Posts

இண்டர்நெட் இல்லாமல் குரோம் பயன்படுத்திட

Image
இண்டர்நெட் இல்லாமல் க்ரோம் பயன்படுத்தும் புதிய முறையை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இண்டர்நெட் இல்லாத நேரங்களின்போது மக்களுக்கு பயன்தரக் கூடிய வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் ஸ்மார்ட் போன், இண்டர்நெட் பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மக்களின் வசதிக்கேற்ப பல நிறுவனங்களும், இணையம் மற்றும் போனில் சிறப்பு சலுகைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. இதையும் படிக்கலாமே :  இன்டர்நெட் வேகம் அதிகரிப்பது எப்படி? அந்த வகையில், தற்போது கூகுள் நிறுவனம் இந்த வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி இண்டர்நெட் பயன்படுத்துவோர், நெட் இல்லாமலேயே க்ரோம் பயன்படுத்தும் முறையை உருவாக்கியுள்ளது. பயனாளர்கள் தங்களுக்குத் தேவையான செய்தி மற்றும் தகவல்களை இண்டர்நெட், வைஃபை இருக்கும்போது டவுன்லோடு செய்து கொண்டு, அதன் பிறகு ஆஃப்லைனில் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது பயண நேரங்களின்போதும், இண்டர்நெட் இல்லாதபோதும் மிகவும் வசதியாக அமையும். அதென்ன ஆன்லைன்? ஆஃப்லைன்? இணைய இணைப்பு இல்லாதபோது கம்ப்யூட்டரில் பணிபுரிவதை ஆப்லைன் என்றும், இணைய இணைப்...

கணினி என்றால் என்ன?

Image
கணினி என்றால் என்ன என்பது புரிந்துகொள்ள முடியாத புதியவர்களுக்கான பதிவு இது. கணினியின் பாகங்கள் மற்றும் அது செயல்படும் விதம் போன்ற அடிப்படைகளை கற்றுக்கொள்ள உதவும்.  கணினி என்பது நாம் தரும் உள்ளீடுகளை (Input) பெற்று அதனை செயல்படுத்தி (process) அதற்கு இணையான வெளியிடுகளை (output) தரும் ஒரு மின்னணு சாதனம் (electronic device) ஆகும். அடங்கொப்புரானே... அதென்ன உள்ளீடு, வெளியீடு ன்னு சொல்றீங்களே... ஒன்னுமே புரியலன்னு நினைக்கறீங்களா? உள்ளீடு என்றால் நாம் ஒன்றை உட் செலுத்துவது..  வெளியீடு என்றால், உட்செலுத்தப்பட்டது வேறு வடிவில் நமக்கு கிடைப்பது. உதாரணமாக கரும்பு ஜூஸ் செய்ய கரும்பை உள்ளே தள்ளி, ஜூஸ் எடுக்கிறோம் அல்லவா? இங்கே உள்ளீடு என்பது கரும்பை தள்ளுவது. வெளியீடு என்பது அது சக்கையாக பிழியப்பட்டு நமக்கு ஜீஸ் வடிவில் கிடைப்பது போன்றது. அதுபோல நம் கம்ப்யூட்டருக்கு எழுத்து வடிவில் (கீபோர்ட், மௌஸ்) போன்றவற்றின் உதவியுடன் உள்ளீடுகளை (கட்டளைகள்) கொடுக்கலாம். அது அதை உள்ளே வாங்கிக்கொண்டு, சில செய்களை செய்து, அதன் வெளிப்பாட்டை திரையில் நமக்கு காட்டும். கணினியின் முக்கிய பாகங்கள் ( computer per...

