Gmail-ன் புதிய தோற்றத்தை உடனடியாக பெற..!!

நமக்கு கூகுள் அளிக்கும் பயனுள்ள தளங்கள் பலவகையிருப்பினும், உலகில் அதிகம் விரும்பப்படுவதும்-பயன்படுத்தப்படுவதும் இந்த G-Mail ஒன்றுதான். இந்த ஜி-மெயில் தன்னில் ஒரு புதிய மாற்றத்தை, தோற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. கூகிள் தரும் பல பயனுள்ள தளங்களை புதிய புதிய மாற்றங்களை கொண்டுவந்து கொண்டிருப்பது உங்களுக்கும் தெரியும். மாற்றம் ஒன்றே முன்னேற்றத்துக்கு வழி என்பது போல நம்முடைய ஜிமெயிலில் என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கிறது என்பதை இப்பதிவின் மூலம் காணலாம்.

அனைவரும் பயன்படுத்தும் இந்த ஜிமெயிலின் புதிய இலகுவான தோற்றத்தை பெற

1. நீங்கள் உங்கள் கணக்கில் நுழைந்தவுடன் ஜிமெயில் பக்கத்தின் வலது மூளையில் switch to the new என்றொரு விருப்பம் காட்டப்படும்.

switch-to-the-new-look-image


2. அதில் கிளிக் செய்தால் இவ்வாறான படம் தோன்றும்.

gmail_getting_a_new_look_image
இதில் தொடர்ந்து புதிய மாற்றத்தை விரும்பினால் switch to the new look , என்பதையும், விருப்பமில்லையெனில் continue to the old look என்பதையும் கிளிக் செய்யலாம்.

3. switch to the new look கிளிக் செய்த பிறகு,

welcome-to-gamilt-he-new-look-image

இதில் என்னென்ன புதிய மாற்றங்கள் இருக்கிறது என்று பட்டியலிட்டு காட்டப்பட்டிருக்கும். இந்த இணைப்புச் சுட்டியை அழுத்தி வேண்டும் விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது அருகில் காட்டப்பட்டிருக்கிற வீடியோ கோப்பை இயக்கி தெரிந்துகொள்ளலாம். 


கீழிருக்கும் continue to the new look என்பதை கிளிக் செய்தால் ஜிமெயில் புதிய தோற்றம் கிடைத்திருக்கும். 

புதிய தோற்றத்தில் இன்னும் என்னென்ன புதிய வசதிகள் இருக்கின்றன என்பதை ஜிமெயில் வலது மூலையில் இவ்வாறு இருக்கும் படத்தில் 

about-the-new-look-image

About the new look என்பதை கிளிக் செய்வதன் மூலம் இன்னும் விரிவான தகவல்களைப்பெற முடியும். புதிய தோற்றத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்களை அளிக்க send feedback என்பதை அழுத்தி உங்கள் கருத்துக்களை பகிரலாம். 

புதிய தோற்றத்தைப் பெற்ற பிறகு உங்கள் ஜிமெயில் பக்கம் இவ்வாறு காட்சியளிக்கும். 

புதிய மாற்றத்திலுள்ள சிறப்பு ஒன்றை மட்டும் இங்கு ஒப்பிட்டு காட்டியுள்ளேன். இதில் விருப்பங்கள் அனைத்தும் ஐகான்களாக வைக்கப்பட்டுள்ளன. விரைவில் செயல்பட இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு வேண்டாத மின்னஞ்சலை அழிக்க delete என்பதை எழுத்துக்களாக தேடிபிடிப்பதைக் காட்டிலும், படமாக பார்த்து செய்வதில் மிகவும் எளிது. இது ஒன்றே போதும் புதிய மாற்றத்தின் சிறப்புகளை எடுத்துரைக்க.


different between the old and new menu buttons of gmail

புதிய மாற்றத்தில் சில நன்மைகள்: 

1. கண்ணுக்கு நல்ல தெளிவான தோற்றத்தை தருகிறது. எந்த ஒரு உறுத்தல் இல்லாமல் இனி ஜிமெயிலைக் காணலாம். 

2. மெதுவாக செயல்படும் இணைய இணைப்பிலும் துரிதமாக ஜிமெயிலைத் திறக்க முடியும். 

3. பெருமளவு உள்ள அனைத்து விருப்பங்களையும் எழுத்துக்களிலிருந்து ஐகானாக(சிறிய படங்களாக) வைத்திருப்பதால் எளிதாக, ஒவ்வொரு செயலையும் செய்யமுடியும். இதுதான் புதிய மாற்றத்தில் இருக்கும் சிறப்பு ஆகும். 


மேலும் பல பதிய மாற்றங்கள் நம்மை கவரும் விதத்தில் அட்டகாசமாய் அமைந்திருக்கிறார்கள். உங்களுக்கு வேண்டிய புதிய தீம்களைக் கூட மாற்றி அமைத்து உங்கள் மின்னஞ்சல் பக்கங்களை (கலர்புல்லாக) வண்ணமயமாக மாற்றிக்கொள்ளலாம்.


அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது settings என்ற ஐகானை கிளிக் செய்தால் இவ்வாறான படம்தோன்றும்.



 அதில் themes என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும். 


G-mail themes (வார்ப்புரு) தோற்றங்கள்.




தோற்றத்தை (template)மாற்றி பிறகு..



வீடியோ உங்கள் பார்வைக்கு: 




மேலும் விபரங்கள் வேண்டுவோர் இந்த லிங்க் கிளிக் செய்வதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.. 

https://mail.google.com/support/bin/answer.py?answer=1357852&hl=en#options

என்ன நண்பர்களே ஒரு சில பேருக்கு இந்த விஷயங்கள் எளிமையாக தோன்றலாம். ஒரு சில பேருக்கு இது புதிதாக தோன்றலாம். பதிவு பயன்மிக்கதாக நீங்கள் கருதினால், உங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பதிவு பலரையும் சென்றடைய நீங்கள் உதவுங்கள். இன்ட்லி,  தமிழ்மணம், போன்ற எண்ணற்ற வலைதிரட்டிகள் உள்ளன. உங்களுக்குப் பிடித்த திரட்டிகளில் இணைத்துவிடுங்கள். நன்றி நண்பர்களே மற்றுமொரு நல்ல பயனுள்ள பதிவில் சந்திப்போம். அனைவருக்கும் வாழ்த்துகள்.

Comments

  1. நல்ல ,அழகான தொழில்நுட்ப பதிவு !மீண்டும் இதுபோன்ற நல்ல பயனுள்ள தகவல்களை தரவும்

    ReplyDelete
  2. தங்களின் கருத்துகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இது ​போன்ற பயனுள்ள தகவல்க​ளைத் ​தொடர்ந்து தரவும். இராமகிருஷ்ணன்

    ReplyDelete
    Replies
    1. முயற்சிக்கிறோம் ஐயா. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete

Post a Comment

Popular posts from this blog

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

ஆண்ட்ராய்ட் விட்ஜெட் - சில பயனுள்ள தகவல்கள்

வடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்