Posts

`உங்கள் அன்புக்கு நன்றி! நீண்ட இடைவெளி எடுத்துக்கொள்கிறேன்’ - கேரள `டிக் டாக்' புகழ் சிறுமி மர்ம நோயால் மரணம்

Image
டிக்டாக் செயலி பயன்படுத்துபவர்களுக்கு ஆருணியை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. கேரளாவைச் சேர்ந்த 9 வயது சிறுமியான ஆருணியின் வீடியோக்கள் டிக்டாக்கில் ஏக பிரபலம். மலையாள பாடல் பிண்ணி வீடியோக்களில் ஆருணி கொடுக்கும் முகபாவனைகளுக்கு ரசிகர்கள் ஏராளம். `இனி அவர் அந்த வீடியோவிலும் தோன்றமாட்டார்’ என்பது தான் காலம் அவளுக்கு கொடுத்த கொடுமையான பரிசு. கடந்த சில மாதங்களாகவே கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்டார் ஆருணி. அதற்கு இன்ன காரணமென கடைசிவரைக்கும் கண்டுபிடிக்கவே முடியவில்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்ந்திருந்தார். ஆனால் அவருக்கு உள்ள பிரச்னை கண்டறியபடவில்லை.  இருப்பினும் அவரது தலைவலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  ஆனால் நிலைமை கையை மீறிப்போக சிகிச்சையிலிருக்கும்போதே, ஆருணியின் உயிர் பிரிந்தது. இன்ன நோய் என்றே தெரியாமல் உயிரிழந்துவிட்டாள் அந்த ஸ்பால்ன் சிறுமி.  அவருக்கு மூளையில் ஏதோ ஒரு பிரச்னை இருந்ததாகவும், அதை மருத்துவர்களால் சரியாக கண்டறியமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது. கடந்தாண்டுதான் அவரது ...

24 மணி நேரத்தில் ‘சிங்கப் பெண்ணே’ பாடலை அடிச்சுத் தூக்கிய ‘அகலாதே’!

Image
சூப்பர் ஸ்டார் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைபபடத்தின் முதல் சிங்கிள் டிராக் ’சிங்கப்பெண்ணே’ பாடல் கடந்த 23ம் தேதி வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்னதாக சமூக வலைதளங்களில் அது லீக்கானது. அப்பொழுதே அது வைரலாக தொடங்கியது. அதன் பிறகு , இந்தப் பாடல் வெளியான 24 மணிநேரத்தில் யூடியூப்பில் மட்டும் 40 லட்சம் பேர் பார்த்தனர். தற்போது வரை இந்த பாடலை யூடியூப்பில் 73 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 8 லட்சம் பேர் லைக்ஸூம், 59 ஆயிரம் பேர் டிஸ்லைக்ஸூம் கொடுத்துள்ளனர். இதுவரைக்கும் வெளிவந்த விஜய் பாடல்களிலேயே இதுதான் மிக அதிக பார்வைகளை வெகு விரைவில் பெற்று வந்த பாடல் என ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில், இதற்கு அடுத்த நாள் வெளியான அஜித்தின்  "நேர்கொண்ட பார்வை" படத்தின் "அகலாதே" பாடலை 24 மணிநேரத்தில் 60 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதன் மூலம், படம் வெளியாவதற்கு முன்னதாகவே விஜய்யின் சாதனையை தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை பாடல் முறியடித்துள்ளது. வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கற...

சிங்கப்பெண்ணே பாடல் ஹிட் ஆனதை தொடர்ந்து அர்ச்சனா கல்பாத்தி போட்ட டுவிட்- ரசிகர்கள் உற்சாகம் !

