போட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்

ஒரு போட்டோவை அழகுற செய்திட வேண்டும் என்றால் Photoshop போன்ற மென்பொருள் பயன்படுத்திட தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. உடனடியாக செய்யக்கூடியதும் அன்று. போட்டோஷாப்பில் செய்வது போன்று போட்டோவை அழகாக மாற்றிடச் செய்வதற்கு தற்காலத்தில் பல மென்பொருட்கள் வந்துவிட்டன. அவற்றில் போட்டோவை திறந்து ஒரு சில சொடுக்குகளைச் செய்வதன் மூலம் நாம் திறந்த அந்த போட்டோவானது, அதில் கொடுக்கப்பட்ட வடிமைப்புகளுக்கு ஏற்ப மாறி மிக அருமையான போட்டோவாக நமக்கு கிடைக்கும். அது போன்றதொரு மென்பொருள் தான் Photo Mixing Software . இதன் மூலம் Photo Collages என்று கூறப்படும் "போட்டோ கோலங்கள்" செய்திடலாம். இந்த மென்பொருள் மிக எளிமையான பயனர் இடைமுகம் கொண்டது. இதனால் இதைப் பயன்படுத்துவது மிகச் சுலபம். இதைப் பயன்படுத்தி எப்படி Photo Mixing செய்வது என்பதை பற்றி அறிந்துகொள்வோம். போட்டோ மிக்சிங் மென்பொருளைப் பயன்படுத்துவது எப்படி? முதலில் போட்டோ மிக்சிங் மென்பொருளை தரவிறக்கம் (Download) செய்து, நிறுவி (Install) செய்துகொள்ளவும். போட்டோமிக்சிங் புரோகிராமை திறந்திடவும். வலது பக்கத்தில் இடம்பெற்றுள்ள டெம...