அரைமணி நேரத்தில் உலகத்தை சுற்றி வர வாகனம்

உலகத்தில் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல வேண்டுமென்றால் ஒன்றிலிருந்து பல நாட்கள் ஆகிறது. ஏன்? மாதக் கணக்கில் கூட ஆகிவிடும். அப்படி இல்லாமல் நினைத்தவுடன் அரை மணி நேரத்திற்கு உள்ளாக உலகின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்லக்கூடிய வாகனமொன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளது Spacex நிறுவனம்.

travel with 30 mintues in the world


நிலவுக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் செல்லகூடிய பிக்பக்கெட் ராக்கெட் மாதிரியை வைத்து அந்த வாகனம் உருவாக்கப்பட விருப்பதாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

பூமியிலிருந்து வேற்று கிரகத்திற்கு ராக்கெட்டை அனுப்பும்பொழுது பூமியின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு அனுப்ப முடியாதா? என்ற கேள்வியின் விளைவாக எழுந்ததுதான் இந்த வாகன தயாரிப்புக்கான மையகரு என்றார்.

இது தொடர்பான வீடியோ ஒன்றினை அவர் வெளியிட்டுள்ளார். அதில் பயணிகள் ராக்கெட்டில் ஏறி, அரை மணி நேரத்திற்கு உள்ளாக உலகின் அடுத்த பகுதியில் உள்ள நகரத்திற்கு அது சென்றடைகிறது.

வீடியோ: 
வீடியோவில் நியூயார்க் நகரிலிருந்து ஷாங்காய் நகருக்கு பறப்பது போல உள்ளது. மணிக்கு 27000 கிலோமீட்டல் வேகத்தில் செல்லக்கூடிய அந்த வாகனம் வெறும் 39 நிமிடங்களில் அந்த இடத்தைச் சென்று அடைகிறது.

Comments

Popular posts from this blog

இலவச மென்பொருட்களின் நந்தவனம்...

போட்டோவை ஓவியமாக மாற்றிட மென்பொருள்

குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகள்