Posts

பாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா?

Image
வேர்க்கடலையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். வேர்க்கடலை என்றாலே அதில் கொழுப்பு அதிகம், உடலுக்கு ஆகாது, உடல் பருமன் ஆகிவிடும் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், அதில் உள்ளது நல்ல கொழுப்பு என்பதால் அதன் மதிப்பு தெரிந்த ஆங்கிலேயர்கள் இதனை அவர்கள் நாட்டிற்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து நமக்கு பாதாம், பிஸ்தாவை அதிக விலைக்கு தள்ளிவிட்டனர். வேர்க்கடலை எந்த விதத்திலும் இதற்கு குறைந்ததில்லை. வேர்க்கடலையில் நார்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், பொட்டாசியம், வைட்டமின்களை சொல்லிக் கொண்டே போகலாம். மூளை வளர்ச்சிக்கு மிக பெரிய டானிக் என்ற இதனைச் சொல்லலாம். இதை தினமும் 30 கிராம் அளவு சாப்பிடுவதால் பித்தக்கல் பிரச்னைகள் கூட சரியாகிவிடும். ரத்த ஓட்டமும் சீராகிறது. இதய நோய் வராமல் தடுக்கிறது. இதில் புரதச் சத்து அதிகம் உள்ளதால் கர்ப்பப்பை பிரச்னை தீரவும், தாய்ப்பால் சுரக்கவும் வழி செய்கிறது. ஒமேகா 3 இதில் உள்ளதால் குழந்தை உண்டாவதற்கும், மார்பகக் கட்டி, கருப்பைக் கட்டி, நீர்க் கட்டி என எதுவும் வராமல் தடுக்கிறது. இவ்வளவு நன்மைகள் உள்ள வேர்க்கடலையை நாம் தினமும் உணவில் பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும். வேர...

இதையெல்லாம் செய்தால் உங்களுக்கு கழுத்து வலி, முதுகு வலி, எதுவுமே வராது !

Image
ஆண், பெண் இருவருக்குமே உடற்கூறு வலிமை மிக முக்கியம். 25 வயதிற்கு மேல் நாம் அனைவரும் குடும்பம், வேலை மற்ற விஷயங்களுக்காக ‘நம் உடலை’ மறந்து போகிறோம். உங்களைப் பார்த்துத்தான் உங்கள் குழந்தை வளர்கிறது. எனவே, நீங்கள் வலிமை உடையவராகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பது அவசியம். வலிகள் இன்றி, எப்போதும் உடலை சீராக வைத்துக் கொள்ள பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்ளவும். நீங்கள் உறங்கும் படுக்கை அதிகக் கடினமாகவோ அல்லது மிகவும் லேசாகவோ இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். காரணம் முதுகு வலி, மூட்டு வலி போன்ற பிரச்னைகளை தவிர்க்க இந்த தேர்வு உதவும். சரியான அளவு தலையணையை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்றவற்றை தவிர்க்கலாம். தூக்கம் மிகவும் முக்கியம். ஆண், பெண் இருவருமே வேலைப்பளு காரணமாக உடல் அசதி, சோர்வு ஏற்படும். சரியான அளவு தூங்கினால்தான் உங்கள் தசை. மூட்டு மற்றும் உடல் சீராக இயங்கும். பெண்கள் நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்வதை தவிர்க்கவும். நீண்ட நேரம் நிற்பதால், உங்கள் மூட்டில் தேய்மானம் ஏற்படுகிறது. இதனால் மூட்டு வலி வருவதைத் தவிர்க்கலாம். எவ்வளவு வேலை இருந்தாலும் உங்களுக்...

ஓய்வுக்குப் பிறகும் எனது காலம் கிரிக்கெட்டில் தான் முடியும் - தோனி ருசிகர பேட்டி !