Image
சமீபத்தில் வெளிவந்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் பாடல் "சிங்கப் பெண்ணே" .பெண்களை கௌரவிக்கும் வண்ணம் அண்மையில் வந்த இப்பாடல் விஜய்யின் பிகில் படத்தில் இடம்பெற்றறுள்ளது. இந்த பாடல் வெளிவந்த முதல் யூடியூபில் செம டிரண்டிங்கில் உள்ளது. ரசிகர்களை தாண்டி,  பிரபலங்களும் இப்பாடல் குறித்து தங்களது கருத்தை நல்லவிதமாக வெளியிட்டு வருகின்றனர். அந்தளவிற்கு பாடல் வரிகள், அதனுடன் ஏ.ஆர். ரஹ்மானின் இசை சேர்ந்து பாடலுக்கு ஒரு உயிர்ப்பை அளித்துள்ளது. பாடலை கேட்டாலே பெண்கள் பரவசமடைந்து உற்சாகம் கொண்டு பொங்கும் வகையில் அந்த பாடல் அமைந்துள்ளது. இதனை அடுத்த பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா அவர்கள் ட்விட்டரில் ஒரு பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாம் எல்லோரும் ஒரு பெண்ணை ரோல் மாடலாக வைத்து தான் வளர்ந்திருப்போம், அவர்களை பற்றி பதிவிடுங்கள், ஒரு வீடியோ வருகிறது என பதிவிட்டுள்ளார். ரசிகர்களும் அவர் சொன்ன விஷயத்தை உற்சாகமாக செய்ய இப்பொழுது ட்விட்டரில் செய்ய ஆரம்பித்துள்ளனர். All of us grew up with some incredible women as role models and icons. Join us to celebrate them 😊 #Bigil #SaluteMySingapp...

உடல் துர்நாற்றம் காரணமென்ன? அதை போக்குவது எப்படி? | how to prevent body odour naturally

Image
சிலர் உடலிலிருந்து துர்நாற்றம் அதிகப்படியாக வீசும். அருகில் செல்லும்போதே குபீரென அந்த வாடை அடித்து மூக்கை துளைக்கும். அது உள்ளுக்குள் சென்று நமக்கு குமட்டலை ஏற்படுத்தும். அந்தளவிற்கு அது மோசமானதாக இருக்கும். குளித்து எவ்வளவு நாட்களாகியதோ என நமக்கு எண்ணத் தோன்றும். அப்படிப்பட்ட கெட்ட வாசம் (Body odor) உடலிலிருந்து ஏன் வெளிப்படுகிறது? அதற்கு என்ன தீர்வு என்பதை இங்கு தெரிந்துகொள்வோம். உணவில் கார்போஹைட்ரேட்டின் அளவை குறைத்து, புரோட்டினின் அளவு அதிகமாகும்போது உடலில் துர்நாற்றம் அடிக்கும். ஏனெனில் அவ்வாறு நடக்கும்பொழுது உடலில் கீட்டோன்கள் அதிகமாக வெளியேற்றப்படுகிறது. இதனால் உடல் துர்நாற்றம், சிறுநீர் கழிக்கும்போது துர்நாற்றம் போன்றவை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகளவு எடுத்துக்கொள்ளுதல் நல்லது.  மலச்சிக்கல் பல சிக்கலை உருவாக்கும் என்பார்கள். இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு உடலிலில் துர்நாற்றம் ஏற்படும். இதுபோன்றவர்களின் உடலிலிருந்து டாக்சின்கள் முறையாக ஜீரண மண்டலத்தின் வழியாக வெளியேற்றப்படாமல் இருப்பதால், அவைகள் சருமத்துளைகளின் வழியே வெறியேறும். அப்பொழுது அவர்களின் உடல...

அஜீத் சார் படம்னா எப்படி வேணும்னாலும் நடிப்பேன் ! தெறிக்க விட்ட பிக்பாஸ் புகழ் நடிகை !

