கம்ப்யூட்டரில் ஆன்ட்ராய்ட் கேம்ஸ் விளையாட

ஆன்ட்ராய்ட் போனில் விளையாட எண்ணற்ற கேம்ஸ்கள் உள்ளன. அவற்றை  கம்ப்யூட்டரில் விளையாட முடியுமா? முடியும் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விளக்கங்களை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

கம்ப்யூட்டரில்  ஆன்ட்ராய்ட் போனில் விளையாடக்கூடிய கேம்ஸ் ஆப்களை பயன்படுத்திட ஒரு மென்பொருள் உதவுகிறது Blue Stacks என்ற மென்பொருள். 

how-to-play-android-mobile-games-on-computer-step-by-step-guide
இதன் மூலம் ஆண்ட்ராய்ட் போனில் பயன்படுத்தப்படும் வீசாட் அப்ளிகேஷன் மற்றும் வாட்ஸ் அப் போன்ற அப்ளிகேஷன்களையும் (WeChat and WhatsUp apps) கம்ப்யூட்டரில் பயன்படுத்த முடியும். 

எப்படி பயன்படுத்துவது?

1. புளூ ஸ்டாக் அப்ளிகேஷனை டவுன்லோட் - இன்ஸ்டால் செய்யவும்.


2. இன்ஸ்டால் செய்த அப்ளிகேஷனை ஓப்பன் செய்யவும். 
புளூஸ்டாக் மென்பொருளை நிறுவிய பிறகு, முதலில் புளூஸ்டாக் மென்பொருளை திறக்கும்பொழுது அதனுடைய டேட்டாபேஸ், மற்றும் பகுதி கூறுகள் (Database and Components )லோட் ஆகி வர ஒரு சில நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். அதுவரைக்கும் பொறுமையாக காத்திருக்க வேண்டும். உங்களுடைய இணைய இணைப்பின் வேகத்திற்கேற்ப இந்த நேரம் மாறுபடும். )
3. திறந்த பிறகு அதில் உள்ள My Apps என்பதை கிளிக் செய்யவும். பிறகு அதன் கீழ் இருக்கும் app search என்பதை செலக்ட் செய்யுவும்.


4. செலக்ட் செய்த பிறகு ஒன்டைம் செட்டப் (One time setup) தோன்றும். அதில் கன்டினியூ கிளிக் செய்யுங்கள். 


5. அடுத்து உங்களுடைய கூகிள் அக்கவுண்ட்டில் லாகின் செய்யச்சொல்லிக் கேட்கும். உங்களுடைய கூகிள் அக்கவுண்டின் யூசர் நேம் பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்துகொள்ளுங்கள். 


6. பிறகு தோன்றும் சர்ச் பாக்சில் உங்களுக்கு வேண்டிய ஆண்டார்ய்ட் அப்ளிகேஷனின் பெயரைக் கொடுத்து தேடி Download செய்து இன்ஸ்டால் செய்யவும். 


7. இன்ஸ்டால் செய்த பிறகு, அந்த அப்ளிகேஷனை திறக்க, புளூஸ்டாக்ஸில் My apps பட்டனை கிளிக் செய்யவும்.


8. நீங்கள் இன்ஸ்டால் செய்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் அங்கு இருக்கும். அதை கிளிக் செய்து திறந்து பயன்படுத்தலாம். 



இந்த முறையில் கேம் ஆப் டவுன்லோட் செய்து விளையாடலாம். மெசேஜிக் ஆப்களை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். ஸ்மார்ட்போனில் பயன்படுத்தக் கூடிய அனைத்து ஆன்ட்ராய்ட் ஆப்களையும் "ப்ளூ ஸ்டாக்" வழியாக பயன்படுத்த முடியும்.

BlueStack குறித்த சில தகவல்கள்

ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கம்ப்யூட்டரில் பயன்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது BlueStack . உங்களது வசதிக்கேற்ப இதில் உள்ள செட்டிங்ஸ்களை மாற்றி அமைக்கத்துக்கொள்ளலாம். மிக எளிதாக பயன்படுத்தக்கூடிய இடைமுகம் (Easy User Interface) கொண்டது. 

ஒரு சில ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தும்பொழுது அப்ளிகேஷன் கிராஸ் ஆகிவிட வாய்ப்பும் உள்ளது. காரணம் இந்த மென்பொருள் தற்பொழுது பீட்டா வெர்சனில் இருப்பதால் இதுபோன்ற வழுக்கள் (Errors) தோன்றுவதும் இயல்புதான்.

முழுமையான புளூஸ்டாக் மென்பொருள் உருவாகும் வரை இதுபோன்ற பிழைகள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். 

அதேபோல இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவும்பொழுது, உங்களுடைய கிராபிக்ஸ்கார்டு புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருக்க வேண்டும் (New Updated Graphics card). மேம்படுத்தல் இல்லாத கிராபிக்ஸ் கார்ட் உள்ள கம்ப்யூட்டர்களில் இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்ய முடியாது.

அதற்கு உங்களுடைய கம்ப்யூட்டரில் உள்ள கிராபிக்ஸ்கார்ட் மாடலின் பெயரைத் தெரிந்துகொண்டு அதை அப்டேட் செய்துகொண்ட பிறகு, மீண்டும் புளூஸ்டாக் மென்பொருளை நிறுவிக் கொள்ள முடியும்.

Tags: bluestacks, android, smartphone, games software, android games in pc, play android games in computer, how to use android apps in computer, games apps in pc, graphics card, download android games in pc, play android games in pc.

Comments

  1. தனியாக பதிவிறக்கம் செய்த பயன்பாடுகளை, எவ்வாறு இதனுடன் இணைத்துப் பயன்படுத்துவது என்றும் சேர்த்துக் கூறுங்கள்!முன் நன்றிகள்!

    ReplyDelete
  2. மிக்க நன்றி வாழ்த்துகள்

    ReplyDelete
  3. மிக்க நன்றி வாழ்த்துகள்

    ReplyDelete
  4. Graphics card pathi oru virivana pathivai potuko bass

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

ஆண்ட்ராய்ட் விட்ஜெட் - சில பயனுள்ள தகவல்கள்

வடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்