கம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் சுத்தமாக வைத்திருக்க டிப்ஸ்

முதலில் டிஜிட்டல் சாதனங்கள் என்றால் என்பதை தெரிந்துகொள்வோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் போன்றவைகள் அனைத்துமே டிஜிட்டல் சாதனங்கள் தான். இவைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி என்பதைப் பார்ப்போம். உட்புறம் மட்டுமின்றி வெளிப்புறம் இதுபோன்ற சாதனங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் அவைகள் விரைவில் பழுதடையா வண்ணம் பாதுகாக்க முடியும். பல நேரங்களில் டிஜிட்டல் சாதனங்களின் பயனர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் அவ்வப்பொழுது கண்ணை கவரும் விதத்தில் உள்ள சாப்ட்வேர்களை டவுன்லோட் செய்து வைத்துக்கொள்கின்றனர். அவற்றின் பயன் அதிகமாக இருக்காத நிலையிலும் தொடந்து அவைகள் கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களில் இடம்பெற்றுவிடுகின்றன. இதுபோன்ற தேவையில்லாத புரோகிராம்கள் கம்ப்யூட்டர் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு மேலாக அதிகமாகிவிடும் நிலையில் அந்த டிஜிட்டல் சாதனங்கள் இயக்கத் தன்மையில் வேகம் குறைகிறது. ஒரு வண்டியில் அது தாங்கும் அளவிற்கு மட்டுமே பாரம் ஏற்ற வேண்டும். இல்லையெனில் அந்த வண்டியின் வேகம் குறையதொடங்கும். சில நேரங்களில் அவை பேலன்ஸ் செய்ய முடியாமல் கவிழ்ந்து விபத்து ஏற்படும். அதுபோலதான் ட...