பாட்டு எழுத சாப்ட்வேர் ! (Song Making Software)
வைரமுத்து மகன் மதன் கார்க்கி இப்போது சினிமாவில் மிக பிரலமான பாடலாசிரியர். சிறிய படம் பெரிய படம் எதுவாக இருந்தாலும் பாடல் எழுதக்கூடியவர். இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்காமல் கொடுப்பதை மனமுவந்து ஏற்றுக் கொண்டு பாடல் எழுதுவார். அடிப்படையில் மதன் கார்க்கி ஒரு கம்ப்யூட்டர் பொறியாளர் (Computer Engineer). அண்ணா பல்கலை கழகத்தில் (Anna University) உதவி பேராசிரியராக பணியாற்றிவர். தற்போது வேலையை ராஜினாமா செய்து விட்டு முழுநேர பாடலாசிரியராகி விட்டார். மதன் கார்க்கி ஏற்கெனவே தனது கார்க்கி ரிசர்ச் செண்டர் (Research) மூலம் தமிழ் அகராதி (Tamil Dictionary) , ஒலிங்கோ என்னும் டிரான்ஸ்லேட்டர் (Olingo Translator)), சர்ச் பிலிம் சாங் (Search film song) போன்ற மென்பொருளை உருவாக்கி அதை பயன்பாட்டுக்கு விட்டுள்ளார். இப்போது ஒரு திரைப்படத்தில் பாடல் வரும் சூழ்நிலையை பதிவேற்றம் செய்தால் கம்ப்யூட்டரே பாடல் எழுதித்தரும் மென்பொருளை (Song making software) உருவாக்கி இருக்கிறார். இதுகுறித்து மதன் கார்க்கி கூறியிருப்பதாவது: சினிமா பாட்டு கவிஞனின் ஆன்மாவிலிருந்து எழுதப்படுவதல்ல. கதை, காட்சி, மெ...