மொபைலில் சீன உளவு வைரஸ் - அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தியர்கள் பயன்படுத்தும், சீனாவால் உருவாக்கப்பட்ட, 41, 'மொபைல் ஆப்'கள், உளவு பார்க்கும் வைரஸ்களுடன் இருப்பதால், நம் நாட்டின் மீது, 'சைபர்' தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக, புலனாய்வு அமைப்புகளும், ராணுவமும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

china's spy app from 41 mobile app


இது பற்றி அரசு வெளியிட்டுள்ள அறிக்கை விபரம்: இந்தியர்கள் பயன்படுத்தும் மொபைல் ஆப்களில், சீனாவை சேர்ந்தோரால் உருவாக்கப்பட்ட, பிரபலமான, 41 ஆப்கள் உள்ளன. இவற்றில், உளவு பார்க்கும், 'மால்வேர்'கள் இடம் பெற்றுள்ளன. இந்த மால்வேர்கள், சம்பந்தப்பட்ட மொபைல் ஆப்பை பயன்படுத்துவோர் பற்றிய தகவல்களை, சீனாவில் உள்ள, 'சர்வர்' எனப்படும் பிரதான கம்ப்யூட்டருக்கு அனுப்பும்.

இதனால், நம் நாட்டின் மீது, 'சைபர்' தாக்குதல் எனப்படும், மென்பொருள் வழி தாக்குதலை, சீனா தொடுக்கக் கூடிய அபாயம் உள்ளது. இந்த மொபைல் ஆப்கள், ஆப்பிள் மொபைல் போனின், ஐ.ஓ.எஸ்., இயங்குதளத்திலும், ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் செயல்படக்கூடியவை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், வெய்போ, விசாட், ஷேர்இட், யு.சி.நியூஸ், யு.சி.பிரவுசர், பியூட்டி பிளஸ், நியூஸ் டாக், டி.யு.ரிகார்டர், சி.எம்.பிரவுசர் உள்ளிட்ட, 41 மொபைல் ஆப்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.


Comments

Popular posts from this blog

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

ஆண்ட்ராய்ட் விட்ஜெட் - சில பயனுள்ள தகவல்கள்

வடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்