Posts

Showing posts from December, 2011

Bsnl -ன் புதிய சலுகை..! நீங்கள் விருப்பபட்ட Bsnl எண்ணைத் தேர்வு செய்ய ஒரு அரிய வாய்ப்பு..!!!

Image
Bsnl -ன் புதிய சலுகை..! நீங்கள் விருப்பப்பட்ட Bsnl நம்பரைத் தேர்வு செய்ய ஒரு அரிய வாய்ப்பு.. வணக்கம் நண்பர்களே.. பதிவிட்டு நிறைய நாட்கள் ஆகிவிட்டது. இந்த செய்தியை படித்தவுடன் நமது சாப்ட்வேர் சாப்ஸ் வாசகர்களுக்கு பகிரலாம் என்ற ஒரு எண்ணம்.. பதிவிற்கு வருவோம்.. இந்தியாவின் அரசு நிறுவனமான BSNL ஓர் புதிய சலுகையை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது..ஆம். ஆன்லைன் மூலமாக நீங்கள் விருப்பப்பட்ட எண்ணைத் தேர்வு செய்ய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.. இதற்கு முன்பு ஆந்திராவில் இந்த வசதியை அறிமுகப்படுத்தி வெற்றி கண்ட பிறகு தற்போது இந்தியா முழுவதுமாக இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களாக 20 லட்சம் பேர் கிடைப்பார்கள் என்பது பி.எஸ்.என்.எல்-ன் கணிப்பு. இதைப்பற்றிய ஆங்கில அறிவிப்பை பாருங்கள்: “Enthused by the success of the scheme in Andhra Pradesh, BSNL has now decided to launch the scheme all over the country. BSNL will set targets for the scheme after watching the initial response. We expect that the scheme will attract more than 2

பிளாக்கரில் அலெக்ஸா விட்ஜெட் (alexa widget)சேர்ப்பது எப்படி?

Image
பிளாக்கரில் Alexa Widget சேர்ப்பது எப்படி? வணக்கம் நண்பர்களே..! இந்த பதிவில் நாம் காணவிருப்பது Alexa Widget -ஐ சேர்ப்பது என்பது எப்படி எனப்தைப் பற்றித்தான். முதலில் இந்த Alexa Widget எதற்கு என்று சொல்லிவிடுகிறேன். உங்கள் வலைபூ(Blog) அல்லது வலைதளம் (Website) இருக்கிறது இல்லையா ? அதன் தரத்தை அறிய இந்த விட்ஜெட் பயன்படுகிறது. ரேங்க் குறைந்தால் அதிக மதிப்புடையதாக கருத்தப்படும். நமது பள்ளிக்கூட ரேங் எப்படியோ அப்படி. சரி. இந்த அலெக்சா தளம் எப்படி இதை கணக்கிடுகிறது.. ? இந்த கேள்விக்கான பதிலுக்கு முன் இதையும் சொல்லிவிடுகிறேன். முதலில் இந்த அலெக்ஸா என்றால் என்று தெரிந்துகொள்வோம். அலெக்ஸா என்பது வலைளத்தங்களை தரத்தை அறிய தருவதற்காக Amazon நிறுவனத்தால் நடத்தப்படும் ஒரு வலைதளம். உங்கள் தளத்தில் தகவல்களைப் பெற்று இந்த (ரேங்கை)தரத்தை உங்களுக்கு கணக்கிட்டு தருகிறது. உங்கள் வலைதளத்திற்கு வருகை தரும் பார்வையாளரின் எண்ணிக்கை, பக்கப்பார்வைகள், எவ்வளவு நேரம் உங்கள் தளத்தில் பார்வையாளர் இருக்கிறார்கள் என்பதை கணக்கிட்டு அதன்படி உங்களுக்கு உங்களுடைய தளத்தின் அலெக்ஸா மதிப்பு எவ்வளவு என்பதை காட்டுகிறது. சரி.

Google Crome-ல் படங்களை பெரியதாக பார்க்க பயனுள்ள Plugin Hover Zoom!!

Image
கூகுள் குரோம் உலவிக்கான பயனுள்ள நீட்சி இது. நாம் வலையில் பார்க்கும் சிறிய படங்களைக் கூட பெரிதாக காட்டக்கூடிய நீட்சி இது.. நாம் வலையில் பார்க்கும் ப்ரொபைல் படங்கள் முதற்கொண்டு வலையில் இடம்பெற்றிருக்கும் அனைத்துப் படங்களை கிளிக் செய்து பெரிதாக காண முயற்சிப்போம். அவ்வாறு கிளிக் செய்யும் போது படமானது வேறொரு விண்டோவில் திறக்கும்.. அல்லது அதே பக்கத்திலேயே திறக்கும். பெரிய படமாக இருந்தால் திறக்கும் நேரம் அதிகரிக்கும்.  இதைத் தவிர்க்கவும். வேறொரு விண்டோவில் திறக்காமல் அதே விண்டோவில் படத்தின் மீது சுட்டெலியை வைக்கும்போது அந்தப் படம் பெரிதாக உடனேயே காட்சியளிக்ககூடிய வகையில் இந்த (Plugin) நீட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த பிளக் இன் இணைக்க இங்கு செல்லவும்.  https://chrome.google.com/webstore/detail/nonjdcjchghhkdoolnlbekcfllmednbl உங்கள் கூகுள் குரோம் பிரௌசரில் இந்த இணைப்பின் வழியாக செல்லவும்.  அங்கிருக்கும் Add to Chrome என்பதை கிளிக் செய்யுங்கள்.. Confirm Installation என்றொரு பெட்டி தோன்றும்.  அதில் Install என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.  அவ்வளவுதான். இனி உங்கள் பிரௌசரில் இந்த நீட்சி சேர்ந்துவிடும்