Image
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தோனி விளையாடத் துவங்கி 15 வருடங்கள் கடந்திருக்கின்றன. உச்சபட்ச புகழையும், மிகக் கடுமையான விமரிசனங்களையும் இந்த 15 வருடங்களில் தோனி எதிர்கொண்டிருக்கிறார். துவக்க காலத்தில் அதிரடியாக விளையாடி, அனைவரின் கவனத்தையும் தன் வசப்படுத்திய தோனி, பின்னர் மெல்ல மெல்ல தனது ஆட்டப் போக்கை மாற்றி அமைத்துக் கொண்டார். இன்றைய நிலையில் வெகு அரிதாக மட்டுமே, அவரிடமிருந்து சிக்ஸர்களையோ அல்லது பவுண்டரிகளையோ நம்மால் பார்க்க முடிகிறது. எனினும், தனது ஆட்ட வகைமை சார்ந்த தெளிவான புரிதல் தோனியிடம் இருக்கிறது. அவர் விரும்பியேதான் இந்த மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டார். இந்திய கிரிக்கெட் அணிக்கு சீரான நம்பிக்கை அளிக்கின்ற ஆட்டம்தான் தேவையே தவிர, எந்த நொடியிலும் விக்கெட்டை பறி கொடுத்து, சூழலை மேலும் சிக்கலாக்குகின்ற ஆட்ட வகை தேவையில்லை என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார் தோனி. போலவே, அதிரடியாக விளையாடுகின்றவர்கள் நீண்ட காலம் கிரிக்கெட்டில் உயிர்ப்புடன் விளையாடும்வதும் சிரமமான செயலாகும். தொடர்ந்து அதிரடியாகவே விளையாடிக் கொண்டிருந்தால், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, உடல் உபாதைகள் உண்டாகவும் சாத்தியம...

நகை கடையில் சீட்டு கட்டறீங்களா? அப்போ கண்டிப்பா இது உங்களுக்குத்தான் !

Image
சிறுதுளி பெருவெள்ளம் சிறுகக் கட்டிப் பெருக வாழ் பணம் பத்தும் செய்யும் என்பதெல்லாம் சேமிப்பை வலியுறுத்தும் பழமொழிகள். ஒவ்வொருவரும் தங்களது ஊதியத்தில் முதல் செலவை சேமிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதைத்தான் நம் முன்னோர்கள் வலியுறுத்தினார்கள். சேமிப்பு என்பது பலவிதம். வங்கிக் கணக்கில் சேமித்து வைப்பது, முதலீடு, தங்கம் வாங்குவது, சீட்டு கட்டுவது என அதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. செலவிட இருக்கும் வழிகளோடு ஒப்பிட்டால் சேமிக்கும் வழிகள் குறைவுதான். ஆனால் அதையெல்லாம் தாண்டி நீங்கள் சேமிக்கிறீர்கள் என்றால் அதற்கு நிச்சயம் பாராட்டுகளும், லைக்குகளும் உண்டு. பெரும்பாலான பெண்கள் தங்கள் வீட்டில் இருக்கும் மசாலாப் பெட்டிகளில் பணத்தை சேமித்து வைத்துக் கொள்வார்கள். அதை வைத்து தங்க நகைகள், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது வழக்கம். இப்படி வீட்டில் வைக்கும் பணத்துக்கு வட்டி கிடைக்காது என்பதால்தான், தங்க நகைக் கடைகளில் சீட்டு சேரும் வழக்கம் ஏற்பட்டது. அவ்வாறு தங்க நகைக் கடைகளில் சீட்டு சேர்ந்து மாதந்தோறும் ஒரு குறிப்பிட்டப் பணத்தை கட்டி வரும் போது, 10 அல்லது 15 மாதங்கள் நிறைவில், நகைக் கடையின் தரப்பி...

பீரியட் அலப்பறைகள் - நக்கலைட்ஸ் யூடீயூப் சேனல் ஒரு பார்வை !

Image
சமூக வலைதளங்களை மீம்ஸ் பக்கங்களும், யூடியூப் சேனல்களும் ஆட்சி செய்யத் தொடங்கிய காலகட்டத்தில் புதிய இந்தியாவோடு இணைந்து பிறந்தது நக்கலைட்ஸ் யூடியூப் சேனல். அரசியலில் தொடங்கி அம்மா, அப்பா, காதல், நட்பு, பைக் அலப்பறைகள் என தொடர்ச்சியாக அலப்ப றைகள் விடியோக்களை வெளியிட்டு இணையதளத்தில் அலப்பறை செய்து கொண்டிருந்த நக்கலைட்ஸ் குழுவினர் மகளிர் தினம் வருவதை முன் னிட்டு 'பீரியட்ஸ் அலப்பறைகள்' என்ற தலைப்பில் புதிய விடியோ ஒன்றை வெளியிட்டு ள்ளனர். அதாவது பெண்களின் மாதவிடாய் குறித்த விடியோவாக இது அமைந்துள்ளது. இந்த விடியோ அம்மா, அண்ணன், தங்கை என மூன்று பேர் அடங்கிய சிறிய நடுத்தர வர்க குடும்பத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. உடன்பிறந்த தங் கைக்கு நாப்கின் வாங்கி வர அண்ணன் மறுக்கிறார் என்பதில் இருந்து இந்த விடியோ தொடங்குகிறது. அதற்கு அம்மா வும் இது பெண்கள் சமாச்சாரம்,  ஆண்களிடம் தெரிவிக் காமல் கலாச்சாரத்தை பேணி காக்கவேண்டும் என்று மகளுக்கு அறிவுரை கூறுகிறார். இதையடுத்து, அந்த பெண்ணே நேரடியாக மருந்தகத்துக்குச் சென்று வாங்க நினைத்தால், அதில் அந்த பெண் எத்தனை இன்ன ல்கள் எதிர்கொள்கிறார் என்பத...

