Posts

தவறுதலாக அழித்த கோப்புகளை மீட்கப் பயன்படும் மென்பொருள்

Image
வணக்கம் நண்பர்களே...! நலமா.? கடந்த காலங்களை நினைக்க நினைக்க..ஒரு நமட்டு சிரிப்புதான் வருகிறது. காரணம் உலகம் அழியப் போகிறது என படித்த அறிஞர்கள் முதல் பாரமர்ர்கள் வரை அனைவருமே ஒருமனதாக நம்பி, ஒருவித பயத்துடனும், படப்படப்புடனும் இருந்துகொண்டிருந்தனர்.  ஒருவழியாக அவர்கள் குறிப்பிட்ட நாளும் கடந்துபோய்விட்டது.. இறுதியாக வெறும் கட்டுக்கதை என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. இடைப்பட்ட இந்த காலத்தில் உலகம் அழிந்துவிடும் என்று ஒரு சிலர் செய்த பைத்தியக்காரத் தனங்களை நினைத்தால்தான் சிரிப்பு வருகிறது.. சரி.. பதிவிற்கு வருவோம்..  என்னதான் கணினியில் கெட்டிக்காரர்களாக இருந்தாலும் அவர்களையும் அறியாமல் சில தவறுகளை செய்துவிடுவார்கள்.  இது மனித இயல்பு.. தவறுதலாக ஒரு கோப்பை அழித்துவிட்டு, மீண்டும் அதை மீட்கும் முயற்சியில் ஈடுபடுவோம். அவ்வாறு மீட்கும் முயற்சியில் தோல்வி அடைந்துவிட்டால் பயங்கரமான டென்சன் ஏற்படும்.  வீட்டில் பிள்ளைகள் கணினியில் விளையாடும்பொழுது தவறுதலாக நாம் வைத்திருக்கும் கோப்புகளில் கைவைத்துவிடுவார்கள். இவ்வளவுநாள் இங்கேதானே வைத்தேன்.. ஆனால் கோப்பைக் காணவில்லையே என்று க...

கணினியில் 50 பிரச்னைகளைத் தீர்க்கும் மென்பொருள்

Image
வணக்கம் நண்பர்களே.. சந்தித்து நீண்ட நாட்களாகிவிட்டது.. எனக்கும் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற விருப்பமே. என்றாலும் அதிக பணிச்சுமை காரணமாக எழுத முடிவதில்லை.. பதிவிற்கு வருவோம்... நண்பர்கள் விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7, விண்டோஸ் எக்ஸ்பி என அனைத்து இயங்குதளங்ளையும் பயன்படுத்தியிருப்பீர்கள்..! இவற்றில் இணைய இணைப்பு கொண்ட கணினிகள் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை, வைரஸ், மால்வேர், ஸ்பைவேர் (Virus, Malware, Spyware) ஆகியவைதான். கணினியில் ஏற்படும் பொதுவான சில பிரச்னைகள்:  1. Windows Explorer, 2. Internet Connection Problem, 3. Media Player, 4. Explorer.exe Problem, 5. Recycle Bin, 6. Disk Drive Problem, 7. Auto Run Problem கூடவே சில செட்டிங்ஸ் (Settings Problems) பிரச்னைகளும் வரும். இதுபோன்று கணினியில் ஏற்படும் 50 வகையான பிரச்னைகளை மற்றவர்கள் துணையின்றி நாமே சரி செய்ய முடியும். ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம் நண்பர்களே.. இதுபோன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரச்னைகளை சரிசெய்ய பயன்படுகிறது ஒரு சிறிய மென்பொருள். WinFix என்ற இந்த Freeware மூலம் விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்னைகளை மிகச...

ஆட்டம் ஆடி கேட்டு மகிழ அழகிய MP3 ப்ளேயர்கள்

Image
இளமைத்துள்ளலுடன், இனிமையாக இசைகேட்டு ஆடிப் பாடி மகிழ இன்று எத்தனையோ எலக்ட்ரானிக் சாதனங்கள் வந்துவிட்டன. என்றாலும் MP3 Player கள் அதற்கென ஒரு தனி இடத்தையே தக்க வைத்துக் கொண்டுள்ளன. இளைஞர்களையும், மற்றவர்களையும் கொள்ளை கொண்டுள்ள MP3 Player களைப் பற்றிய ஒரு தொகுப்பினை இங்கு பார்ப்போம். ஆப்பிள் ஐபோடு ஷஃபில்: இது 2GB மெமரி வசதி கொண்டது. தொடர்ச்சியாக பதினைந்து மணி நேரம் Audio Play Back Time 3.5MM jack கொண்டது. USB Port உள்ளடக்கியதுள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரியுடன் கூடிய இதன் விலை ரூபாய் 3,200 ட்ரேன்ஸன்டு எம்பி - 330 : இது 3GB Memory வசதி கொண்டது. ஒரு இன்ச் திரை ஓலெட் திரை 123x32 பிக்சல் திரை வசதியுடையது. MP2, WMUMATRM-10, WAV, FLC ஆகிய ஆடியோக்களை ஆதரிக்கும் வசதி 3.5 MM jack வசதியுடன் கூட இதன் விலை ரூபாய் 2,295 மட்டமே.. பிலிப்ஸ் கோகியர் ராகா: 4GB Memory வசதிகொண்டது. ஒரு இன்ஞ் LCD SCREEN 123x64 pixels கொண்ட துல்லியமான திரை அமைப்பு MP2, WMA, WAV, FLC ஆடியோ பார்மட் சப்போர்ட் வசதி 2.0 USB Port வசதி லித்தியம் பாலிமர் பேட்டரியுடன் 24 கிராம் எடை கொண்ட இதன் விலை ரூபாய் 2, 795 மட்டுமே ஸெப்ரோனிக்ஸ் ...

Windows 7 - ல் Snipping Tool பயன்படுத்துவது எப்படி?

விருந்தினர் பதிவு (Guest Post) -தங்கம்பழனி வணக்கம் நண்பர்களே..! நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு சந்திக்கிறோம். நான் ஒரு விண்டோஸ் 7 பயனர்.. இதில் பல புதிய வசதிகள் அடங்கியுள்ளன. Windows xp யைவிட மேம்படுத்தப்பட்ட இயங்குதளம் என்பதால் பயனர்களுக்கு கூடுதலாக நிறைய விஷயங்களை கொடுத்திருக்கிறது மைக்ரோசாப்ட்... அதில் ஒன்றுதான் snipping tool. இதைப் பற்றி ஒரு பார்வைப் பார்ப்போம். சாதாரணமாக பதிவர்கள் ஒரு பதிவை எழுதிய பிறகு, அப்பதிவிற்கான படங்களை Screen Shot எடுத்து பதிவினிடையே பயன்படுத்துவார்கள்.. Screen Shot எடுக்க பல மென்பொருள் இருக்கின்றன. கணினியிலே Print Screen அழுத்தி, அதை ஏதாவது ஒரு Image Editing Software உதவியுடன் சேமித்து பயன்படுத்துவது ஒரு முறை. எந்த ஒரு மென்பொருள் துணையில்லாமலேயே Screen Shot எடுக்க  உங்கள் Windows 7 லேயே ஓர் அற்புதமான வசதியை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது Microsoft.  Screen shot எடுக்க Windows 7 - snipping tool பயன்படுத்துவது எப்படி?  உங்கள் கணினியில் All Programs==>Accessories==> snipping tools செல்லுங்கள். உடனே  snipping tools க்கான விண்டோ தோன்றும்....

கணினியில் ஷார்ட்கட் ஐகான் அமைக்க இலவச மென்பொருள்...

Image
கணினியை விரைவாக கையாள பல வழிகள் உள்ளது. அவற்றில் ஒன்றுதான் கணினி பயன்பாடுகளுக்கான Shortcut (சுருக்குவழி படங்கள்) அமைப்பது. சுருக்குவழி படங்கள் அமைப்பதன் மூலம் அந்த பயன்பாட்டை நாம் ஒரே கிளிக்கில் அணுக முடியும். கணினியில் Desktop Shortcut Icon களை உருவாக்குவதற்காக Handy Shortcuts மென்பொருள் பயன்படுகிறது. Handy Shortcuts என்ற இந்த மென்பொருள் மூலம் Lock WorkStation, Switch Account. Shutdown, Restart, Log Off, Hibernate, Show Desktop, Uninstall Programs, Device Manager, Security Center, Windows Defender, Windows DVD maker, Flip 3D, Launch Screen-saver, Disable Windows Firewall, Enable Windows Firewall, Clear Clipboard, Connect to Internet, Safely Remove Hardware and a Master Control Panel ஆகிய பயன்பாடுகளுக்கு குறுக்குவழி (Shortcut Incon)  களை அமைத்து பயன்பெறலாம். DOWNLOAD HANDY SHORTCUT MAKER SOFTWARE http://www.thewindowsclub.com/downloads/HandyShortcuts.zip மேற்கண்ட இணைப்பின் வழி சென்று இந்த Shortcut Icon Creator -தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளலாம். இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமே...

உங்கள் மொபைல் போன்களுக்கான இலவச சாட்டிங் மென்பொருள்கள்

Free chatting software for your mobile phones  மொபைலில் சாட்டிங் செய்வதற்கு பல்வேறு விதமான மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் இலவசமாக கிடைக்கக்கூடிய தரமான சாட்டிங் மென்பொருள்களைப் பற்றி தெரிந்துகொள்வோம். இந்த மென்பொருள்களைப் பயன்படுத்தி TEXT CHAT, VOICE CHAT செய்யலாம். இலவசமாக கிடைக்கக்கூடிய இந்த மென்பொருள்களை தரவிறக்கி, உங்கள் மொபைல்களில் நிறுவிப் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதால், உங்களுக்கு தொலைபேசி சேவையை வழங்கும் நிறுவனங்கள் GPRS Payment மட்டுமே வசூலிக்கும். இந்த Chatting Software துணையுடன் நீங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்களோடு எளிதாக தொடர்புகொண்டு பேச முடியும். அல்லது எழுத்து வழி உரையாடல்களை மேற்கொள்ள முடியும். அவர்கள் இந்தியாவிலோ, அல்லது வெளிநாடுகளிலோ இருந்தாலும் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, கருத்துகளை, எண்ணங்களை பகிர்ந்துகொள்ள முடியும். தற்போது வெளிவந்துள்ள புதிய தொழில்நுட்பமான 3G அல்லது அதற்கு மேற்பட்ட வசதிகளையுடைய செல்போன்களை நீங்கள் பயன்படுத்தினால் இந்த வசதிகளை, குறிப்பாக குரல்வழி தொடர்புகளை(Voice Chatting) எளிமையாக செய்து முடிக்க முடியும...

கேம் உருவாக்கிட உதவும் மென்பொருள்

Image
மைக்ரோசாப்டின் புதிய மென்பொருள் - Microsoft's new software உலகின் மிக பிரபலமான மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் தனது புதிய மென்பொருளை அறிமுகம் செய்திருக்கிறது. கம்ப்யூட்டர் கற்றுக்கொள்வதற்கு முன்பே, அதில் இருக்கிற கேம்சைகளைத்தான் நாம் விரும்பியிருப்போம். இது சிறுவயதில் ஏற்படும் ஒரு அதீத ஆர்வம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் சில சமயம் விரும்பி விளையாடுவது Computer Games கள்தான். Computer Game கள்தான் விளையாட வேண்டுமா? விளையாடுபவர்களே அந்த கேம்களை உருவாக்கினால் என்ன? என்று யோசித்து செயல்படுத்தியன் விளைவுதான் தற்போது மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த கேம்ஸ் உருவாக்கும் மென்பொருள். இந்த மென்பொருளைக் கொண்டு நீங்களே கேம்ஸ்களை உருவாக்க முடியும்.  இந்த மென்பொருளுக்கு KODU என பெயரிட்டிருக்கின்றனர். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி நீங்களே கேம்ஸ் உருவாக்கலாம். இதற்கு உங்களுக்கு எந்த ஒரு கணினி மொழியும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை... சாதாரணமானவர்களும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி computer Games களை உருவாக்கலாம். அவ்வளவு எளிமையான செயல்முறைகள் அடங்கியுள்ளது. தற்போது படிக...