ரேன்சம்வேர் அட்டாக் ரிமூவல் கைடு
உலக நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து வலம் வந்து கொண்டிருக்கும் வைரஸ் Wanna cry ransomware . இது கம்ப்யூட்டர்களில் உள்ள பைல்கள் அனைத்தையும் என்க்ரிப்ட் செய்து அழித்து விடுகிறது. இதனால் முக்கியமான டேட்டாகள் இழந்து தவித்து வருகின்றனர். இந்த வைரசானது இதுவரைக்கும் 2 லட்சம் கம்ப்யூட்டர்களை முடக்கியுள்ளது. பள்ளிகள், நிறுவனங்கள், வங்கிகள் என முக்கியமான கம்ப்யூட்டர்களை சைபர் தாக்குதல் நடத்திய இந்த வைரஸ், தாக்கப்பட்ட கம்ப்யூட்டரை ஓப்பன் செய்யும்பொழுது, முடக்கப்பட்ட பைல்களை மீட்க பிணைத்தொகை கேட்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கம்ப்யூட்டர்கள் மட்டுமல்ல, எம்.ஐ.ஆர் ஸ்கேனர் உள்ளிட்ட மருத்துவ சாதனங்களையும் தாக்கவல்லது. வானா க்ரை ரேன்சம்வேர் உங்கள் கம்ப்யூட்டரை தாக்கியுள்ளதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது? டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்து, Start Task Manager என்பதை கிளிக் செய்வதன் மூலம் டாஸ்க் மேனேஜரை ஓப்பன் செய்திடலாம். அதில் "Processes" டேபை கிளிக் செய்து, அதில் புதியதாக ஏதேனும் .exe பைல் ரன் ஆகி கொண்டிருக்கிறதா என பார்ப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலம். வழக்கமான பைல்களிலிருந்து வேறு...