குரோம் பிரௌசரை வேகப்படுத்திட குறிப்புகள்

Image
உங்களுடைய கூகிள் குரோம் பிரௌசர் ஸ்லோவாக இருக்கிறதா? அதற்கான தீர்வு என்னிடம் உள்ளது. அதற்கு முன்பு என்னுடைய கதையை கொஞ்சம் கேளுங்கள். நான் என்னுடைய கம்ப்யூட்டர் அதிக வேகமாக செயல்பட வேண்டி, அதில் i5 Processor, 4GB RAM போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றேன். மூன்று வருட காலமாக நன்றாக இயங்கி கொண்டிருக்கிறது. கம்ப்யூட்டரில் எந்த ஒரு பிரச்னையும் இல்லை. வேகம் மின்னல் போல தெறிக்கும். ஆனால் குறிப்பிட்ட சில நாட்களாக கூகிள் குரோம் பிரௌசர் மிக மெதுவாக தொடங்குவதும், மெதுவாக இயங்குவதுமாக இருக்கிறது. அதில் அளவுக்கு அதிகமாக இருந்த Extension களையும் நீக்கிப் பார்த்துவிட்டேன். ஆனாலும் வேகம் அதிகரித்தாக தெரியவில்லை. எனக்கு வருத்தம், குழப்பம் எல்லாம் ஒருங்கே இருந்தது. ஃபயர்பாக்ஸ் பிரௌசர் பயன்படுத்திப் பார்த்தபோது வேகம் நன்றாக இருந்தது. அப்பொழுது நிச்சயமாக உணர்ந்தேன். கூகிள் குரோம் பிரௌசரில் தான் பிரச்னை இருக்கிறதென்று. இந்நிலையில் தான் அருமையான தீர்வு ஒன்று கிடைத்தது. அது மிக சுலபமானதுதான். கூகிள் குரோம் பிரௌசர் வேகமாக செயல்பட தீர்வு:   கூகிள் குரோம் பிரௌசரில் Settings கிளிக் செய்யவும். பிறகு அந்த பக்கத்த...

ஸ்பேம் அழைப்புக்களை தடுத்திட - ஆன்ட்ராய்ட் ஆப்

Image
தொல்லை தரும் விளம்பர அழைப்புகளை தடுப்பதறகென கூகிள் புதிய அப்ளிகேஷன் ஒன்றினை வெளியிட்டுள்ளது. "போன்" என்ற அந்த அப்ளிகேஷன் உங்களுக்கு வரும் "SPAM" அழைப்புகளை ஃபில்டர் செய்து தடுக்கும் வசதியை கொண்டுள்ளது. இதற்கு முன்பு பீட்டா வர்சனில் சோதிக்கப்பட்ட இந்த செயலி தற்பொழுது பயனர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு Called ID and Spam Protection என பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவையற்ற கால்களை தானாகவே பிரித்து தடுத்து விடலாம். இந்த சேவை ஆனில் இருக்கும் போது, ஒரு அழைப்பை உருவாக்கும் போதும், பெறும் போதும் காண்டாக்ட் லிஸ்டில் இல்லாத அழைப்பாளர்கள் அல்லது தொழில் சார்ந்த அழைப்புகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.  இதுகுறித்து எச்சரிக்கை தகவல் நமக்கு கிடைக்கும். இதனை ஆக்டிவேட் செய்ய 3 வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். செட்டிங்ஸ் சென்று, ’காலர் ஐடி மற்றும் ஸ்பாம்’ சேவையை ஆன் செய்ய வேண்டும். தேவையற்ற அழைப்புகள் வராமல் இருக்க பில்டரில் ஸ்பாம் கால்களை ஆன் செய்திருந்தால் போதும். இது தனி நபரின் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். தற்போது தேவையற்ற அழைப்புகளை எச்சரிக்கும் வகையில், ...

கீபோர்டை மௌஸ் போல மாற்றிட

Image
கம்ப்யூட்டரில் சில நேரங்களில் சுட்டி (MOUSE) சரியாக வேலை செய்யாமல் செயலிழந்துவிடும். அதுபோன்ற சமயங்களில் கீபோர்டை மௌஸ் ஆக பயன்படுத்த முடியும். அதற்கான வழிமுறைகளைத் தெரிந்துகொள்வோம். எப்படி கீபோர்டை மௌஸாக பயன்படுத்துவது? 1. விண்டோஸ் கம்ப்யூட்டரில் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி, கண்ட்ரோல் பேனல் சென்று, Ease of Access ல் இடம் பெற்றுள்ள வசதியைப் பயன்படுத்தி கீபோர்டை மிக எளிதாக மௌஸ் பாயிண்டராகப் பயன்படுத்த முடியும். செயல்முறை: 1. Start ==> Control Pannel ==> Ease of Access என்ற வழியில் செல்லவும். 2. அதில் Change How Your Mouse Works என்பதினை கிளிக் செய்யவும். 3. Turn on Mouse Keys என்பதில் டிக் மார்க் ஏற்படுத்திடவும். 4. Apply & Ok கொடுத்து வெளியேறவும். இனி, உங்கள் கீபோர்டில் உள்ள Numeric Keyboard மௌசாக மாறிவிடும். அதில், மௌஸ் பாயிண்டரை மேல் மற்றும் இடது புறமாக நகர்த்திச் சென்றிட எண் 7 விசை பயன்படுகிறது. மேலே நகர்த்திச் சென்றிட எண் 8 விசை துணைபுரிகிறது. மேல் மற்றும் வலது புறமாக நகர்த்திட 9 கீழுள்ள படம் மிகத் தெளிவாக "மௌஸ் பாயிண்டரை நகர்த்திட உதவும் விசைகளை குறிப்பிட்டுக் காட்டுக...

