காளிதாஸ் சினிமா விமர்சனம்

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பரத், இந்த படத்தில் வேற லெவலில் நடித்திருக்கிறார்கள். கடைசி வரை படத்தின் கிளைமேக்ஸ்/முடிவை கண்டு பிடிக்க முடியாதபடி த்ரில்லர் மூவியாக கொடுத்திருப்பது சிறப்பு. காளிதாஸ் மூவி ரிவ்யூ நடிப்பு - பரத், ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன் தயாரிப்பு - லீப்பிங் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட், இன்க்ரடிபிள் புரொடக்ஷன்ஸ், தினா ஸ்டுடியோஸ் இயக்கம் - ஸ்ரீ செந்தில் இசை - விஷால் சந்திரசேகர் வெளியான தேதி - 13 டிசம்பர் 2019 நேரம் - 2 மணி நேரம் 6 நிமிடம் ரேட்டிங் - 3.5/5 தமிழ் சினிமாவில் இந்த வருடத்தின் அதிகப் படங்கள் வெளியீடாக இந்த வாரம் அமைந்துள்ளது. 9 நேரடி தமிழ்ப் படங்கள் வரை இன்று வெளியாகின்றன. இப்படி அதிகமான படங்கள் ஒரே நாளில் வெளியாகும் போது அவற்றில் எதைப் பார்ப்பது என்ற குழப்பம் வரும். அந்தக் குழப்பத்தையெல்லாம் மீறி இந்தப் படத்தைப் பார்க்கலாம் என நம்பிக்கை கொடுக்கும் படமாக காளிதாஸ் படம் அமைந்துள்ளது. அறிமுக இயக்குனர் ஸ்ரீ செந்தில் தன் முதல் படத்தையே ஆச்சரியப்படும் விதத்தில் கொடுத்திருக்கிறார். த்ரில்லர் படங்கள் என்று சொல்லிக் கொண்டு பல படங்கள் வெளிவரும். ஆனால், அவற்றின் ...