Posts

போலி தகவல்களைத் தடுக்க பேஸ்புக்கின் புதிய முயற்சி

Image
பேஸ்புக்கில் உண்மைத் தகவல்களைவிட, போலியான இட்டுக்கட்டி எழுத்தப்பட்ட தகவல்கள் அதிவிரைவில் பரவிவிடுகிறது. மேலும் ஒருவரின் தகவல்களை மற்றவர்கள் அப்படியே காப்பி பேஸ்ட் செய்து பதிவதும் அதிகரித்து வருகிறது. அதுபோன்ற தகவல்கள் மற்றும் செயல்களைத் தடுக்க பேஸ்புக் முயற்சி எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, Machine Learning எனும் தொழில்நுட்பட்பத்தை பயன்படுத்த விருப்பதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது. இத்தொழில்நுட்பத்தின் மூலம் போலி தகவல்கள், நகலெடுக்கப்பட்ட தகவல்கள் போன்றவற்றை மிக எளிதாக கண்டறிந்து தடுக்க முடியும் என ஃபேஸ்புக் பிராடக்ட் மேனேஜர் Tessa Lyons தெரிவித்துள்ளார். மெசின் லேர்னிங் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், காப்பி பேஸ்ட் பதிவுகள், புரளிகள், பொய்யான தகவல்கள் அனைத்தும் குறைந்துவிடும் என ஃபேஸ்புக் நம்புகிறது. Tags: Facebook, New Technology, Machine Learning.

மாணவர்கள் எளிதாக கல்வி கற்க 3D android app

Image
கல்வி என்பது மாணவர்களுக்கு கசப்பாக இருக்க கூடாது. அதை விரும்பி படிக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த கல்வி அவர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். தற்பொழுது உள்ள கல்விமுறை மாணவர்களுக்கு பெரும் சுமையாகதான் இருக்கிறதேயன்றி, அது அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியதாக இல்லை. இந்நிலையை தவிர்க்க "இன்ட்ராக்ட்டிவ்" கல்விமுறையை செயல்படுத்த வேண்டும் என்பது கல்வியலாளர்களின் கருத்து. அப்பொழுதுதான் ஈடுபாட்டுடன் மாணவர்கள் கற்றலை மேற்கொள்வார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை மெல்ல மெல்லதான் கல்வித்துறையில் சிற்சில மாற்றங்களை கொண்டு வந்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் கல்வியை மாணவர்கள் சிரமின்றி கற்றுத்தேற புதிய ஆன்ட்ராய்ட் 3D ஆப் வெளியிட்டுள்ளனர். இது பத்தாம் வகுப்பு மாணவர்கள் கல்வியை எளிதாக பரிந்து படிக்க உதவுகிறது. புரிந்து படிக்கும்பொழுது, படித்தவைகள் அப்படியே மனதில் நிற்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். அதற்கு தகுந்தாற் போல பாடப்புத்தகங்கள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள படங்களை இந்த ஆப் மூலம் ஸ்கேன் செய்திடும்பொழுது, 3D வடிவத்தில் படங...

போட்டோஷாப் செய்யப்பட்ட படங்களைக் கண்டுபிடிக்க

Image
இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவது போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள். சமூக வலைத்தளங்களில் இதுபோன்று போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள் அதிக பிரபல்யம் அடையும். அவ்வாறு PhotoShop செய்யப்பட்ட படங்களை கண்டறிவது மிக கடினம். ஆனால் அதுபோன்ற படங்கள் ஏற்படும் தாக்கம் அதிகம். அதனால் தற்பொழுது அப்படி போட்டோஷாப் செய்யப்பட்ட படங்களைக் கண்டுபிடிக்க புதிய நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தவிருப்பதாக "Adobe" நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரிஜினல் படங்களைவிட, போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாலேயே, இதுபோன்ற நுண்ணறிவுத் தொழிநுட்பம் போட்டோஷாப்பில் வெளிவரவிருப்பதாக அடோப் நிறுவனம் தெரிவித்துள்ளது. Tags: Photoshop, New Technology, Photoshoped Pics.

கண்கள் மற்றும் உடலை பாதிக்காத வகையில் ஒரு கம்ப்யூட்டர் அறையை எப்படி அமைப்பது? | HOW TO BE A COMPUTER ROOM

Image
உடல் நிலையை பாதிக்காத வண்ணம் ஒரு கம்ப்யூட்டர் அறை எப்படி உருவாக்கப்பட வேண்டும்? எப்படி இருந்தால் கண்கள் மற்றும் உடலுக்கு நல்லது என்பது பற்றி இக்கட்டுரையில் விரிவாக தெரிந்துகொள்வோம். ஒரு கம்ப்யூட்டர் அல்லது பல கம்ப்யூட்டர்களை பயன்படுத்தக் கூடிய அறை நல்ல விசாலமாக, காற்றோட்டம் மிக்கதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதிக நேரம் உட்கார்ந்து அந்த அறையில் எந்த உடல் நிலை பிரச்னை இல்லாமல் பணி புரிய முடியும். ஆனால் பெரும்பாலான வீடுகளில் அப்படி இருப்பதில்லை. ஒரு பொது அறையிலோ அல்லது, ஹாலிலோ உட்கார்ந்து பணி புரிகின்றனர். அது அவர்களது உடல் நலனுக்கு மட்டும் அல்லாமல், வீட்டிலிருப்பவர்களையும் பாதிக்கும். கம்ப்யூட்டர் அறை எப்படி இருக்க வேண்டும்? கம்ப்யூட்டர் அறை நல்ல காற்றோட்டமான இடமாக இருக்க வேண்டும்.  போதுமான அளவிற்கு வெளிச்சத்தை தரக்கூடிய விளக்குகள் இருக்க வேண்டும். சன்னல்களுக்கு எதிர்ப்புறமாக கணினி மேசை அமைந்திருக்க கூடாது. சன்னல்களின் வெளிச்சம், மின் விளக்குகளின் வெளிச்சம் போன்றவை கம்ப்யூட்டர் திரை மீதோ அல்லது உங்களின் மீதோ பட்டு எதிரொளிக்கும் வகையில் இருக்க கூடாது. கம்ப்யூட்டர் திரையிலிருந்து ...

