5 சிறந்த மெசேஜிங் ஆப்ளிகேஷன்கள் | Best Messaging Apps for Smartphones
ஆன்ட்ராய்ட், ஆப்பிள் ஸ்மார்ட்போன்களில் தகவல்கள் பரிமாறிக்கொள்ள நிறைய மெசேஜிங் அப்ளிகேஷன்கள் உள்ளன. அவற்றில் மிகச்சிறந்த 5 Messaging Applications பற்றித் தெரிந்துகொள்வோம் 1. வாட்ஸ்அப் (WhatsApp) மிகப் பிரபலமான மெசேஜிங் அப்ளிகேஷன்களில் ஒன்று இது. ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ், விண்டோஸ் போன்களில் இயங்க கூடியது. இந்த அப்ளிகேஷன் 3G, Wifi கனெக்சனைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்கள், வீட்டு நபர்களுக்கு தகவல் அனுப்ப, பேச பயன்படுகிறது. இவை இலவசம் என்பதால் அனைத்துத் தரப்பினரும் விரும்பி பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப்ளிகேஷன் மூலம் pictures, audio notes மற்றும் வீடியோ மெசேஜ்களை அனுப்ப முடியும். வாட்ஸ் அப்ளிகேஷன் டவுன்லோட் செய்ய: ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு | iOS பயனர்களுக்கு | Windows Phone பயனர்களுக்கு 2. வைபர் (Viber) இந்த வைபர் அப்ளிகேஷனும் மிக பிரபலமான மேசேஜிங் அப்ளிகேஷன்தான். இதில் வீடியோ மேசேஜ், அழைப்புகளை மேற்கொள்ள, டெக்ஸ்ட் மேசேஜ் அனுப்ப முடியும். இவை அனைத்தையும் 3G, wifi மூலம் செய்ய முடியும். இந்த அப்ளிகேஷன் உலகளவில் 200 மில்லயனுக்கும் அதிகமான பயனர்கள் தங்களது ஆண...