17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கிளப்பிய சாயா சிங் ! வைரல் வீடியோ உள்ளே !!!

மன்மத ராசா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து, பிரபலமான பாடலாக இன்று வரை இருந்து வருகிறது. தனுஷ், சாயா சிங் நடித்த அந்த பாடல் அன்று மிக பிரபலம். எந்த டிவியை எடுத்தாலும் அந்த பாடல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும். FM Radio , தனியார் தொலைக்காட்சிகள் Youtube என எங்கு பார்த்தாலும் அந்த பாடல் தான். அதன் பிறகு ஒரு சில படங்களில் மட்டும் நடிக்க சாயா சிங்கிற்கு பட வாய்ப்புகள் குறைந்து போனது. என்றாலும், அவர் தன்னுடைய பிசினசில் கவனத்தை செலுத்தி வந்தார். இந்நிலையில் டான்ஸ் மாஸ்டர் சிவ சங்கர் உடன் "மன்மத ராசா" பாடலுக்கு டான்ஸ் ஆடி பட்டையை கிளப்பி இருக்கிறார். தினா இசை, ஃபாஸ்ட் பீட் நடனம் என இளைஞர்களைக் கவர்ந்த இந்தப் பாடலுக்கு 17 ஆண்டுகளுக்கு பின்னர் சிவசங்கர் மாஸ்டருடன் மீண்டும் இணைந்து நடனமாடியுள்ளார் சாயா சிங். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் நடிகை சாயா சிங், அனைவருக்கும் என்னுடைய பிறந்தநாள் விருந்தாக உங்களுக்கு பிடித்தமான திருடா திருடி படத்தின் பாடல் என்றும் ஒரு வருடத்துக்கு முன்னர் சிவசங்கர் மாஸ்டரை சந்தித்த போது எடுத்த வீடியோ என்றும் பதிவிட்டுள்ளார். அது பழைய வீடியோவ...