ப்ளாக்கர் தளத்தில் மறுமொழி பெட்டி வைப்பது எப்படி?
நாளுக்கு நாள் தமிழ் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் தமிழ் வலைப்பூக்கள் (Tamil Blogger Blog) பெருகிக்கொண்டே வருகிறது.
உலகளவில் ஒப்பிடும்பொழுது தமிழ் வலைப்பதிவுகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வளர்ந்து தனக்கென தனி இடத்தினைப் பெற்றுள்ளது.
வேறெங்கும் இல்லாத அளவிற்கு "தமிழ் வலைப்பதிவர்கள்" சந்திப்பை (Blogger Meetup) ஏற்படுத்தி, அவர்களுகிடையேயான கருத்துகள், நட்பு பரிமாற்றங்களை செய்துகொள்கின்றனர்.
வேறெங்கும் இல்லாத அளவிற்கு "தமிழ் வலைப்பதிவர்கள்" சந்திப்பை (Blogger Meetup) ஏற்படுத்தி, அவர்களுகிடையேயான கருத்துகள், நட்பு பரிமாற்றங்களை செய்துகொள்கின்றனர்.
உலகிலேயே பதிவர்கள் சந்திப்பை (Bloggers Meetup) ஏற்படுத்தியது தமிழ் வலைப்பதிவர்களாகதான் இருக்கும்.
அவ்வாறு உள்ளன்போடு பதிவுகளை எழுதி வெளிப்படுத்தி வரும் பதிவர்கள் "தமிழில் மறுமொழியிட" போதுமான வசதியை "ப்ளாக்கர்" ஏற்படுத்தித் கொடுக்கவில்லை..
ஆனால் அதை சாத்தியப்படுத்தியிருக்கிறார், சக வலைப்பதிவரும் நுட்பவியலாளருமான நண்பர் "நீச்சல்காரன்".
ஆனால் அதை சாத்தியப்படுத்தியிருக்கிறார், சக வலைப்பதிவரும் நுட்பவியலாளருமான நண்பர் "நீச்சல்காரன்".
தமிழ் மறுமொழிப் பெட்டியை வலைப்பூவில்(பிளாக்கரில்) கொண்டு வருவது எப்படி?
முதலில் உங்களுடைய வலைப்பூவில் லாகின் செய்துகொள்ளுங்கள்.
அடுத்து கமெண்ட் செட்டிங்ஸ் மாற்ற வேண்டும். அதற்கு Settings ல் Post And comments கிளிக்செய்யுங்கள்.
அடுத்து கமெண்ட் செட்டிங்ஸ் மாற்ற வேண்டும். அதற்கு Settings ல் Post And comments கிளிக்செய்யுங்கள்.
Comments பகுதியில் Popup என்பதைத் தேர்ந்தெடுத்து மாற்றத்தை சேமித்து விடுங்கள்.
பிறகு Template கிளிக் செய்து வார்ப்புருவை "பேக்அப்" எடுத்துக்கொள்ளுங்ள்.
அடுத்து வார்ப்புருவில் தேவையான நிரல்வரிகளைச் சேர்க்கவேண்டும்.
அதனால் EDIT HTML கொடுத்து
<div class='post-footer'> என்ற வரியைக் கண்டுபிடித்து அதற்கு மேல் கீழ்கண்ட நிரல் வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்துகொள்ளுங்கள்.
அல்லது <data:post.body/> என்ற நிரல்வரியைக் கண்டுபிடித்து அதற்கு கீழாக கீழ்க்கண்ட நிரல்வரிகளை காப்பி பேஸ்ட் செய்துகொள்ளுங்கள்.
இறுதியாக செய்த மாற்றங்களை சேமித்துக்கொள்ளுங்கள். இனி உங்கள் பிளாக்கர் தளத்தில் தமிழிலேயே வாசகர்கள் கருத்திட முடியும். அதற்காக தனியாக எந்த ஒரு தமிழ் எழுதி மென்பொருளையும் பயன்படுத்த தேவையில்லை.
இம்மறுமொழிப் பெட்டியின் பயன்கள்:
- தமிழில் கருத்திடலாம்.
- தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டியதில்லை.
- தமிழில் தட்டச்சிட Ctrl+G அழுத்தி ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி தமிழ் வார்த்தைகளை தட்டச்சிடலாம். (amma=அம்மா)
- ஆங்கிலத்திற்கு மாற மீண்டும் ஒருமுறை Ctrl+G போதுமானது.
- தமிழில் கருத்திட நினைப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பலருக்கும் பயன் தரும் எல்லோருக்கும் தெரிந்த (மிகவும் தாமதமான) பகிர்வு... நன்றி...
ReplyDeleteநன்றி தனபாலன் சார். புதியவர்களுக்குப் பயன்படும் என்பதால் பகிர்ந்தேன்...
ReplyDeleteபிரபல பதிவர்களின் தளத்திலும் கூட இதுபோன்ற தமிழ்மறுமொழிப் பெட்டி இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஒரு சில பதிவர்களைத் தவிர்த்து பல பதிவர்களுக்கு இதுபோன்ற வசதி இருப்பதே தெரியவில்லை என்பதுதான் உண்மை.
வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி...!!!