பேஸ்புக் வீடியோக்களை டவுன்லோட் செய்ய பயன்படும் இணையதளம்

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு வழிகள் உள்ளதைப் போன்றே பேஸ்புக்கில் நண்பர்களால் பகிரப்படும் வீடியோக்களையும் எளிதாக டவுன்லோட் செய்ய முடியும்.

பேஸ்புக் வீடியோக்களை டவுன்லோட் செய்ய ஒரு சில இலவச மென்பொருட்கள் உள்ளன. ஆனால் அம்மென்பொருட்களை தரவிறக்கம் செய்து, அதை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்த பிறகே பயன்படுத்த முடியும்.

facebook-videokkalai-download-seivathu-eppadi



உடனடியாக பேஸ்புக் வீடியோக்களை டவுன்லோட் செய்ய வேண்டும் எனில் கீழே குறிப்பிட்டுள்ள இணையதளம் பயன்படும்.

இணையதளத்தின் முகவரி: http://www.downvids.net/

இந்த தளத்தில் சென்று, நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டிய வீடியோவின் லிங்கை கொடுத்து, அருகில் உள்ள Download பட்டனை அழுத்தினால் போதும்.
(உதாரணத்திற்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தினை பார்க்கவும்.)

அதன் பிறகு ஓரீரு வினாடிகளில், உங்களுக்கு அந்த வீடியோவை தரவிறக்கம் செய்வதற்கான லிங்க் கிடைக்கும். அந்த லிங்கை கிளிக் செய்து வீடியோவை சேமிக்கலாம்.

அல்லது அந்த லிங்கின் மீது கிளிக் செய்து, Save As Link என்பதைத் தேர்ந்தெடுத்தும், வீடியோவை உங்கள் கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்துகொள்ள முடியும்.

இதையும் வாசிக்கலாமே..!: ஆண்ட்ராய்ட் மொபைல்களில் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய பயன்படும் மென்பொருள்

நன்றி.

- சுப்படு

Comments

Popular posts from this blog

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

ஆண்ட்ராய்ட் விட்ஜெட் - சில பயனுள்ள தகவல்கள்

வடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்