`உங்கள் அன்புக்கு நன்றி! நீண்ட இடைவெளி எடுத்துக்கொள்கிறேன்’ - கேரள `டிக் டாக்' புகழ் சிறுமி மர்ம நோயால் மரணம்

டிக்டாக் செயலி பயன்படுத்துபவர்களுக்கு ஆருணியை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. கேரளாவைச் சேர்ந்த 9 வயது சிறுமியான ஆருணியின் வீடியோக்கள் டிக்டாக்கில் ஏக பிரபலம். மலையாள பாடல் பிண்ணி வீடியோக்களில் ஆருணி கொடுக்கும் முகபாவனைகளுக்கு ரசிகர்கள் ஏராளம். `இனி அவர் அந்த வீடியோவிலும் தோன்றமாட்டார்’ என்பது தான் காலம் அவளுக்கு கொடுத்த கொடுமையான பரிசு.

கடந்த சில மாதங்களாகவே கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்டார் ஆருணி. அதற்கு இன்ன காரணமென கடைசிவரைக்கும் கண்டுபிடிக்கவே முடியவில்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம்.

tiktok aaruni



இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்ந்திருந்தார். ஆனால் அவருக்கு உள்ள பிரச்னை கண்டறியபடவில்லை.  இருப்பினும் அவரது தலைவலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  ஆனால் நிலைமை கையை மீறிப்போக சிகிச்சையிலிருக்கும்போதே, ஆருணியின் உயிர் பிரிந்தது.

இன்ன நோய் என்றே தெரியாமல் உயிரிழந்துவிட்டாள் அந்த ஸ்பால்ன் சிறுமி.  அவருக்கு மூளையில் ஏதோ ஒரு பிரச்னை இருந்ததாகவும், அதை மருத்துவர்களால் சரியாக கண்டறியமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

aaruni tiktok

கடந்தாண்டுதான் அவரது தந்தை சௌதி அரேபியாவில்  உயிரிழந்தார். இந்நிலையில் அவரும் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  4ம் வகுப்புப் படித்து வந்த அவருக்கு டிக்டாக்கில் மட்டும் 15,000-த்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர்.

அவரது டிக்டாக் பயோவில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் `உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி..நீண்ட இடைவெளி எடுத்துக்கொள்கிறேன்'. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். 

Comments

Popular posts from this blog

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

ஆண்ட்ராய்ட் விட்ஜெட் - சில பயனுள்ள தகவல்கள்

வடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்