தமிழ் காலண்டர் 2017 ஆன்ட்ராய்ட் ஆப்

என்னதான் ஆங்கில நாட்காட்டியை அன்றாட அலுவல்களுக்கு பயன்படுத்தினாலும், நம் வீட்டு விஷேசங்கள் நல்லது கெட்டதுக்கு நாம் நல்ல நாள், நேரம், காலம் அது இது என்று பார்த்து, அதன்படி சுபகாரியங்கள் செய்வது தமிழ் காலண்டர் பார்த்துதான். அதில்தான் பஞ்சாங்கப்படி நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம், குளிகை, அஷ்டமி, நவமி என பலதரப்பட்ட விஷயங்களைப் பார்த்து தெரிந்துகொள்ள முடியும். ஆன்ட்ராய்ட் போனில் அதுவும் ஆப்லைனில் பயன்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான தமிழ் காலண்டர் ஆப் உள்ளது. ஒரு சில பயன்மிக்க ஆப்ஸ்கள் இருந்த போதிலும், அவற்றில் சிறந்ததாக "நித்ரா" தமிழ் நாட்காட்டியை குறிப்பிடலாம். இதில் உள்ள சிறப்பம்சங்கள்: நாள்காட்டி, மாதகாட்டி என ஒவ்வொரு நாளும் உங்களோடு இணைந்திருக்கும் நித்ரா தமிழ் காலண்டர் தற்பொழுது 2017-ஆம் ஆண்டின் அனைத்து தகவல்களுடன் பல்வேறு சிறப்பம்சங்களுடன் புதிய வடிவில் பலவித வண்ணங்களில் உங்களுக்காக வடிவமைக்கப் பட்டுள்ளது. நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், போன்ற கால நேரங்களையும் , அமாவாசை, கிருத்திகை , சதுர்த்தி போன்ற விரத நாட்களையும், அஷ்டமி, நவமி, சுப ம...