இன்டர்நெட் வேகம் அதிகரிக்கச் செய்வது எப்படி?

speedup your computer 2018


இன்று JIO நெட்வொர்க் முதற்கொண்டு அதிகமான இணைய சேவை வழங்குநர்கள் அதிகவேக இணைய இணைப்பை வழங்குவதாக கூறுகின்றனர். ஆனால் அது உண்மையா? எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியான சீரான இணையவேகம் உள்ளதா? என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் பதில் வரும். ஒரு சில பகுதிகளில் இணையத்தின் வேகம் மிக குறைவாக இருக்கிறது. அப்படிப்பட்ட நேரங்களில் முக்கியமான வேலைகள் ஏதேனும் இருப்பின் இணைய வேகத்தால் அதிகமான மன அழுத்தம் உருவாகி, அதனால் செய்ய வேண்டி வேலைகள் பாதிக்கப்படுகிறது.

சரி, அதுபோன்ற சமயங்களில் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்கச் செய்து பயன்படுத்துவது எப்படி என்பதை அறிந்துகொள்வோம்.

கம்ப்யூட்டரில் இன்டர்நெட்வேகம் அதிகரிக்கச் செய்வது எப்படி?



1. வைஃபை மூலம் இன்டர்நெட் பயன்படுத்திடும்பொழுது அதன் வேகம் இயல்பாகவே 30% குறைகிறது. அதனால் முடிந்தளவு வைஃபை பயன்படுத்தாமல் ஈதர்நெட் கேபிள் பயன்படுத்துவதன் மூலம் இணைய வேகத்தை அதிகப்படுத்தலாம்.
2. பழைய ரவுட்டர்களை பயன்படுத்துவோருக்கு இணைய வேகம் குறையும். நல்ல தரமான ரவுட்டர்களை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் இணைய வேகத்தை அதிகரித்திடலாம். தரமான ரவுட்டர்கள் 3000 முதல் 4000 ரூபாய்க்கு கிடைக்கிறது.
3. தொடர்ந்து சில மணிக் கணக்கில் இன்டர்நெட் பயன்படுத்திடும்பொழுது வேகம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே தொடர்ச்சியாக பயன்படுத்திடும்பொழுது ஒரு முறை ரவுட்டரை ரீஸ்டார்ட் செய்வது நல்லது. இதன் மூலம் இணைய வேகம் அதிகரித்திடும்.
4. ரவுட்டரை உயரமான இடங்களில், தடையேதும் இல்லாத இடங்களில் வைத்திட்டால் இணைய வேகம் சற்று அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

மொபைல் போனில் இன்டர்நெட் வேகம் அதிகரித்திட



5. மொபைல் போனில் இன்டர்நெட் பயன்படுத்திடும்பொழுது, அதை ஒருமுறை ரீஸ்டார்ட் செய்து பயன்படுத்தினால் முன்பு இருந்ததைவிட , அதிக நெட் வேகம் கிடைத்திடும்.
6. தேவையற்ற ஆப்களை அன்இன்ஸ்டால் செய்தன் மூலம் இன்டர்நெட் பயன்பாட்டை குறைக்கலாம்.
7. இன்டர்நெட் ஸ்பீட் அதிகரிச்சச் செய்வதற்கு உதவும் ஆன்ட்ராய்ட் ஆப் பயன்படுத்தி INTERNET SPEED அதிகரிக்கச் செய்திடலாம்.
8. Maximam Loading Option ஐ எனேபிள் செய்வதன் மூலம் இணைய வேகம் அதிகரித்திடும்.
9. இன்டர்நெட் கனெக்சனை ஒருமுறை ஆப் செய்து, ஆன் செய்வதன் மூலம் இணைய வேகம் அதிகரித்திடும்.
10. மொபைல் பிரௌசர் Cache ஐ நீக்குவதன் மூலம் இணைய வேகத்தினை அதிகப்படுத்திடலாம்.

மேலும் இன்டர்நெட் செய்திகளை படிக்க இங்கே அழுத்தவும்

#Internet Speedup #Speedup Internet #Internet Tips #JIO

Comments

Popular posts from this blog

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

ஆண்ட்ராய்ட் விட்ஜெட் - சில பயனுள்ள தகவல்கள்

வடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்