தமிழில் விண்டோஸ் 7 பயன்படுத்துவது எப்படி?
Microsoft- ன் புதிய இயங்குதளம் விண்டோஸ் 7 ஐ தற்பொழுது பெரும்பாலானோர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதில் பல்வேறுபட்ட வசதிகள் உள்ளடங்கியுள்ளன. அவற்றில் அவரவர் மொழியிலேயே Windows 7 ஐ பயன்படுத்த முடியும் என்பதை மிகச்சிறந்த வசதியாக குறிப்பிடலாம். ஆம். விண்டோஸ் 7 இயங்கு தளத்தை நம்முடைய தமிழ் மொழியில் நாம் பயன்படுத்த முடியும். Windows 7 -ஐ தமிழில் பயன்படுத்துவது எப்படி? Windows 7 -ஐ தமிழில் பயன்படுத்த முதலில் Language Internet Pack - LIP என்ற மொழி இடைமுகத் தொகுப்பை தரவிறக்கம் செய்ய வேண்டும். கீழ்க்கண்ட இணைப்பில் கிளிக் செய்து உங்களுடைய கணினிக்கு ஏற்ற 32 bit அல்லது 64 bit க்கான Language Internet Pack - LIP தரவிறக்கம் செய்துவிடுங்கள். (உங்களுடைய கணினி 32 bit அமைப்புடையதா அல்லது 64 பிட் அமைப்புடையதா என்பதைக் கண்டறிய டெஸ்க்டாப்பில் Computer ஐகான் மீது ரைட் கிளிக் செய்து Properties கிளிக் செய்வதன் மூலம் கண்டறியலாம்.) தரவிறக்கம் செய்ய : Download Language Internet Pack - LIP தறவிறக்கிய கோப்புக்களை நிறுவிக்கொள்ளுங்கள் (install). அடுத்து Next Button -ஐ கிளிக் செய்து கணினியில் காட்டக்கூடிய மொழ