பணம் சம்பாதிக்க ஆக்கப்பூர்வமான 100 வழிகள்

Image
பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உண்டு. ஆக்கப் பூர்வமாக அவற்றைச் செயல்படுத்திட வேண்டுமெனில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழிகளைத் தேர்ந்தெடுத்தலே போதுமானது. பணத்தின் முக்கியத்துவம் வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமெனில் அதற்கு நிச்சயம் பணம் தேவை. அந்த பணத்தை எவ்வாறு ஈட்டுவது? என்ன செய்தால் உங்களைத் தேடி உங்களை தேவைகளுக்கு அதிகமாகவே பணம் சம்பாதிக்க முடியும்? இந்தக் கேள்விகளை உங்களை நீங்களே முதலில் கேட்டுக்கொள்ளுங்கள். அந்த கேள்விக்கான விடை என்னவாக இருக்கிறது நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு குழப்பமாக இருக்கிறதா? பணம் சம்பாதிக்க யோசனைகள் சரியான விடைகள் உங்களிடம் இல்லையா? அப்படியென்றால் சுற்றும் முற்றும் பாருங்கள். உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என கவனியுங்கள். அன்றாட உங்களது செயல்களை ஊன்று கவனியுங்கள். ஆம். நிச்சயம் உங்களுக்குப் புரிந்திருக்கும். உங்களைச் சுற்றி உள்ளவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு தொழில், வேலை போன்றவற்றைச் செய்து கொண்டிருப்பார்கள். இவற்றிற்கெல்லாம் அடிப்படை மூல காரணம் பணம் சம்பாதிப்பதுதான். அதுதான் அவர்கள் குறிக்கோளாக இருக்கும். கீரை விற்கும் கண்ணம்மா முதல் ...

கம்ப்யூட்டர் ஷட்டவுன் ஆக நேரம் எடுக்கிறதா? தீர்வு

Image
சில நேரங்களில் என்ன செய்தாலும், கம்ப்யூட்டர் ஷட்டவுன் ஆகாமல்  அப்படியே Hang ஆகி நின்றுவிடும். செய்து கொண்டிருக்கும் வேலை பாதியில் இருக்கும்போது அப்படி நின்றுவிட்டால், செய்த வேலையை சேமிக்க முடியாமல், மெயின் சுவிட்சை ஆப் செய்ய முடியாமல் பரிதவித்துதான் போவோம். சரி, அப்படியே மெயினை Off செய்யலாம் என்றால், அதுவரைக்கும் செய்த வேலைகள் அனைத்தும் சேமிக்க முடியாமல் வீணாகிவிடும். அப்படிச் செய்வதால் செய்த வேலைகள் சேமிக்க முடியாமல் போவதோடு, கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆவதற்கும் வாய்ப்புகள் உருவாகிவிடும். அது போன்ற நிலைக்கு என்ன காரணம்? நிச்சயமாக கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு புரோகிராம் Hang ஆவதுதான். அவ்வாறு ஆவதால் தான் கம்ப்யூட்டரை நிறுத்த முடியாமல் போகும் சூழல் உருவாகும். அதை தீர்க்க வேண்டும் எனில் பிரச்னைக்கு உரிய புரோகிராம் எது என அறிந்து, அதை நிறுத்திய பிறகு, வழக்கம் போக கம்ப்யூட்டரை நிறுத்திவிடலாம். எப்படி Hang ஆன புரோகிராமை கண்டுபிடிப்பது?  அதைக் கண்டுபிடிப்பதற்கென Tools உண்டு. அவற்றைப் பயன்படுத்தி எளிதாக எந்த புரோகிராம் Hang ஆகிறது என கண்டுபிடிக்கலாம். Process Hacker என்ற...