ஜிமெயிலை விரைவாக பயன்படுத்த குறுக்குவிசைகள்

Shortcut Keys for Gmail வணக்கம் அன்பு நண்பர்களே.. !பதிவிட்டு நீண்ட நாட்களாகிவிட்டது. நேரம் கிடைக்கும்போது உங்களுக்கு உபயோகமான பதிவை பதிவிட எண்ணுவேன். தற்போது பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய G-mail மற்றும் Yahoo Mail-க்கான short cuts keyகளை இந்தப் பதிவில் காணலாம். முதலில் G-mail எடுத்துக்கொள்வோம். பயன்படுத்த எளிதாக இருப்பதும், பல வசதிகளை கொடுப்பதிலும் முதன்மையாக இருப்பது இந்த G-mail தான். சரி. இந்த gmail-ல் shortcuts அமைப்பது எப்படி என்று பார்ப்போம். உங்கள் ஜிமெயில் முகவரியில் உள்நுழைந்துகொள்ளுங்கள். அதில் சிறிய பல்சக்கரம் போன்ற படத்தில் கிளிக் செய்து setting என்பதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் வரும் விண்டோவில் keyboard shortcuts என்பதை தேடவும். அதில் Keyboard shortcurt on என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பிறகு கீழிருக்கும் Save changes என்பதை கிளிக் செய்து செய்த மாற்றத்தை சேமித்துக்கொள்ளவும். அவ்வளவுதான். இனி நீங்கள் கீழிருக்கும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளதைப் போன்று உங்கள் ஜிமெயிலில் shortcuts உபயோகித்து அசத்தலாம். உங்களின் பொன்னான நேரத்தையும் மிச்சப்படுத்தலாம். இந்த shortcuts ...