இணையதளங்களின் நம்பகத்தன்மையை அறிந்துகொள்ள

Image
இணையம் ஜெட் வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி ஆச்சர்யபட வைத்தாலும், இடையிடையே சில தகவல்களை படித்து அதிர்ச்சி அடைய வேண்டியிருக்கிறது. திடீரென வித்தியாசமான பெயரில் வைரஸ் பரவி கம்ப்யூட்டரை முடக்குவது, நம்மை அறியாமலேயே நம்முடைய தகவல்களை அறிந்து வைத்துக்கொள்வது, வங்கி கணக்கு விபரங்கள் போன்றவற்றை திருடுவது என்பது போன்ற தகவல்களால் "இன்டர்நெட்" ல் ஆபத்தும் அதிகம் என்பதை உணர முடிகிறது. எனவேதான் நாம் அணுகவிருக்கும் இணையதளத்தின் நம்பகத்தன்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.  சரி, இணையத்தை அணுகி ஒரு வலைத்தளத்தை பார்வையிடும்பொழுது அது நம்பகமானதுதானா என்பதை எப்படி அறிந்து கொள்வது? 1. ஒரு இணையதளம் நம்பகமானதுதானா என்பதை அட்ரஸ் பாரில் https: என பச்சை நிறத்தில் இருந்தால் நம்பகமானதுதான் என்பதை அறிந்துகொள்ள முடியும். 2. VriSign, TRUSTe, McAfee Secure போன்ற அங்கீகார வழங்குநர்களால் வழங்கப்பட்ட நம்பிக்கை முத்திரை (Trust Seal) இருந்தால், அவ்விணையத்தளம் பாதுகாப்பானதுதான் என்பதை அறிந்துகொள்ள முடியும். 3. நீங்கள் பார்வையிடும் வலைத்தளத்தின் உள்ளடக்கம், அந்த இணையதளத்தின் தரத்த...

பவர் பாய்ண்ட்டினை வீடியோவாக மாற்றுவது எப்படி?

Image
Update: PowerPoint To Video மாற்றுவது மிக சுலமாகிவிட்டது. பவர்பாய்ண்டிலேயே அந்த வசதி வந்துவிட்டது. PowerPoint 2010  நீங்கள் பயன்படுத்தினால், பவர் பாய்ண்ட் ப்ரசண்ட்டேசன் உருவாக்கிவிட்டு, அதை அப்படியே சேமித்து விடவும். அதன் பிறகு ஃபைல் சென்று  Save & Send கிளிக் செய்து Create a Video என்ற வசதியை செயல்படுத்துவதன் மூலம் வீடியோவாக சேமித்து விடலாம். இந்த வீடியோ இன்னும் உங்களுக்கு சுலபமாக பவர்பாய்ண்ட்டை எப்படி வீடியோவாக மாற்றுவது என கற்றுக்கொடுக்கும் என நம்புகின்றேன். எப்படி பவர்பாய்ண்ட் டூ வீடியோ கன்வர்ட் செய்வது? மைக்ரோசாப்ட்டின் ஆபீஸ்(MS Office) தொகுப்பில் உள்ள பவர்பாய்ன்ட் செயலியை நம்மில் பலர் பயன்படுத்தி வருகிறோம். எளிதாக தகவல்களை தொகுத்து animation வேலைகளுடன் வழங்க இந்த பவர்பாய்ண்ட் நமக்கு உதவுகிறது. இதிலுள்ள  பயன்பாடுகள் ஏராளமானவை. ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பவர்பாய்ண்ட்டை அதிகம் பயன்படுத்துகிறார்கள். வகுப்புகளில், கருத்தருங்குகளில் என எல்லாவற்றிலும் இந்த பவர்பாய்ண்ட் ப்ரசண்ட்டேஷனைப் பயன்படுத்...

முன்னணி பிரௌசர் Maxthon Browser Specs and Features

கம்ப்யூட்டரிலிருந்து இணையத்தை அணுக உருவாக்கப்பட்ட ஒப்பற்ற ஒரு புரோகிராம் தான் BROWSER. பிரௌசர்கள் பல வகை உண்டு. அவற்றில் சிறந்தாக கருதபடுபவை  Chrome  மற்றும் Firefox.  ஆனால் பிரௌசர்களில் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட சிறப்பியல்களைப் (Features) பெற்றுள்ளன. அந்த வகையில் மற்ற பிரவுசர்களைக் காட்டிலும் அரிய வசதிகளை கொண்ட ஒரு முதன்மையான வலை உலவி  Maxthon Browser . இதன் தாரக மந்திரமாக இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன. Super-Fast Dual Rendering Engines, Displaying pages in no time Smart switch between Webkit & Trident, balance both read speed and multi-element page content Super-Clean Web with no ads, no more annoying disturbing. Kill floating window, banner, and pop-up ads. Give you a smooth browsing experience Super-Clean Web with no ads, no more annoying disturbing. Kill floating window, banner, and pop-up ads. Give you a smooth browsing experience மேக்ஸ்தான் பிரௌசரில் அப்படி என்ன சிறப்பு வசதிகள் உள்ளன? எந்த வகையில் இது சிறந்த பிரௌசராக உள்ளது என்பது போன்ற தகவல்களை ...