Usb drive உள்ள அப்ளிகேஷன்களை டாஸ்க்பாரில் திறந்து பயன்படுத்த உதவும் மென்பொருள் Codysafe


வணக்கம் நண்பர்களே..!

யூ.எஸ்.பி. டிரைவ் என்று சொல்லக்கூடிய பென்டிரைவில் பதிந்துள்ள அனைத்து வகையான அப்ளிகேஷன்கள் முதல், அனைத்துவித கோப்புகளையும் (portable apps, videos, images, word documents, xls files, audio)விண்டோஸ் டாஸ்க் பாரில் திறந்து அந்த கோப்புகளை கையாள முடியும்.
usb app launcher

விண்டோஸ் டாஸ்க்பார் மூலம் கோப்புகளை ஒரே கிளிக்கிள் திறந்து கையாள முடியும்.

எப்படி?

  • இதற்கு பயன்படுகிறது கோடிசேஃப் (codysafe) என்ற மென்பொருள். இம்மென்பொருளில் மேலும் அதிக வசிகள் உள்ளடங்கியுள்ளது.
  • உங்களுடைய Pen dirve பாதுகாக்க Driver Doctor வசதி...!
  • யூ.எஸ்.பி. டிரைவ் தொலைந்துவிட்டால் மீட்டெடுக்கும் வசதி..!
  • தமிழ் உட்பட பல மொழிகளில் பயன்படுத்தும் வசதி..!
  • USB-ல் பயன்படுத்தாமல் இருக்கும் காலி இடத்தின் அளவை கண்டுகொள்ள...!
  • எளிமையாக பயன்படுத்தும் User Friendly இடைமுகம்..!

மிக எளிமையான வழியில் தரவிறக்கம் செய்து, மென்பொருளை நிறுவும் வசதி..

எப்படி பயன்படுத்துவது?

1. முதலில் மென்பொருளை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
2. மென்பொருளை டபுள் கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் உங்கள் USB-க்கான எழுத்தை தெரிவு செய்யுங்கள் (அதாவது G:/, I:/  இதுபோன்று)
3. இவ்வாறு தெரிவு செய்துவிட்டு next..next சொடுக்குவதன் மூலம் உங்கள் பென்டிரைவில் மென்பொருள் நிறுவப்பட்டுவிடும்.
4. அடுத்து USB-ஐத் திறந்து அதிலுள்ள ஸ்டார்ட் கோடி சேஃப் மென்பொருளை இரட்டை சொடுக்கு சொடுக்குவதன் மூலம் உங்கள் கணினியின் டாஸ்க்பாரின் முகப்பில் வந்துவிடும்.
5. அடுத்து அதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான செட்டிங்ஸ்களை மாற்றிக்கொள்ள முடியும்.
6. டாஸ்க்பாரில் உள்ள cody safe ஐகானை சுட்டுவதன் மூலம் தோன்றும் விண்டோவில் ஆப்சனை கிளிக் செய்து மொழியை மாற்றலாம்.
அதோடு அப்ளிகேஷன் மேனேஜர் என்பதை சொடுக்கி, பிரவுஸ் என்பதனூடாக தேவையான portable application களை டாஸ்க் பாருக்கு கொண்டு வரமுடியும். இவ்வாறு நீங்கள் டாஸ்க் பாருக்கு கொண்டுவர நினைக்கும் Application கண்டிப்பாக உங்கள் USB Drive -ல் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
இந்த மென்பொருளை இலவசமாக தறவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.


மேலும் விரிவான விளக்கத்திற்கு கீழிருக்கும் சுட்டியைச் சொடுக்கவும்.
Thanks & source: http://www.howtogeek.com/80132/codysafe-is-an-alternative-to-portableapps-2/

நன்றி நண்பர்களே..!

- சுப்புடு

Comments

  1. நல்ல பயனுள்ள தகவல்.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

ஆண்ட்ராய்ட் விட்ஜெட் - சில பயனுள்ள தகவல்கள்

வடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்