Posts

Showing posts from December, 2018

இப்படி கூட மௌஸ் யூஸ் ஆகுமா? அட.. இத்தனை இது தெரியாம போச்சே !

Image
நாம் அனைவரும் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் மௌஸ் - ல் இத்தனை பயன்பாடுகள் மறைந்திருக்கும் என பலரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். அத்தனை மறைமுக பயன்பாடுகள் நிறைந்துள்ளது. சாதாரணமாக, கம்ப்யூட்டர் மௌசை பயன்படுத்தி ஒரு புரோகிராமை திறக்க, மூட, டெக்ஸ்ட்டை செலக்ட் செய்ய, காப்பி-பேஸ்ட் செய்ய, லிங்க் ஒன்றை திறக்க போன்ற வேலைகளை செய்திடுவோம். அது அனைவருக்கும் தெரிந்தது தான். அது மட்டும்தான் இயல்பான பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. ஆனால் அதையும் மீறி ஒரு சில பயன்மிக்க செயல்பாடுகள் இதில் உள்ளது. என்னென்ன மறைமுக பயன்பாடுகள் உள்ளன? அவற்றை எப்படியெல்லாம் பயன்படுத்தி பணிகளை நிறைவு செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்துகொண்டு செயல்படுத்தலாம் வாங்க. ஷிப்ட் கீ பயன்படுத்தி டெக்ஸ்ட் தேர்வு வேர்ட் டாகுமெண்ட் ல் உள்ள டெக்ட் அல்லது இணைய பக்கங்களில் உள்ள டெக்ட் களை நாம் செலக்ட் செய்திட மௌஸ் பாயின்டரை கிளிக் செய்து இழுத்து செலக்ட் செய்வோம். சில நேரங்களில் மௌஸ் அசைவதன் மூலம் நாம் நினைத்த டெக்ட்டை மிகச் சரியாக தேர்வு செய்வதில் பிரச்னை உருவாகும். அதுபோன்ற சமயங்களில் ஆரம்பத்தில் சில வார்த்தைகளை மௌஸ் மூலம