மொபைல் போனில் வீடியோ பார்த்திட உதவும் யூடியூப் ஆன்ட்ராய்ட் செயலி

மொபைல் போனில் YOUTUBE வீடியோ பார்த்திட உதவும் செயலி YouTube Android App. இந்த App பயன்படுத்துவதன் மூலம் வீடியோ பார்ப்பது, வீடியோ அப்லோட் செய்வது போன்ற செயல்களை மேற்கொள்ளலாம்.

யூட்யூப் வீடியோவை எந்த தங்கு தடையின்றி பார்க்க முடியும்.

youtube application for android


இம்மென்பொருளை நீங்கள் பயன்படுத்துவதால் வீடியோக்களைத் தெளிவாக பார்க்க முடிவதுடன், நீங்கள் உங்களுடைய செல்போனில் வைத்திருக்கும் வீடியோக்களையும் யூடியூப் தளத்தில் தரவேற்றம் (Upload Videos) செய்துகொள்ள முடியும்.

இம்மென்பொருள் மூலம் நீங்கள் மில்லியன் கணக்கான வீடியோக்களை பிரௌஸ் செய்து (Most Viewed, Top Rated, Day Featured Videos) பார்க்க முடியும்.

உங்களுடைய செல்போன் மூலமே யூ டியூப் அக்கவுண்டில் லாகின் செய்து உங்களுடைய வீடியோக்கள், உங்களுடைய Favorites Videos, Playlists Video-க்களை அணுக முடியும்.

மற்ற பயனாளர்களின் வீடியோக்களையும் பகிர முடியும். கருத்திட முடியும்.

Search - தேடு பெட்டியின் மூலம் நீங்கள் விரும்பு வகையில் உள்ள வீடியோக்களைத் தேடி காண முடியும்.

நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோக்களைப் போன்று உள்ள மற்ற வீடியோக்களையும் (Related Videos) பார்த்து மகிழ முடியும்.

இது முற்றிலும் கூகிள் வழங்கும் இலவச சேவை.

இந்த Android App Install செய்திட சுட்டி: Download and Install YouTube Android app

குறிப்பு: தற்பொழுது வெளிவரும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இந்த ஆப் இயல்பிருப்பாக (Pre Installed) அமைந்துள்ளது. எனவே தனியாக இந்த ஆப் ப்ளே ஸ்டோரிலிருந்து டவுன்லோட் செய்திட தேவையில்லை.

Tags: Android App, YouTube Android App, Smartphone.


Comments

Popular posts from this blog

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

கூகுள் ட்ரைவ் என்றால் என்ன? இதனால் என்ன பயன்?

ட்விட்டர் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி?