Posts

சிறார்களுக்கு இணைய பாதுகாப்பு வழங்கும் புரோகிராம் !

Image
இணையத்தில் நல்லது கெட்டது இரண்டும் உண்டு.  நல்லதைவிட கெட்டது விரைவாக பலரை சென்றடைந்துவிடும். இந்நிலையில் சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இணையத்தைப் பயன்படுத்துகையில் கட்டாயம் பாதுகாப்பு தேவை. இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு (World Internet Users) வயது கட்டுப்பாடு இல்லை என்பதால் யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தும் நிலை தற்பொழுது உள்ளது. இதனால் பல ஆபத்துகள் தொடர்ந்து கொண்டுள்ளன. குறிப்பாக பள்ளி செல்லும் சிறுவர்கள் - மாணவர்கள்  பாதை மாறி போவது அதிகரித்து வருகிறது. இதனால் அவர்கள் மோசமான பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. சிறார்களுக்கு இயல்பாகவே கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகமாக இருக்கும். இணையத்தை பயன்படுத்துகையில் கூடுதலாக இருக்கும். மேலும் மேலும் அவர்கள் இணையத்தில் நேரம் செலவழிக்கும்போது  தான் பிரச்னையின் வீரியம் அதிகமாகிறது. காரணம், அவர்களின் மனதை கெடுக்கும் பல விஷமத்தனமான இணையத்தளங்கள், விளம்பரங்கள். அவைகள் என்ன என அவர்கள் தேடும்போது, இயல்பாகவே அதுகுறித்த ஆர்வமும் ஒட்டிக்கொள்கிறது. இணையத்தில் பல்கி பெருகிவரும் ஆபாசத் தளங்கள், வன்முறையைத் தூண்டும் வ...

இன்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருள் Avast Pro 6

Image
Avast Internet Security இணையம் மற்றும் Removable device சாதனங்களின் வழியே வைரஸ் பரவும் முறையை தடுக்கும் ஒரு Active Anti Virus Software அவாஸ்ட் புரோ 6. இந்த மென்பொருள் புதிய பதிப்பைக் கண்டுள்ளது. புத்தம் புதிய Avast Pro 6 மென்பொருள் உங்கள் கணினியை வைரஸ், மால்வேர், ப்ரீவேர், ஆட்வேர்களின் (malware, freeware, adware, virus) தாக்கங்களினின்று பாதுகாக்கிறது. இதனால் உங்களது கணனியில் உள்ள டேட்டாக்கள் பாதுகாப்பபடுகிறது. புதியதாக வந்திருக்கும் வைரஸ்கள் உங்களது கணனியில் முக்கியமாக கோப்புகளை தாக்கி, சிதைக்காமல் இருக்க அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் மென்பொருள் (Avast Internet Security) மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றுகிறது. மிகச்சிறந்த வைரஸ் மென்பொருள் இதுவென்று பல்வேறு Award களை பெற்றுள்ளது. இது மிகச்சிறந்த Firewall மற்றும் Anti-Spam தீர்வை தருகிறது. விண்டோஸ் இயங்குதளங்களை அடிப்படையாக்கஃகொண்டு இயங்கும் அனைத்து கணினிகளுக்கு ஏற்றது இது. 1. ஆன்ட்ராய்ட் சாதனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் Anti-Virus-Software Anti-Rootkit Protection மூலம் மிகச்சிறந்த கணினி பாதுகாப்பை அளிக்கிறது. புதிய SPAM மற்றும் Fraudullent மெசேஜ்க...

சாம்சங் ஸ்மார்ட்போன் GamePad

Image
Samsung Galaxy Smartphone GamePad தொழில்நுட்ப உலகின் சூப்பர் ஸ்டாரான சாம்சங் நிறுவனம் புதிய கேம்பேட் ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் கேம்பேட்டில் சாம்சங் கேலக்சி சாதனங்களை இணைக்க முடியும். 4 அங்குலம் முதல் 6.3 அங்குல திரைகளைக் கொண்ட சாம்சங் கேலக்சி ஸ்மார்ட்போன்களை இதில் இணைத்து செயலாற்ற முடியும். கேம் பிரியர்களுக்கு நிச்சயமாக இது ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் சாம்சங் டச்ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்களை HDMI Cable அல்லது AllShare Screen Mirroring பயன்படுத்தி, தொலைக்காட்சித் திரையிலும் கேலக்சி சாதனங்களை இணைத்து பயன்படுத்த முடியும். GamePad- ஐ Samsung Smartphone -ல் இணைக்கும் முறை: ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் புளூடூத் வசதியிருக்கும். ப்ளூடூத்தை இயக்கி கேம்பேட்டை இணைத்துக்கொள்ள முடியும். கேம்பேட் சப்போர்ட் செய்யும் OS மற்றும் கேலக்சி சாதனங்கள்: ஆண்ட்ராய்ட் 4.1 முதன்  4.3 வரை பயன்படுத்தப்படும் அனைத்து சாம்சங் கேலக்சி ஸ்மார்போன்கள் (Samsung GAlaxy Note 3, Galaxy S4, Galaxy Note 2, Galaxy Note 3). இவற்றினை NFC Tag மூலம் GamePad னை இணைக்க முடியும். விரைவாக விளையாட்டினை அணுக கேம்...

Samsung Galaxy Grand II சிறப்பம்சங்கள்

Image
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஸ்மார்ட் போன்கள் Galaxy Note 3 மற்றும் Galaxy S4. இந்த போன்கள் ஹார்ட்வேர் , பயனுள்ள சிறப்பம்கள் மற்றும் வாங்க கூடிய விலையில் இருந்ததால், விற்பனையில் முன்னணி வகித்தன. அந்த வகையில் 5 அங்குல திரையுடன் கூடிய Galaxy Grand ஸ்மார்ட் போனையும் கடந்த வருடம் வெளியிட்டது. தற்பொழுது சாம்சங் நிறுவனம் இந்தியாவில் Galaxy Grand 2 என்ற Smartphone னை வெளியிட திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் இப்போனில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களை சாம்சங் நிறுவனம் வெளியிட்டது. இதில் மேம்படுத்தப்பட்ட ஹார்ட்வேர், HD Resolution கூடிய 5.25 அங்குல திரை, 1080 வீடியோ பிளேபேக், 8ஜிபி ROM, 1.5ஜிபி ராம் மெமரி, 8 மெகா பிக்சல் கேமரா, 2 MP முன்புற கேமரா, 1.2Ghz processor, 2,600 mAH பேட்டரி ஆகியனவும் இடம்பெற்றுள்ளன. குறைந்த எடை மற்றும் நல்ல சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த போன் விரைவில் இந்தியாவில் வெளியிட சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இப்போனின் விலை 20,000 ரூபாயாக இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. Samsung Galaxy Grand 2 Main Specifications 5.25-inches screen with HD resolution 1.5 GB RAM micro SD c...

CCleaner புதிய பதிப்பு Download செய்ய

Image
சிகிளீனர் (Ccleaner) என்பது உங்கள் கம்ப்யூட்டர் சுத்தம் செய்யப் பயன்படும் ஒரு மென்பொருள். இலவசமாக கிடைப்பதால் இம்மென்பொருள் ப்ரீவேர் (Freeware) என அழைக்கபடுகிறது.   மென்பொருளின் பயன்கள்:  இம்மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்குகிறது. பயன்படாத கோப்புகளையும் நீக்கி, உங்களது விண்டோஸ் கணினியை வேகமாக செயல்பட வைக்கிறது.  அதேபோல உங்களது இன்டர்நெட் ஹிஸ்டரியை நீக்கி (removes internet history), பிரௌசர் வேகத்தை அதிகப்படுத்துகிறது. கூடுதலாக ரெஜிஸ்ட்ரி கிளீனர் (Registry Cleaner) வசதியும் இதில் உள்ளது.  ரெஜிஸ்ட்ரி கிளீனர் வசதியின் மூலம் உங்களது கணினியின் ரெஜிட்ரி கோப்புகளில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்கி உங்களது கணினி வேகமாக இயங்க (Run fast computer) உதவி செய்கிறது.  இது ஒரு இலவச மென்பொருள். மேலும் இதில் தொல்லைதரும் Spyware, Adware போன்ற புரோகிராம்கள் எதுவும் இணைக்கப்படவில்லை என்பது மகிழ்ச்சி தரும் விடயம்.  இப்புரோகிராம் கீழ்க்கண்டவைகளை சுத்தப்படுத்துகிறது. (Cleans the Following) Internet Explorer Firefox Google Chrome Opera Safari Windows - Recycl...

பெண்களுக்கு பாதுகாப்பளிக்கும் ஸ்மார்ட்போன்

Image
India’s First Safety Smartphone  iBall Uddaan Designed for Females ஐபால் நிறுவனம் பெண்களுக்கு பாதுகாப்பளிக்கு ஸ்மார்ட்போன் Smartphone for womens ஒன்றினை வெளியிட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்துடன் with new technology வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதில் SoS என்ற புதிய பட்டன் இடம்பெற்றுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பட்டனை அழுத்தும்பொழுது சுற்றி இருக்கும் மக்களுக்கு கேட்கும் வகையில் சைரன் (Siren) ஒலி எழுப்பும்.  அதே சமயத்தில் ஐந்து முக்கியமான எமர்ஜென்சி எண்களுக்கும்  மேசேஜ் சென்றுவிடும். அத்தோடு அவர்களுக்கும் இருக்கும் லோகேசனையும் Geo Codes உடன் பேஸ்புக்கில் அப்டேட் செய்துவிடும். இந்த நிகழ்வு மூன்றுமுறை தொடர்ந்து நடைபெறும்.  அதாவது SOS பட்டனை அழுத்தியவுடன்  Siren=>SMS=>Calls என்ற வகையில் மூன்று முறை தொடர்ச்சியாக இந்நிகழ்வு இந்த ஸ்மார்ட் போன் மூலம் நடந்துவிடும்.  இனி இரவு நேரப் பணி முடித்து வருபவர்கள், ஓவர் டைம் செய்து விட்டு வெளிவரும் பெண்கள் என அ...

வாட்ஸ்அப் மேசேஜிங் அப்ளிகேஷன் - ஒரு பார்வை

Image
வாட்ஸ்அப் என்றால் என்ன?  வாட்ஸ்அப் என்பது ஒரு ஸ்மார்ட் போனில் பயன்படுத்தும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மெசேஜிங் அப்ளிகேஷன். இதன் மூலம் எஸ்.எம்.எஸ், வீடியோக்கள், குரல்வழி செய்திகள் (Audio Message), லிங்ஸ் எனப்படும் இணைய சுட்டிகள் போன்றவற்றை ஸ்மார்ட்போன் மூலம் அனுப்ப முடியும்.  குறுஞ்செய்தி அனுப்புவதற்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட இந்த அப்ளிகேஷன் மூலம் மேற்குறிப்பிட்ட அனைத்தையும் செயல்படுத்த முடியும். வாட்ஸ்அப் அப்ளிகேஷனை கண்டுபிடித்தவர்கள்:  பிரைன் அக்டன் மற்றும் ஜேன் கோம் என்ற இருவர் இணைந்து கண்டுபிடித்ததுதான் இந்த அப்ளிகேஷன். இவர்கள் இருவரும் பிரபல யாஹூ நிறுவனத்தில் பணியாற்றியவர்கள்.  எந்தெந்த நிறுவன சாதனங்களில் வாட்ஸ் அப் பயன்படுத்தலாம்? தற்பொழுது வெளிவந்துள்ள அனைத்து வகையான ஸ்மார்ட்போன்களிலும், ஆப்பிள், பிளாக்பெர்ரி, ஆண்ட்ராய்ட், விண்டோஸ், சிம்பியன் இயங்குகளில் செயல்படும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் இந்த வாட்ஸ் அப் பயன்படுத்தலாம்.  மேசேஜ் சேவைக்காக தொடங்கப்பட்ட அந்த அப்ளிகேஷன் மூலம் 40 கோடிக்கும் அதிகமான மக்கள் மேசேஜ்களை அனுப்பி பெறுகின்றனர். இந்த அப்ளிகேஈ...