கணினியில் புரோகிராம்களை வேகமாக திறக்க

ஒவ்வொரு முறையும் நாம் கணினியில் பணியாற்றி கொண்டிருக்கும்பொழுது, வேறு தேவைகளுக்காக மற்ற புரோகிராம்களையும் திறந்திடுவோம். 

அதுபோன்ற சமயங்களில் ஸ்டாரட் பட்டனை இயக்கி, All Programs சென்று அந்த புரோகிராமைப் பெற்றிடுவோம். 

அல்லது மை கம்ப்யூட்டர் சென்று, அங்குள்ள புரோகிராம் ஒன்றினை திறந்திடுவோம்.
quick-program-launcher-logo

இப்படி வேலை செய்யும் பக்கத்திலிருந்து, புதியதாக ஒரு புரோகிராமினைத் திறந்திட சுற்றுவழிகளைப் பயன்படுத்திடுவோம்.

அவ்வாறில்லாமல் நினைத்த உடனேயே ஒரு புரோகிராமினைத் திறந்திட ஒரு மென்பொருள் நமக்கு உதவுகிறது. 

மென்பொருளின் பெயர்: லான்சி (Launchy)

இந்த மென்பொருளினை கணினியில் நிறுவிக்கொண்டால் போதுமானது. 

மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய சுட்டி: Launchy

மென்பொருளைத்தரவிறக்கம் செய்து நிறுவியவுடன், System Tray யினுள் வந்து அமர்ந்துகொள்ளும். 

பிறகு Alt+Enter அழுத்தினால் படத்தில் உள்ளதுபோல உங்களுக்கு புதிய விண்டோ தோன்றும். 


அதில் உங்களுக்கு வேண்டிய மென்பொருளின் பெயரை தட்டச்சிடும்பொழுது அந்த் மென்பொருளை வரிசைப்படுத்திக் காட்டும்.

தேவையான புரோகிராமினை தேர்வு செய்து என்டர் கொடுப்பதன் மூலம் அப்புரோகிராம் உடனடியாக திறந்துவிடும். 

உதாரணமாக உங்களுக்குப் போட்டோஷாப் புரோகிராமினைத் திறந்திட வேண்டுமெனில் Photoshop என தட்டச்சிடும்பொழுதே அந்த மென்பொருள் புரோகிராம் தோன்றிடும் அதை தேர்வு செய்து என்டர் கொடுத்தால் அந்த புரோகிராம் திறந்திடும். 

It is a quick launch program. It  helps us to launch a program in quickly when we working on other programs or applications in our pc. 

Tags: quick program launcher, program launcher, lunchy software, program launch software, free program launcher apps.

Comments

Popular posts from this blog

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

ஆண்ட்ராய்ட் விட்ஜெட் - சில பயனுள்ள தகவல்கள்

வடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்