சிறார்களுக்கு இணைய பாதுகாப்பு வழங்கும் புரோகிராம் !

இணையத்தில் நல்லது கெட்டது இரண்டும் உண்டு. நல்லதைவிட கெட்டது விரைவாக பலரை சென்றடைந்துவிடும். இந்நிலையில் சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இணையத்தைப் பயன்படுத்துகையில் கட்டாயம் பாதுகாப்பு தேவை. இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு (World Internet Users) வயது கட்டுப்பாடு இல்லை என்பதால் யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தும் நிலை தற்பொழுது உள்ளது. இதனால் பல ஆபத்துகள் தொடர்ந்து கொண்டுள்ளன. குறிப்பாக பள்ளி செல்லும் சிறுவர்கள் - மாணவர்கள் பாதை மாறி போவது அதிகரித்து வருகிறது. இதனால் அவர்கள் மோசமான பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. சிறார்களுக்கு இயல்பாகவே கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகமாக இருக்கும். இணையத்தை பயன்படுத்துகையில் கூடுதலாக இருக்கும். மேலும் மேலும் அவர்கள் இணையத்தில் நேரம் செலவழிக்கும்போது தான் பிரச்னையின் வீரியம் அதிகமாகிறது. காரணம், அவர்களின் மனதை கெடுக்கும் பல விஷமத்தனமான இணையத்தளங்கள், விளம்பரங்கள். அவைகள் என்ன என அவர்கள் தேடும்போது, இயல்பாகவே அதுகுறித்த ஆர்வமும் ஒட்டிக்கொள்கிறது. இணையத்தில் பல்கி பெருகிவரும் ஆபாசத் தளங்கள், வன்முறையைத் தூண்டும் வ...