ஸ்பேம் அழைப்புக்களை தடுத்திட - ஆன்ட்ராய்ட் ஆப்

தொல்லை தரும் விளம்பர அழைப்புகளை தடுப்பதறகென கூகிள் புதிய அப்ளிகேஷன் ஒன்றினை வெளியிட்டுள்ளது. "போன்" என்ற அந்த அப்ளிகேஷன் உங்களுக்கு வரும் "SPAM" அழைப்புகளை ஃபில்டர் செய்து தடுக்கும் வசதியை கொண்டுள்ளது.

thevaiyatra alaipugalai thidukka

இதற்கு முன்பு பீட்டா வர்சனில் சோதிக்கப்பட்ட இந்த செயலி தற்பொழுது பயனர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு Called ID and Spam Protection என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தேவையற்ற கால்களை தானாகவே பிரித்து தடுத்து விடலாம்.

இந்த சேவை ஆனில் இருக்கும் போது, ஒரு அழைப்பை உருவாக்கும் போதும், பெறும் போதும் காண்டாக்ட் லிஸ்டில் இல்லாத அழைப்பாளர்கள் அல்லது தொழில் சார்ந்த அழைப்புகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

 இதுகுறித்து எச்சரிக்கை தகவல் நமக்கு கிடைக்கும். இதனை ஆக்டிவேட் செய்ய 3 வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

செட்டிங்ஸ் சென்று, ’காலர் ஐடி மற்றும் ஸ்பாம்’ சேவையை ஆன் செய்ய வேண்டும். தேவையற்ற அழைப்புகள் வராமல் இருக்க பில்டரில் ஸ்பாம் கால்களை ஆன் செய்திருந்தால் போதும்.

இது தனி நபரின் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். தற்போது தேவையற்ற அழைப்புகளை எச்சரிக்கும் வகையில், ‘போன்’ ஆப்பின் முகப்பு பக்கம் சிவப்பு நிறத்தில் மாறுகிறது.

இருப்பினும் முழுமையாக பயன்பாட்டுக்கு வராததால், இதன் செயல்பாடு மற்றும் திறன் குறித்து இன்னும் தெரியவில்லை.

Comments

Popular posts from this blog

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

ஆண்ட்ராய்ட் விட்ஜெட் - சில பயனுள்ள தகவல்கள்

வடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்