இன்டர்நெட் வேகம் அதிகரிக்கச் செய்வது எப்படி?

இன்று JIO நெட்வொர்க் முதற்கொண்டு அதிகமான இணைய சேவை வழங்குநர்கள் அதிகவேக இணைய இணைப்பை வழங்குவதாக கூறுகின்றனர். ஆனால் அது உண்மையா? எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியான சீரான இணையவேகம் உள்ளதா? என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் பதில் வரும். ஒரு சில பகுதிகளில் இணையத்தின் வேகம் மிக குறைவாக இருக்கிறது. அப்படிப்பட்ட நேரங்களில் முக்கியமான வேலைகள் ஏதேனும் இருப்பின் இணைய வேகத்தால் அதிகமான மன அழுத்தம் உருவாகி, அதனால் செய்ய வேண்டி வேலைகள் பாதிக்கப்படுகிறது. சரி, அதுபோன்ற சமயங்களில் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்கச் செய்து பயன்படுத்துவது எப்படி என்பதை அறிந்துகொள்வோம். கம்ப்யூட்டரில் இன்டர்நெட்வேகம் அதிகரிக்கச் செய்வது எப்படி? 1. வைஃபை மூலம் இன்டர்நெட் பயன்படுத்திடும்பொழுது அதன் வேகம் இயல்பாகவே 30% குறைகிறது. அதனால் முடிந்தளவு வைஃபை பயன்படுத்தாமல் ஈதர்நெட் கேபிள் பயன்படுத்துவதன் மூலம் இணைய வேகத்தை அதிகப்படுத்தலாம். 2. பழைய ரவுட்டர்களை பயன்படுத்துவோருக்கு இணைய வேகம் குறையும். நல்ல தரமான ரவுட்டர்களை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் இணைய வேகத்தை அதிகரித்திடலாம். தரமான ரவுட்டர்கள் 3000 முதல் 4000 ரூபாய்க்கு கிடைக...