Image
அல்டிமேட் ஸ்டார் அஜித் படத்தில் நடிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது. இன்று தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் தல படத்தில் ஒரு சின்ன ரோலாவது நடிக்க வேண்டும் என்பதுதான் தற்போது சினிமாவில் நுழையும் பல நடிகர்களின் ஆவலாக உள்ளது.  அப்படித்தான் அந்த பிக்பாஸ் புகழ் நடிகை ஜனனி ஐயர் கூறியுள்ளார். அவர் வாழ்நாள் லட்சியங்களில் இதுவும் ஒன்றாம். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், எப்போதும் நான் கவர்ச்சியாக இன்டிமேட் சீன்களில் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். ஆனால் தற்பொழுது ட்ரென்டில் உள்ள முன்னணி நடிகர்களுடன் அல்டிமேட் காமெடி படங்களில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு அஜீத் சார் படமாக இருந்தால், நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பா நடிப்பேன் என தெரிவித்துள்ளார். மேலும் அஜீத் சார் படத்தில் நடிப்பது தனது வாழ்நாள் கனவுகளில் ஒன்று எனவும், அவர் படத்தில் நடிக்க 2 நிமிடி நேர ரோல் என்றாலும் கூட பரவாயில்லை சம்பளமே வாங்காமல் நடிப்பேன் என தெரிவித்துள்ளார். தற்பொழுது வரும் நடிகர்கள் அனைவருமே அஜீத் சார் படத்தில் ஒரு சீனாவது நடித்து விட்டால் போதும் என்ற லட்சியத்துடன் வருகிறார்கள். அல்டிமேட் ஸ...

அம்பயர்கள் செய்த தவறால் கோப்பையை தவற விட்ட இந்தியா? எழுந்தது புதிய சர்ச்சை !

Image
உலக கோப்பையை வெல்லும் என்ற நினைத்திருந்த இந்திய அணி அரையிறுதியோடு நடையை கட்டியது. அதற்கு இயற்கையோடு நடுவர்களின் தவறான தீர்ப்பும் காரணம் என இப்பொழுது தெரிய வந்துள்ளது. உண்மையில் இந்தியாவிற்கு எதிராக பல சதிகள் நடந்துள்ளதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. நம்பர் ஒன் அணியாக விளங்கிய இந்திய அணியில் சில பல குழப்பங்கள் ஏற்படினும், இறுதியில் அனைத்து ஆட்டங்களிலும் வென்று வந்தது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சரியான ஒத்துழைப்பு இல்லாத நேரங்களில் இந்திய அணிக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் பௌலிங் மூலம் அதை சரிக்கட்டி எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர். இந்திய அணிக்கு எதிராக இயற்கை இரு முறை சதி செய்தது. இந்திய அணிக்கு எதிராக நடுவர்கள் கொடுத்த சில தவறான தீர்ப்புகளால் இந்திய அணியின் உலக கோப்பை கனவு தகந்தது என கிரிக்கெட் ரசிகர்ள் ஆதங்கபடுகின்றனர். உலக கோப்பை அரையிறுதியில் தோனி ரன்அவுட் ஆன பந்து, 'நாட் பால்' ஆகி இருக்க வேண்டியது. அதனை அம்பயர்கள் சரியாக கவனிக்காததால், இந்தியாவின் உலக கோப்பை கனவு அரையிறுதியோடு முடிவுக்கு வந்தது என்று பலரும் கருத்துகளை குறி வருகின்றனர். இங்கிலாந்தில் நடந்து வரும்...

இந்த ராசிக்காரர்களுக்கு கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கப்போகும் சனி பகவான் ! எந்த ராசி தெரியுமா?

Image
ஜோதிடம், சாஸ்திரம் இதெல்லாம் சும்மா டம்பக்கு என்று சொல்வோர்கள் கூட சில நேரங்களில் ஒருவேளை எல்லாமே உண்மையாக இருக்குமோ என்று சொல்லுமளவிற்கு வானத்தில் இருக்கும் கிரநிலைபடி கணித்த ஜாதகம் சில காரியங்களை முன் கூட்டியே சொல்லிவிடும். அது நமக்கு ஆச்சர்யமாக இருக்கும். அதனால் இன்று வரை நம் நாட்டில் ஜோதிடம் ஜாதகம் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி நல்லது, கெட்டதுகளை தீர்மானித்து செய்கிறோம். அதன்படி தற்பொழுது நடந்துள்ள குருப்பெயர்ச்சியால் எந்த ராசிக்கார ர்களுகு என்னென்ன நன்மைகள் நடக்கப்போகிறது என்பதை தெரிந்துகொள்வோம். கீழுள்ள வீடியோவை முழுமையாக பாருங்கள். எல்லா ராசிக் கார ர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது, எந்த ராசிக்கார ருக்கு சனிபகவான் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கப்போகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.