பென்டிரைவ் மூலம் கம்ப்யூட்டரை லாக் செய்ய
உங்கள் வீட்டின் பூட்டிற்கு சாவி இருப்பதைப் போல...உங்களுடைய காருக்கு சாவி இருப்பதைப் போல. உங்களுடைய பெட்டி, பீரோவின் பாதுகாப்பிற்கு பூட்டு-சாவி இருப்பதைப் போல, உங்களுடைய கம்ப்யூட்டரைப் பூட்டவும் ( Computer Lock ) சாவி இருந்தால் நன்றாக இருக்கமல்லவா? உங்களுடைய கம்ப்யூட்டரை பென்டிரைவ் பூட்டிப் பாதுகாக்க முடியும். ஒரு முறை பூட்டிவிட்டால் பிறகு அந்த சாவி இல்லாமல் கம்ப்யூட்டரை ஓப்பன் செய்யவே முடியாது. நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு USB பென்டிரைவ் மூலம் இதைச் செய்யலாம். பென்டிரைவ் என்பது கோப்புகளை சேமிக்கப் பயன்படும் ஒரு Removable Device. அதை எப்படி சாவியாக பயன்படுத்த முடியும்? என்ற கேள்வி எழுகிறதா? முடியும் நண்பர்களே..! இதற்கென இணையத்தில் ஒரு புரோகிராம் இருக்கிறது. அந்த புரோகிராமிற்கு பெயர் பிரிடேட்டர் Predator . முற்றிலும் இலவசமான புரோகிராம் இது . இந்த புரோகிராமை பயன்படுத்தி உங்களுடைய ஃப்ளாஸ் டிரைவ்வை எப்படி கம்ப்யூட்டர் திறவுகோலாகப் பயன்படுத்துவது என்று பார்ப்போம். 1. Predator என்று கூகிளில் தேடி இந்த புரோகிராமை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ...