கம்ப்யூட்டர் பழுது ஆகாமல் வைத்துக்கொள்ள 10 டிப்ஸ்

உங்களுடைய கம்ப்யூட்டர் அடிக்கடி ரிப்பேர் ஆகி உங்களுக்கு டென்சன் ஏற்படுத்துகிறதா? இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். ஒரு சில வழிமுறைகளை செயல்படுத்துவதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டர் அடிக்கடி ரிப்பேராகாமல் தடுக்கலாம். உங்களுக்கு கம்ப்யூட்டர் பற்றி ஒன்றுமே தெரியாதென்றாலும் ஒரு சில அடிப்படை விஷயங்களை மட்டும் தவறாமல் பின்பற்ற வேண்டும். CPU சுத்தம்: 1. கம்ப்யூட்டருக்கு முக்கியமானது CPU. இந்த சிபியூவை மட்டும் நல்லா பராமரிச்சாப் போதுங்க... கண்டிப்பா கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகிறதிலிருந்து தடுத்திடலாம். 2. இதை சுத்தமா வைச்சிருக்கிறது நம்மளோட கடமை. தூசி துப்பு அண்டாம வச்சிருக்கணும். தூசிகளை அண்ட விட்டா அது சிபியூக்குள்ள இருக்கிற நுணுக்கமான பகுதிகள்ல புகுந்து ரிப்பேர் செய்திடும். 3. குறிப்பா கம்ப்யூட்டர் ஹீட் ஆகாமல் இருக்கிறதுக்காக உள்ளே வச்சிருக்கிற சின்ன சின்ன பேன்களில் தூசிகள் ஒட்டுச்சுன்னா....அதோட வேகம் குறைஞ்சிடும். அதனால் அந்த பேன் நல்லாவே சுத்தாதுங்க...அப்படி சுத்தலேன்னா.... சிபியுவோட ஹீட் வெளியில வராம உள்ளேயே இருக்கும். அதனால் சிபியு அதிகம் ஹீட் ஆகிடும். 4. எந்த பொர...