூட்டர் GAME போன்றவற்றை நேரடி ஒளிபரப்பு செய்திடும்பொழுது பெற்றுக்கொள்ள முடியும். நேரடி ஒளிபரப்பு முடிந்தவடைந்த பின்னரும் கூட அவ்வசதிகளை தொடந்து பெற்றிட முடியும். ஆப்பிளின் iOS மற்றும் Android ஆகிய இரு சாதனங்களிலும் இந்த வசதிகள் மிக விரைவில் இடம்பெறும். இந்த வசதியால் லைவ் வீடியோவின்போது வரும் கருத்துகளுக்கு உடனடியாக பதில் அளித்திட முடியும். மேலும் லைவ் வீடியோ எந்த இடத்தில் இருந்து ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது என்பதை டேக் செய்து, மற்றவர்கள் தெரிந்துகொள்ளும்படி செய்திடலாம். மேலும் யூடீயூப் தகவல்களை தெரிந்துகொள்ள. Tags: YOUTUBE, YouTube Features, New Features in YouTube LIVE Video.