ரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற

அறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளது. ஏர்டெல் வோடபோன் போன்ற நிறுவனங்களும் இந்த LTE தொழில்நுட்பத்தில்தான் சேவைகளை வழங்குகின்றன. ஆனால் LTE ன் குறை என்னவெனில் வாய்ஸ் சப்போர்ட் இல்லாதது, எனவே 4G டேட்டாவுக்கும். வாய்ஸ் சப்போர்ட்க்கு 3G தொழில்நுட்பத்தையும் அந்த நிறுவனங்கள் பயன்படுத்தின. எனவே ரிலையன்ஸ் நிறுவனம் VO- LTE அதாவது Voice Over Long Term Evaluation தொழில்நுட்பத்தை கையில் எடுத்தது. இதில் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் பேச முடியும். இந்த புதிய நுட்பத்தை வெகு எளிதாக தனது பழைய CDMA டவர்களை எல்லாம் Volte க்கு மாற்றியது ரிலையன்ஸ். 800 MHz, 1800 MHz, 2300 Mhz என்ற அலைவரிசைகளில் இந்தியா முழுவதும் 22 சர்க்கிள்களில் லைசென்ஸ் பெற்றுள்ளது, எனவே 95 % கவரேஜ் கிடைக்க வாய்ப்புள்ளது. ரிலையன்ஸ் தனது ஜியோ 4ஜி சேவைகளை கடந்த டிசம்பர் 2015 ல் தொடங்கியது. ஆரம்பத்தில் தனது நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் வீடியோ கால்களுடன் மொபைலை வழங்கியது. சோதனை ஓட்டம் Beta Testing கடந்த ஜூலை...