கணவர் வீர மரணமடைந்த 3 மாத்ததில் , தானும் இராணவத்தில் சேர்ந்த வீர பெண்மணி !

Image
இராணுவத்தில் சேர்ந்த பிறகு, உயிர் நாட்டுக்கு, உடல் மண்ணுக்கு என்ற தாரக மந்திரம்தான் ஒவ்வொரு வீரனுக்கும் ஒப்புவிக்கப்படும். அதன்படிதான் மனைவி, குழந்தை, இரத்த சொந்த பந்தங்கள் என அனைவரையும் மறந்து, நாட்டு மக்களின் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு மட்டுமே மனதில் கொண்டு பணி புரிந்து வருபவர்கள் இராணுவ வீரர்கள். இவர்கள் இரவு பகல் பாராது எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபதுவதால்தான் நம்மால் நாட்டிற்குள் , வீட்டிற்குள் நிம்மதியாக தூங்க முடிகிறது. இல்லையெனில் ஒரே இரவில் நம்முடைய நாட்டை அந்நியர்கள் தங்கள் வசம் கொண்டு வந்துவிடுவார்கள். ஆங்கிலேயர்கள் போல அடக்கு முறைகளை ஏவி, கொடுமைபடுத்தி, சுதந்திரத்தைப் பறித்து, எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பரிதாபகரமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம். அப்படிப்பட்ட இராணவ பணியில் இருந்தபோது பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ அதிகாரி உயிரிழந்த ஓராண்டுக்குள், அவருடைய மனைவியும் கடும் சிரமத்திற்குப் பிறகு ராணுவ அதிகாரிக்கான பயிற்சியில் சேர உள்ளார். உத்தரகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த, மேஜர் விபூதி டவுண்டியால், ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்தாண்டு, பிப்., 17ல், ...

ரஜினியை வச்சி செய்ய என்ன காரணம்? உண்மையிலேயே ரஜினி கீழே விழுந்தாரா? MAN VS WILD நிகழ்ச்சியில் என்னதான் நடந்தது?

Image
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சின்ன சின்ன அசைவுகள் கூட இப்பொழுது பெரிதாக கவனிக்கப்பட்டு வருகிறது. அதிமுக, திமுக தலைவர்கள் இறந்த பிறகு, தம்மிழக அரசியலில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அடுத்த ஒரு பவர்புல்லான தலைவர் உருவாகும் வரை இந்த எதிர்பார்ப்பு நீடித்துக் கொண்டிருக்கிறது. அசைக்க முடியாத எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் இருந்ததும், அதன் பிறகு அவர் உடல்நிலை கோளாறால் அவதி பட்டு, கடந்த தேர்தல்களில் அவருடைய கட்சி படுதோல்வி அடைந்ததும் அவரை அடுத்த கட்டத்துக்கு நகர முடியாமல் படி செய்துவிட்ட இந்த வேளையில், அடுத்த ரஜினிகாந்த் மட்டுமே தமிழக அரசியலில் ஒரு பெரிய இடத்திற்கு வர முடியும் என்ற உருவாகிக் கொண்டிருக்கிறது. நிலையற்ற செயல்பாடுகளால் ரஜினி ரசிகர்கள் வருத்தம் ரஜினிகாந்தின் செயல்பாடுகள் சில நேரங்களில் அவநம்பிக்கை தருவதாகவே உள்ளது. இதோ அரசியலுக்கு வருகிறேன் என்று கடந்த 20 ஆண்டுகளாக கூறி வந்தவர் மெல்ல மெல்ல அரசியல் களத்தில் குதிப்பதற்கான ஆயத்த ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போதிலும், கடந்த இரு ஆண்டுகளில் பெரியதாக ஏதும் மாற்றங்களைச் செய்யவில்லை. இருப்பினும் மீடியா விடுவதாக இல்லை. அவ்வப...