இலவச SMS corrector ஆன்ட்ராய்ட் செயலி
 
ஒவ்வொரு நாளும் நமக்கு வரும் SMS களை வரிசைப்படுத்தி தருகிறது SMS Corrector Android app. அது மட்டுமில்லாமல், SMS களில் உள்ள பிழைகளை நீக்கி, படிப்பதற்கு ஏற்ற வகையில் சரியான முறையில் திருத்தி தருகிறது. அப்படி பிழைகளை திருத்தி தருவதால்தான் இதற்கு SMS Corrector எனப் பெயர் வைத்துள்ளனர். கடினமான வார்த்தைகளை எளிமைப்படுத்தி தருவதால் மிக எளிதாக  குறுஞ்செய்திகளை (SMS) படித்து பொருள் அறிந்துகொள்ளலாம். இம்மென்பொருளைத் தரவிறக்க உங்கள் ஆன்ட்ராய்டு போன் வழியாக இந்த தளம் செல்லவும். https://market.android.com/details?id=danem.smstranslator  இன்ஸ்டால் செய்வதற்கு முன் இந்த தளத்தில் உங்களுக்கான கணக்கொன்றைத் தொடங்கவேண்டும். பிறகு , அங்கிருக்கும் இன்ஸ்டால் என்ற பட்டனை அழுத்தி  மென்பொருளை நேரடியாக நிறுவிக்கொள்ளலாம். நிறுவியபிறகு, இன்பாக்சில் உள்ள அனைத்து எஸ்.எம்.எஸ் களிலும் உள்ள பிழைகளை சரிசெய்வதுடன், படிப்பதற்கு ஏற்றவாறு எளிய வார்த்தைகளாக மாற்றி நமக்குக்கொடுக்கிறது. எஸ்.எம்.எஸ் களை மொழிமாற்றம் செய்தும் படிக்கும் வசதியையும் இம்மொன்பொருள் தருகிறது. இனி உங்கள் ஆன்ட்ராய்டு போன்களில் கடுமையான வார்த்தைகள் ...
 
 
 
 
 
