ஆன்ட்ராய்ட் டூ கம்ப்யூட்டர் இணைய இணைப்பு கொடுப்பது எப்படி?

ஆன்ட்ராய்ட் போனிலிருந்து கம்ப்யூட்டருக்கு (PC) க்கு எப்படி இணைய இணைப்பு கொடுப்பது என்பதை தெரிந்துகொள்வோம். பெரும்பாலானவர்களுக்கு இது தெரியும் என்றாலும், புதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு ஸ்மார்ட் போனுடன் கம்ப்யூட்டரை கனெக்ட் செய்ய இரண்டு விஷயங்கள் தேவைபடும்.

1. Wi-Fi 
2. USB Cable 

இதில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி சர்வ சதாரணமாக இணைய இணைப்பை ஏற்படுத்திவிடலாம்.

USB Cable வழியாக :

முதலில் எந்த ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்துகிறீர்களோ அதற்கான USB Driver -ஐ கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். ஏற்கனவே USB Driver நிறுவப்பட்டிருந்தால் டவுன்லோட் செய்யத் தேவையில்லை.

Update: தற்பொழுது வரும் ஸ்மார்ட்போன்களில் இந்த வசதியை பயன்படுத்துவதை எளிமையாக்கி இருக்கின்றனர். யூஎஸ்பி கேபிள் மூலம் கம்ப்யூட்டரை இணைத்து Tethering என்பதை செயல்படுத்தினால் போதும். இணைய இணைப்பை பெற்றுவிட முடியும்.



USB Driver டவுன்லோட் செய்ய இணைப்புகள்: 
இணைய இணைப்பை ஏற்படுத்த வழிமுறைகள்: 

1. ஆண்ட்ராய்ட் போனில் Settings தட்டவும்
2. செட்டிங்சில் Wireless & Networks தட்டவும்
3. அடுத்து tethering & Portable என்பதை தொடவும்
4. அடுத்து USB tethering என்பதை தொடவும்.
5. அடுத்து Tethering என்ற தலைப்பின் கீழ் Any ongoing operations such as media transfer, phone software update, backup and restore will be interrupted எனக் கேட்கும். 
அதில் OK தட்டி, வெளியில் வரவும். 

இனி, கம்ப்யூட்டரில் இணைய இணைப்பை ஏற்படுத்திப் பாருங்கள். நிச்சயமாக ஆண்ட்ராய்ட் போனில் உள்ள இணைய இணைப்பானது கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டு, வலைப்பக்கங்கள் திறக்கும்.

Android to PC Via Wifi

வைஃபை வழியாக எப்படி இணைய இணைப்பு பெறுவது என்பதை பார்ப்போம்.


Tags: Android to Computer, Internet Connection, WiFi, USB cable, Wireless, Network, Portable, Phone software, Media Transfer, FTP, Mobile Phone Internet.

Comments

  1. Really use full tips thanks dear...!!!!!!!!

    ReplyDelete
  2. பிராடுபேண்டு இணைப்பை பயண்படுத்தி ஆன்ட்ராய்ட் போனில் இிணையத்தை பயண்படுத்துவது எப்படி ( wi-fi இல்லாமல் ) ( how to connect my pc to the internet using your android with usb)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

ஆண்ட்ராய்ட் விட்ஜெட் - சில பயனுள்ள தகவல்கள்

வடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்