Posts

Showing posts from February, 2013

போட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்

Image
ஒரு போட்டோவை அழகுற செய்திட வேண்டும் என்றால் Photoshop போன்ற மென்பொருள் பயன்படுத்திட தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. உடனடியாக செய்யக்கூடியதும் அன்று. போட்டோஷாப்பில் செய்வது போன்று போட்டோவை அழகாக மாற்றிடச் செய்வதற்கு தற்காலத்தில் பல மென்பொருட்கள் வந்துவிட்டன. அவற்றில் போட்டோவை திறந்து ஒரு சில சொடுக்குகளைச் செய்வதன் மூலம் நாம் திறந்த அந்த போட்டோவானது, அதில் கொடுக்கப்பட்ட வடிமைப்புகளுக்கு ஏற்ப மாறி மிக அருமையான போட்டோவாக நமக்கு கிடைக்கும். அது போன்றதொரு மென்பொருள் தான்  Photo Mixing Software . இதன் மூலம் Photo Collages என்று கூறப்படும் "போட்டோ கோலங்கள்" செய்திடலாம். இந்த மென்பொருள் மிக எளிமையான பயனர் இடைமுகம் கொண்டது. இதனால் இதைப் பயன்படுத்துவது மிகச் சுலபம். இதைப் பயன்படுத்தி எப்படி Photo Mixing செய்வது என்பதை பற்றி அறிந்துகொள்வோம். போட்டோ மிக்சிங் மென்பொருளைப் பயன்படுத்துவது எப்படி? முதலில் போட்டோ மிக்சிங் மென்பொருளை தரவிறக்கம் (Download) செய்து, நிறுவி (Install) செய்துகொள்ளவும். போட்டோமிக்சிங் புரோகிராமை திறந்திடவும். வலது பக்கத்தில் இடம்பெற்றுள்ள டெம

ஆப்பரேட்டிங் லைவ் சிடி - முற்றிலும் இலவசம்

Image
வணக்கம் நண்பர்களே.. ! சாதாரணமாக நீங்கள் உங்கள் கணினியை தொடங்கியவுடன், உங்கள் கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்கில் பதியப்பட்ட ஆபரேட்டிங் என்ன செய்யும்? கணிப்பொறி இயக்கப்பட்டவுடன் முதன் முதலில் Operating System என்ற சொல்லக்கூடிய இயங்குதள புரோகிராம்களை Hard Disc அடுக்குகளில் ஏற்றும். அதன் பிறகே அதில் குறிப்பிட்ட செயல்முறையில் சில கோப்புகளை இயக்க தொடங்கும். இக்கோப்புகள் கணினியில் உள்ள Hardware களை சரிபார்க்கும். Driver Files களை Memory-க்கு ஏற்றிக்கொள்ளும். நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம்களுக்கு ஏற்ற, அதற்கு தேவையான Library Files (கோப்புகளை) தயார்படுத்தி வைக்கும். இதுதான் கணினி உயிர்ப்பு பெற்றவுடன் செய்யும் வேலைகள். சரி.. Hard Disk -ல் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் செய்யும் வேலைகளை, ஹார்ட் டிஸ்க்கில் பதியபட்டாமல், சாதாரணமாக நாம் பயன்படுத்தும் CD யில் பதியப்பட்டு, கணினியை இயக்கினால் என்ன? இந்த சிந்தனையில் விளைவாக உருவானவே லைவ் சி.டி. லைவ் சி.டி. என்றால் என்ன? இந்த லைவ் சி.டி என்ன செய்யும்? ஹார்ட் டிஸ்க்கில் நாம் பதித்து இயக்கும் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள அனைத்து கோப்புகளையும்,  இந்த சிடி உள்ளடக்க

Usb drive உள்ள அப்ளிகேஷன்களை டாஸ்க்பாரில் திறந்து பயன்படுத்த உதவும் மென்பொருள் Codysafe

Image
வணக்கம் நண்பர்களே..! யூ.எஸ்.பி. டிரைவ் என்று சொல்லக்கூடிய பென்டிரைவில் பதிந்துள்ள அனைத்து வகையான அப்ளிகேஷன்கள் முதல், அனைத்துவித கோப்புகளையும் (portable apps, videos, images, word documents, xls files, audio)விண்டோஸ் டாஸ்க் பாரில் திறந்து அந்த கோப்புகளை கையாள முடியும். விண்டோஸ் டாஸ்க்பார் மூலம் கோப்புகளை ஒரே கிளிக்கிள் திறந்து கையாள முடியும். எப்படி? இதற்கு பயன்படுகிறது கோடிசேஃப் (codysafe) என்ற மென்பொருள். இம்மென்பொருளில் மேலும் அதிக வசிகள் உள்ளடங்கியுள்ளது. உங்களுடைய Pen dirve பாதுகாக்க Driver Doctor வசதி...! யூ.எஸ்.பி. டிரைவ் தொலைந்துவிட்டால் மீட்டெடுக்கும் வசதி..! தமிழ் உட்பட பல மொழிகளில் பயன்படுத்தும் வசதி..! USB-ல் பயன்படுத்தாமல் இருக்கும் காலி இடத்தின் அளவை கண்டுகொள்ள...! எளிமையாக பயன்படுத்தும் User Friendly இடைமுகம்..! மிக எளிமையான வழியில் தரவிறக்கம் செய்து, மென்பொருளை நிறுவும் வசதி.. எப்படி பயன்படுத்துவது? 1. முதலில் மென்பொருளை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். 2. மென்பொருளை டபுள் கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் உங்கள் USB-க்கான எழுத்தை தெரிவு செய்யுங்கள் (அதாவது G:/, I:/  இதுப

பாஸ்வேர்ட் மறந்துடுச்சா... கவலையே படாதீங்க...!!!

ஞாபக மறதி என்பது மனிதர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரு குறைதான். சில சமயங்களில் ஞாபக மறதி பாடாய் படுத்தும். அதுவும் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் மின்னஞ்சல், சமூக வலைத்தளம் போன்றவற்றிற்கு வைத்திருக்கும் கடவுச்சொல்லை அடிக்கடி மறந்து போவது நேரிடும். 'நேத்துதான் புதுசா பாஸ்வேர்ட் மாத்தினேன்.. அதுக்குள்ள மறந்துடுச்சு' என்று புலம்புபவர்களை கண்டிருக்கிறேன். இதற்கு முன்பு பயன்படுத்தி கடவுச் சொற்கள் அனைத்தும் நினைவிற்கு வரும். ஆனால் தற்பொழுது பயன்படுத்தி வந்த கடவுச்சொல்லோ நினைவிற்கு வராமல் முரண்டு பிடிக்கும். அதுபோன்ற நிலைகளில் Forgot Password கொடுத்து, அதில் கோரப்படும் மின்னஞ்சல்/அலைபேசி எண் கொடுத்து, அதன் பிறகு நமக்கு வரும் SMS Code - ஐ உள்ளிட்டு புதிய கடவுச்சொல் இட்டு, கணக்கை திரும்ப பெறலாம். ஆனால் கம்ப்யூட்டருக்கு நாம் கொடுத்திருக்கும் பாஸ்வேர்ட் மறந்துவிட்டால் என்ன செய்வது? இதோ, அதற்கும் ஒரு தீர்வு உண்டு. எப்படி கடவுச்சொல் மறந்து போன கணினியை இயக்குவது? நிச்சயம் உங்களிடம் Pen-drive இருக்கும். அதன் மூலம் உங்கள் பாஸ்வேர்டை உள்ளிட்டு கணினியை இயங்கச் செய்யலாம். ஆச்சர்யமாக உள்ளதா?  அத

ப்ளாக்ர் தளத்தில் மல்வேர் நீக்குவது எப்படி?

Image
How to Remove Malware From Your Blog வணக்கம் நண்பர்களே...! இணையத்தைப் பயன்படுத்துவதால் கணினி பல்வேறுபட்ட தாக்குதல்களுக்கு ஆளாகிறது. கணினி மட்டுமா? நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பிளாக்கர் போன்ற வலைத்தளங்களையும் வைரஸ், மால்வேர் , ஆட்வேர் போன்ற தீங்கிழைக்கும் புரோகிராம்கள் விட்டு வைப்பதில்லை... நண்பர் ஒருவர் தனது பிளாக் மால்வேரினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை எப்படி நீக்குவது என்பதையும் கேட்டிருந்தார்.. அது அவருக்கு மட்டுமல்ல.. அனைவருக்கும் பயன்படும் என்பதால் இங்கு பகிர்கிறேன். மால்வேரால் தாக்கப்பட்டுள்ள பிளாக்கை திறக்கும்பொழுது இவ்வாறான பிழைச் செய்தி கிடைக்கும். The Website Ahead Contains Malware!  மால்வேர் (malware) என்றால் என்ன? பொதுவாக மால்வேர் என்பது நம்முடைய தகவல்களை திருடி உரியவருக்கு அனுப்பும் ஒரு புரோகிராம். அதிலுள்ள கட்டளைகளின் படி செயல்பட்டு, உங்களுடைய கணினியில் உள்ள தகவல்களை - நீங்கள் உள்ளிடும் தகவல்களை திருடி அனுப்பிவிடும். மால்வேரில் மற்றொரு வகையானது ஆட்வேர். ஆட்வேர் (Adware) என்றால் என்ன? ஆட்வேர் என்பதும் மால்வேரின் மற்றொரு வடிவம். இது நீங்கள் பார்வையிடும் இணையதளங்களி