உலகை அச்சுறுத்தும் புதிய மால்வேர் - எச்சரிக்கை தகவல்

ரேன்சம்வேர் உலகை ஒரு கலக்கி கலக்கி அடங்கும் வேளையில் தற்பொழுது புதிய ரஸ்ய மால்வேர் ஒன்று மிக விரைவாக பரவிவருவதாக கணினி பயர்களுக்கு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது FBI.

இந்த மால்வேரால் இதுவரை 6 லட்சத்திற்கு அதிகமான கணினிகள் - ரௌட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வல்லுநனர்கள் தெரிவிக்கின்றனர்.

VPN Filter என்று அழைக்கப்படும் இந்த மால்வாரானது, தொடர்புகளை சேகரிக்கவும், பிற கணினிகளைத் தாக்கவும், அந்த கணினிகளை முடக்கவும் செய்யக்கூடியது.

vpn filter malware attacks


கணினி பயனர்கள் தங்களது Router களை ரீபூட் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது FBI அமைப்பு.

இந்த மால்வேர் தாக்குதல் Router ன் மெமரியில் உட்கார்ந்துகொள்கிறது. எனவே ரவுட்டரை ரீபூட் செய்திடும்பொழுது தற்காலிகமாக இந்த வைரஸ் அகற்றப்படுகிறது.

எனினும் முழுவதுமாக அகற்ற வேண்டுமெனில் Malware Bytes போன்ற மென்பொருட்களை பயன்படுத்த வேண்டும். அல்லது Router ன் Factory Settings ஐ Reset செய்ய வேண்டும்.

Symantic நிறுவனம் இந்த விபிஎன் ப்ல்டர் மால்வேரால் எந்தெந்த வகையான கருவிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதை தொகுத்து வெளியிட்டுள்ளது.  அதை பற்றி தெரிந்துகொள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

Comments

Popular posts from this blog

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

ஆண்ட்ராய்ட் விட்ஜெட் - சில பயனுள்ள தகவல்கள்

வடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்