ரஜினியை வச்சி செய்ய என்ன காரணம்? உண்மையிலேயே ரஜினி கீழே விழுந்தாரா? MAN VS WILD நிகழ்ச்சியில் என்னதான் நடந்தது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சின்ன சின்ன அசைவுகள் கூட இப்பொழுது பெரிதாக கவனிக்கப்பட்டு வருகிறது. அதிமுக, திமுக தலைவர்கள் இறந்த பிறகு, தம்மிழக அரசியலில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அடுத்த ஒரு பவர்புல்லான தலைவர் உருவாகும் வரை இந்த எதிர்பார்ப்பு நீடித்துக் கொண்டிருக்கிறது. அசைக்க முடியாத எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் இருந்ததும், அதன் பிறகு அவர் உடல்நிலை கோளாறால் அவதி பட்டு, கடந்த தேர்தல்களில் அவருடைய கட்சி படுதோல்வி அடைந்ததும் அவரை அடுத்த கட்டத்துக்கு நகர முடியாமல் படி செய்துவிட்ட இந்த வேளையில், அடுத்த ரஜினிகாந்த் மட்டுமே தமிழக அரசியலில் ஒரு பெரிய இடத்திற்கு வர முடியும் என்ற உருவாகிக் கொண்டிருக்கிறது. நிலையற்ற செயல்பாடுகளால் ரஜினி ரசிகர்கள் வருத்தம் ரஜினிகாந்தின் செயல்பாடுகள் சில நேரங்களில் அவநம்பிக்கை தருவதாகவே உள்ளது. இதோ அரசியலுக்கு வருகிறேன் என்று கடந்த 20 ஆண்டுகளாக கூறி வந்தவர் மெல்ல மெல்ல அரசியல் களத்தில் குதிப்பதற்கான ஆயத்த ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போதிலும், கடந்த இரு ஆண்டுகளில் பெரியதாக ஏதும் மாற்றங்களைச் செய்யவில்லை. இருப்பினும் மீடியா விடுவதாக இல்லை. அவ்வப...